தற்போதைய காலத்து Hebrew மொழி கற்று தருகிறோம் என்று சொல்வதில் உள்ள வஞ்சனை.

Share this page with friends

இன்று தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு Hebrew சொல்லி தருகிறோம் என்று சொல்லும் போது மிகவும் கவனம் தேவை ஏனெனில்!

A. ஏற்கனவே நாம் மிகவும் நேர்த்தியாக original மொழியாகிய அராமைக், Hebrew மற்றும் க்ரீக் போன்ற மூல மொழிகளில் இருந்து மிகவும் அர்ப்பணிப்போடு, இலக்கிய நேர்த்தி கொண்டு, தியாகத்தோடு ஆரச்சி செய்து மொழி பெயர்த்து கொடுத்த இந்த அருமையான தமிழ் வேதாகமத்தை சிறு சிறு குறைகளை சுட்டி காட்டி அது மொத்தமாக தவறு என்று கூறி இனி சரியான ஒரு வியாக்கியானம் என்று சொல்லி நம்மை திசை திருப்பும் நோக்கில் நம்மை பெரும்பாலும் குழப்பி விடுகின்றனர்.

B. இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் தவறான உபதேசங்களை, தவறான கொள்கைகளை, தவறான வியாகியானங்களை நம்மை அறியாமல் மொழி கற்று தருகிறோம் என்று சொல்லி உள்ளே புகுத்தி விடுகிறார்கள். எனவே இந்த Hebrew மொழி கற்று தருகிறோம் என்று சொல்பவர்கள் யார் அவர்கள் எந்த உபதேச கொள்கையை சார்ந்தவர்கள் என்று நாம் நிதானித்து கொள்ள முடியவில்லை எனில் முடிவில் வேதாகமம் ஒரு சாதாரண புஸ்தகம் என்று கொள்ள நம்மை அறியாமல் influence செய்வார்கள். ஏற்கனவே அநேக மொழிபெயர்ப்புகள் நம்மை வஞ்சித்து விட்டது. நமது விசுவாசம், நமது உபதேச கொள்கைகளில் நாம் மிகவும் ஜாக்கிரதை கொள்ள வேண்டும் ஏனெனில் நாம் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியினால் ஏவ பட்டு எழுதப்பட்டு உள்ளது என்பதை விசுவாசிக்கிரோம்.

C. பெரும்பாலும் இந்த மொழி கற்று கொடுக்கிறோம் என்று சொல்பவர்கள் Hebrew மொழியை மட்டும் தான் சொல்லி கொடுக்கிறோம் என்று விளம்பரம் கொடுப்பதை நாம் அறிகிறோம். அப்படி வேதாகம வியாக்கியானம் செய்ய கற்று கொடுக்கிறோம் என்றால் Hebrew மட்டும் அன்றி, க்ரீக் மற்றும் latin, Aramaic மொழியையும் சேர்த்து கற்று தரவேண்டும். ஆனால் இவர்கள் மறை முகமாக Hebrew கலாச்சாரம், Hebrew domination மற்றும் Hebrew linguistic influence கொண்டு பெரும்பாலும் நம்மை மறைமுகமாக manipulate பண்ணுகிறார்கள் என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.

D. Hebrew மொழி கற்று கொள்கிறோம் என்று சொல்லி இதை ஒரு ஒரு பிஸினஸ் நோக்கோடு, யூதர்களின் இலுமினியாட்டி பின்ணியத்தில் one world கட்டுப்பாடு அமைப்புகளின் தொடர்பு கொண்டு செயல் படுவதாகவும் அனுமானிக்க படுகிறது. ஏற்கனவே அநேக மொழி பெயர்ப்பு, வேதாகம distribution மற்றும் விற்பனை இன்று அப்படிப்பட்ட தொழில் நிறுவனங்கள் கைகளில் போய் விட்டது என்கிற கருத்துகளும் கிறிஸ்தவ உலகில் காணப்படுகிறது.

எனவே இவைகளை மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். அப்படி என்றால் இவைகளை எப்படி discern செய்வது?

  1. இப்படிபட்ட மொழி கற்று கொடுப்பவர்களின் பின்னணியத்தை கண்டு பிடியுங்கள். அவர்களது நோக்கம், உபதேசம், வாழ்வு முறை போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
  2. அவர்கள் எல்லா வேதாகம மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? என்று கவனித்து பாருங்கள்.
  3. அவர்கள் உங்கள் கைகளில் இருக்கும் தற்போதய பைபிள் சரியில்லை, அதில் நிறைய பிழைகள் இருக்கிறது என்று சொல்லி சரி பண்ணி கொள்ள Hebrew கற்று தருகிறோம் என்றால் வஞ்சனை இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.
  4. Hebrew படித்தால் தான் சத்தியம் புரியும் என்று சொல்லி நிர்பந்தம் செய்தால் புரிந்து கொள்ளுங்கள். வஞ்சகம்.

சத்தியத்தை புரிந்து கொள்ள ஏற்கனவே நமக்கு நல்ல அகராதிகள், lexicon Hebrew மற்றும் greek concordance மற்றும் commenteries தேவைக்கு அதிகமாக மேலும் இலவசமாக வலை தளங்களில் கொடுக்க பட்டுள்ளது. அவைகளை ஒப்பிட்டு பரிசுத்த ஆவியின் துணையோடு ஆராய்ந்து பார்த்தாலே நாம் நமது தியான அறையிலே சொந்த மொழி அல்லது ஆங்கில மொழி அறிவு இருந்தாலே நல்ல முறையில் கற்று கொள்ள முடியும்.

அப்படியென்றால் Hebrew கற்று கொள்ளவே கூடாதா?

கற்று கொள்ளுங்கள் அதில் எந்த தவறும் இல்லை, இன்னும் வேதாகமம் மொழி பெயர்க்க பாடாத எத்தனையோ இந்திய மொழிகள் இருக்கிறது. அவைகளோடு எல்லா வேதாகம மொழிகளையும் சேர்த்து கற்று கொண்டு மொழிபெயர்ப்புக் தரிசனத்தில் இணைந்து கற்று கொள்ளுங்கள். சுவிசேஷம் அறிவிக்க வட இந்திய மொழிகளில் முக்கியமான hindi, சமஸ்கிருதம் போன்ற மொழிகளோடு இணைந்து கற்று கொள்ளுங்கள் அவைகள் இன்னும் பயன் உள்ளதாக அமையும். வேதாகம கல்லூரிகளில் கற்று கொடுக்கிறவர்களாக இருப்பின் OT/NT scholars ஆக இன்னும் திறம்பட தேர்ச்சி பெற உங்கள் நேரத்தை அதில் கொடுங்கள். apologetics மற்றும் scholars debate தத்துவ debate, அறிவியல் debate செய்கிறவர்கள் இருப்பின் அதில் வலு பெற எல்லா வேதாகம மொழிகளை கற்று கொள்ளுங்கள். ஏற்கனவே கற்று தேர்ந்து, தேவைக்கு அதிகமாக கொடுக்கப்பட்ட படைப்புகள் அதிகமாக இருக்கும் போது, இப்படிபட்ட ஒரு மொழி கொள்கையில் கவர்ச்சி கொண்டு, கைகளில் கொடுக்கப்பட்ட வேதாகமத்தில் குறை கண்டு பிடிக்க மொழி திறனை பயன்படுத்தாமல் அதை ஏற்கனவே கைகளில் பெற்று கொண்டதை வலுப்படுத்த எல்லா வேதாகம மொழிகளையும் கற்று கொள்ளுங்கள். அதினால் தேவ ராஜியம் கட்ட படட்டும். கர்த்தர் நாமம் மகிமை அடையட்டும்.

வெறும் Hebrew என்று சொல்லி வன்ஜிக்க படாமல் இருப்போம். ஏனெனில் இதுவும் கடைசிக் கால வஞ்சனை களில் ஒன்று.

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா'வின் பார்வை
மற்ற நாட்களுக்காய்க் விழித்திருக்கும் நாம் அந்த நாளுக்காய் விழித்திருக்கிறோமா?
உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்
OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.
பற்றிக்கொள்ள வேண்டியவை பத்து
சீர்கேட்டின் மலை!
கொரொனாவின் தீவிரம் மாற ஜெபிப்போம்
இயேசுவுக்கு நிகராக மாற விரும்பிய நபருக்கு நடந்த பரிதாப முடிவை பாருங்கள்
இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு
தான்சானியாவில் பரிதாபம் பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல்; 20 பேர் பலி.

Share this page with friends