‘ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம்’ – போப் ஆண்டவர் கருத்து

Share this page with friends

ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று போப் ஆண்டவர் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடிகன்,

ஓரின ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உலகமெங்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஒரே பாலின ஜோடிகள் சேர்ந்து வாழலாம் என்று கருத்து கூறி உள்ளார். இந்த கருத்தை அவர் நேற்று முன்தினம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர், “ஓரின சேர்க்கையாளர்கள், ஒரு குடும்பத்தில் இருக்க உரிமை உண்டு. அவர்களும் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்கள் குடும்பமாக இருக்கலாம். யாரும் அவர்களை வெளியேற்றவோ அல்லது பரிதாபப்படவோ கூடாது. நாம் செய்ய வேண்டியதுதெல்லாம், ஒரு சிவில் ஐக்கிய சட்டம் இயற்றுவதுதான்” என கூறி உள்ளார்.

ஓரின ஜோடிகளுக்கு ஆதரவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஆஸ்டின் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “போப் ஆண்டவரின் கருத்து எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. பியுனோஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப் என்ற நிலையில் இது அவரது கருத்தாக அமைந்துள்ளது” என கூறினார்.

நன்றி: தினதந்தி


Share this page with friends