தேவனுடைய ராஜ்யத்திற்காக உதவாத பணம் இருந்து என்ன?
நூறு கோடி சொத்துகளை உடைய கிறிஸ்தவ தொழில் அதிபர் ஒருவர் மரிக்கிற தருவாயில் தனக்காக பிரார்த்தனை செய்ய போதகரை அழைத்து வரச்சொன்னாராம். வந்த போதகர் அவரிடம் ஐயா கடைசியாக எதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது “ஐயா கோடிக்கணக்கான சொத்துகளை சம்பாதித்தேன் பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்த நான் கர்த்தருக்காக எதையுமே செய்யவில்லையே ஒரு ஆலயம் கூட கட்டிக்கொடுக்கவில்லை ஒரு மிஷனரியை கூட தாங்கவில்லையை என்று அங்கலாய்த்தாரம்” போதகர் கவலைப்படாதீர்கள் என்று ஜெபித்து விட்டு வீடு திரும்பினார்.. அவர் மரித்துப்போனார்.
கர்த்தர் பணம் தந்தால் கர்த்தர் என்னை ஆசிர்வதித்தால் நான் கர்த்தருக்காக அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொன்ன அநேகர் பணம் வந்த உடன் சொத்துகளை வாங்கி குவிப்பதிலும் வாங்கின சொத்துகளை பாதுகாப்பதிலுமே ஆயுசு நாட்களை முடித்து விடுகிறார்கள். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
ஒரு வரையறைக்கு மேல் பண செழிப்பு உள்ள கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் கிறிஸ்தவ தொழில் அதிபர்கள் அல்லது வெளிநாட்டு வாழ் கிறிஸ்தவ தொழில் அதிபர்கள் கிராமங்களை தத்தெடுத்தோ அல்லது அந்த கிராமங்களில் அல்லது நகரங்களில் ஊழியம் செய்யும் ஊழியர்களை தேர்ந்தெடுத்து திருச்சபை மற்றும் ஊழியர் குடும்பம் தங்குவதற்கு குருமனை கட்டிக்கொடுக்கலாமே….
இதனிமித்தம் காலம் காலமாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கர்த்தரின் கிருபை பாதுகாப்பாகவும் அவரின் ஆசிர்வாதங்கள் சுதந்திரமாயும் இருக்கும். ஆமேன்.
David Livingstone.