கிறிஸ்தவ உலகின் இன்றைய தேவை!

Share this page with friends

கிறிஸ்தவ உலகின் தேவை!

A. ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியாக்கப்பட்டு இருந்தும், தேவனை காணாதிருந்தும் முதல்தரமான சிறந்தவைகளை காணிக்கையாக படைத்த கொடை வள்ளல்களான ஆபேல்-கள்

B. மழையை தன் வாழ்வில் இதுவரை காணாதிருந்தும் அதில் இருந்து தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்ற பேழை கட்டி கர்த்தர் சொன்ன படியெல்லாம் பேளையை கட்டி முடித்த பொறியாளற்களான நோவா-க்கள்

C. தான் எங்கே போகிறேன் என்று தெரியாது இருந்தும் உன் இனம், தேசம் விட்டு புறப்படு என்று சொன்ன உடனே புறப்பட்ட ஆபிரகாம் போன்ற மிஷனரிகள்.

D. தான் எகிப்திய கல்வியை கற்று தேரினவனாக இருந்தும், சொந்த மக்களின் பாசை அத்தனை தெளிவாக தெரியாது இருந்தும் தன் ஜனங்களோடு பாடுபட தெரிந்து கொண்ட கள்வியாளர்களாகிய மோசே-க்கள்.

E. தனக்கு எல்லா சூழலும் ஒத்து வந்த போதும், வேண்டுமென்றால் நீ என் வஸ்திரத்தையே வைத்து கொள் என்று பாவத்தை விட்டு ஓடின ஞானவான்களான யோசேப்பு-க்கள்

F. எல்லாரும் கோலியாத்துக்கு முன் நடுங்கி பின்வாங்கும் போது இவனை கொன்றால் என்ன கிடைக்கும் என்று கேட்ட தொலை நோக்கு பார்வை கொண்ட தாவீது-க்கள்.

G. ராஜாவின் கட்டளையானாலும் அது பரலோக ராஜாவுக்கு விரோதமானது என்று அக்கினியை துணிந்து ஏற்று கொண்ட விசுவாச வீர்களான சாத்ராக் மற்றும் அவரது நண்பர்களும்

H. தங்கள் தொழிலையே, கிறிஸ்து அழைத்தார் என்று அவருக்காக அவைகளை தூக்கி போட்டு விட்டு அவர் பின்னே வந்த சீசர்களுமே!

I. கல்லெரியே வந்தாலும் வானங்கள் திறக்கப்பட்ட காட்சியை கண்டு தான் உயிரை விட்ட இரத்த சாட்சியான ஸ்தேவான்-க்கள்

J. கிறிஸ்து தான் எனக்கு ஜீவன் மற்றது எல்லாம் எனக்கு குப்பை என்று சொல்லி கிறிஸ்துவின் வைராக்கிய அன்பினால் நிறைந்த பவுல்-க்கள்

அவர்களின் வாழ்வு இன்றும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது! கிறிஸ்துவின் வெளிச்சம் இன்னும் வீசி கொண்டுதான் இருக்கிறது. அதை ஏந்தும் ஒரு விளக்கை அவர் இன்றும் தேடுகிறார்! அது வாலிபனே நீயாக கூட இருக்கலாம்! எழுந்து வா! விரைந்து வா! இது சிந்திக்கும் காலம்! செயல்படும் நேரம்! ஏனெனில் அவர் நமக்காக தன் சொந்த இரத்ததையே தந்தார் என்றால் மற்ற எல்லாவற்றையும் அருளாதிருப்பது எப்படி!

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்தவம் தொலைந்துவிட்டதா?
காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.
தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கே...
கேள்வி: நாம் படைக்கபட்டதின் நோக்கம் என்ன?
78 மணி நேரத்தில் வேதாகமத்தை அனல் பறக்க வாசித்து மூன்று உலக சாதனை படைத்த தமிழ் போதகர் | TCN Media
தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருங்கள்
வாக்காளர்கள் தேர்தலுக்குமுன் யோசித்து பார்க்க வேண்டிய வசனம் இது
1000 ஸ்தோத்திர பலிகள் 1000
Apostolic methods of Church growth
கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்ல...

Share this page with friends