சீனாவில் தேவாலயங்களில் அகற்றப்படும் சிலுவை – வீடுகளில் இயேசு படத்தை நீக்கி கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவு.

Share this page with friends

சீனாவின் சில பகுதிகளில் அதிகாரிகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும், வீட்டில் உள்ள இயேசுவின் படங்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த நிலையில், சில இடங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் உள்ள இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் படங்களை வைக்கச் சொல்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’டெய்லி மெயில்’ தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், அன்ஹுய் ஜியான்ங்சு, ஹேபேய் மற்றும் ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் அதிகாரிகள், தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மாகாணமான ஷாங்ஹியில், இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JULY 22, 2020

நன்றி: NEWS18 TAMIL


Share this page with friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *