எழுப்புதலின் அவசியமும் எச்சரிப்பின் சத்தமும்

Share this page with friends

எழுப்புதலின் அவசியமும் எச்சரிப்பின் சத்தம் என்னும் இந்நூல் பரந்து விரிந்த வானத்தை உற்று நோக்க உதவும் சிறிய தொலைநோக்கி போன்றது. இந்நூலில் எழுப்புதல் என்னும் தேவ திட்டத்தின் தொடக்கப் புள்ளிகளை தொட்டிருக்கிறார்.

‘ஒன்றுபட்டால் உயிர்மீட்சி’ என்று உரக்க சொல்லி இருக்கிறார், உயிர்மீட்சி தடைகளை பட்டியலிட்டதோடு நின்றுவிட்டாமல் தடைகளை தாண்டும் வழிகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. எழுத்தில் தாகமும் எழுப்புதல் வேட்கையும் இந்நூலின் நிறைவு

Product Price₹ 25.00
Shipping Cost₹ 10.00
david book
புத்தக விவரங்கள்

LanguageTamil
CategoryRevival
Item Weight100g
Paperback123 pages
Dimensions7 x 1 x 5 cms
PublisherYesu Nesikirar Uzhiyangal

ஆசிரியரைப் பற்றி

சுமார் 17 வயது வரை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பிள்ளைகளான கிறிஸ்தவர்களையும் கேலி கிண்டல் செய்து பின்பு கிறிஸ்துவின் அன்பினாலும், அவருடைய சத்திய போதனைகளாலும் தொடப்பட்டார். எப்படியாவது மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை தகர்த்து, தனக்காக தன் வாழ்வையே தந்த தனது ஆத்தும நேசருக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து கிறிஸ்துவின் மாசற்ற தூய அன்பை இந்திய தேசமெங்கும் நற்செய்தியாக அறிவித்து வருகிறார். தீமோத்தேயு வேதாகமக் கல்லூரி மாணவரான இவர் அனேக தரமான தேவா ஊழியர்களிடத்தில் நல்லதொரு ஊழிய பயிற்சிகளை கற்றிருக்கிறார்.

இந்நாட்களில் தேவன் தம்முடைய மகிமையான அபிஷேகத்தாலும் வல்லமை வரங்களினாலும் இவரை நிரப்பி அற்புத சுகமளிக்கும் ஊழியத்திலும், அற்புத விடுதலையாக்கும் ஊழியத்திலும் மற்றும் எழுப்புதல் பிரசங்க ஊழியத்தின் வல்லமையாக பயன்படுத்தி வருகிறார் இன்றைய நாட்களில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரம் மைல்கள் பயனித்து நூற்றுக்கணக்கான திருச்சபைகளில் எண்ணிலடங்கா பிரசங்கங்களை பிரசங்கித்து அதனோடு கூட கிறிஸ்துவுக்கென்று நல்ல சீடர்களையும் உருவாக்கி வருகிறார் இவருடைய கூட்டங்களில் அற்புத சுகத்தையும் விடுதலையையும் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எண்ணிடலங்காதோர்.

தாம் கல்லூரியில் படிக்கும் வயதிலேயே புத்தகத்தின் மீதும் பத்திரிக்கையின் மீதும் நாட்டம் கொண்ட இவர் அப்பொழுது ஆசிய அளவில் புகழ் பெற்ற மாணவர் பத்திரிக்கை தோழி மயிலாடுதுறை ஏ வி சி கல்லூரியின் இளந்தூது என்ற பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கதது. தற்பொழுது ஹோலி கிளப் என்ற இயக்கத்தில் பணித்தள இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் இன்றைய நாட்களில் தென் தமிழகத்தில் சீர்காழி பட்டணத்தின் அருகில் இருக்கும் திருநகரி என்ற குக்கிராமத்தில் தனது தாயாருடன் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இவருக்காகவும் அவருடைய குடும்பத்திற்காகவும் உடன் ஊழியர்களுக்காகவும் தொடர்ந்து நீங்கள் தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.


Share this page with friends