பிரசங்க குறிப்பு: இல்லை இல்லை

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்: நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. யோசுவா : 1 : 5 சங் : 9 : 10
இந்தக் குறிப்பில் இல்லை இல்லை என்று வார்த்தையை வைத்து இந்தக் குறிப்பை நாம் கவனிக்கலாம்.
- இடறலில்லை
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு. அவர்களுக்கு இடறலில்லை சங் : 119 : 165
- பிசகுவதில்லை
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது: அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை சங் : 37 : 31
- அசைக்கப்படுவதில்லை
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை சங் : 16 : 8
- தள்ளாடுவதில்லை
கர்த்தாவே என்னை நியாயம் விசாரியும் நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்: நான் கர்த்தரை நம்பியிருக்ககிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை சங் : 26 : 1
- மறக்கப்படுவதில்லை
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன்: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கபடுவதில்லை. ஏசா : 44 : 21
- வெட்கபடுவதில்லை
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசியமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்படுவதில்லை. யோவேல் : 2 : 26
- புறம்பேதள்ளுவதில்லை
பிதாவனவர் எனக்கு கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்: என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை யோவா : 6 : 37
இந்தக் குறிப்பில் இல்லை என்ற வார்த் தையை வைத்து சில குறிப்புகளை சிந்தித்து பார்த்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.