பிலிப்பிய சபையின் ஸ்தானதிபதியான எப்பாப்பிரோதீத்து.

Share this page with friends

இவர் பெயருக்கேற்ப கிறிஸ்துவின் அன்பு நிறந்தவராகவும், பவுலினால் விரும்பப்படபட்ட சகோதரனும், உடன் வேலையாளும், உடன் சேவகனாகவும் கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றின ஆனால் இன்றைய பிரசங்கியார்களால் மறைக்கப்பட்ட ஒரு அற்புத புதிய ஏற்பாட்டு ஆளுமை ஆவார் இவர் பிலிப்பி சபையின் போதகர் ஆவார். இவரது வாழ்வின் கிறிஸ்துவின் சிந்தை நம்மிடம் நிச்சயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

A. பவுலின் குறைச்சலில் உதவி செய்தவர்.

பவுல் ரோம சிறைச்சாலையில் கிட்டத்தட்ட AD 61 இல் சுவிசேஷத்தின் நிமித்தம் அடைக்கப்பட்ட போது தனது காரியம் பாராமல் பவுலின் காரியம் நோக்கி, தான் நடத்தி வந்த சபையை சகோதரர் வசம் ஒப்படைத்து அதே சபையால் சேகரிக்க பட்ட நன்மைகளை சுகந்த வாசனையாக சுமந்து கொண்டு அதை பவுலோ திருப்தியாக அனுபவிக்க எடுத்து சென்ற அற்புதமான ஒரு ஊழியக்காரர். பவுல் தேசலோனிக்கா சபையில் இருந்த பொழுதும் இரண்டுக்கு மேற்பட்ட முறையில் குறைச்சலில் உதவியாக இருந்தது இன்னும் அற்புதமான விஷயம். இன்று சிலர் உதவி செய்வதை பெரிதாக காட்டும் இந்த உலகில் கிறிஸ்துவின் நிமித்தம் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும் ஊழியனை நேரில் சென்றே கொடுக்கும் இவர் தான் நிச்சயம் கிறிஸ்துவின் சிங்காசனத்தின் வலது பக்கத்தில் நிற்கும் செம்மறி ஆடு.

B. சபையின் மேல் வாஞ்சை உள்ளவர்.

இன்று அநேக சுவிசேஷ ஊழியர்கள் கிறிஸ்தவ செல்வந்தர்கள் சொந்த சபையை மறந்து புரஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கிறோம் என்று சொல்லி கொள்கிற சில அமைப்புகள் பின்பால் போய் கொண்டு சபை ஊழியங்களை அற்பமாக எண்ணி கொண்டு இருக்கும் இந்த காலத்தில் சுவிசேஷ ஊழியம் எப்படி முக்கியமோ அதே போல கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தம் ஆகும் சபையை பக்தி விருத்தி அடைய செய்யும் சபை ஊழியத்தின் குறைவை போக்க அதின் மேல் அதிக நாட்டம் கொண்டதினால் பவுல் சொல்கிறார் இப்படி பட்டவர்களை அதிக சந்தோஷத்தோடு ஏற்று கொண்டு கனமாக எண்ணுங்கள். ஒரு சபையை சார்ந்தே missionary மற்றும் சுவிசேஷ ஊழியங்கள் தாங்கபட அல்லது நிறைவேற்ற பட வேண்டும் என்பதற்கு பிலிப்பு சபையும் அதின் போதகரான எப்பாப்பிரோதீத்து ஒரு உதாரணமாக இருப்பது இந்த காலகட்டத்திற்கு எத்தனை பொருத்தம்.

C. கிறிஸ்துவின் ஊழியத்திற்காக தன் பிராணனையும் எண்ணாமல் மரணத்திற்கு சமீபமாக இருந்தார்.

பிலிப்பு சபையின் ஊழிய குறைவை போக்க, பவுலின் குறைச்சலில் உதவி செய்ய கிட்டத்தட்ட 1400 கிலோ மீட்டர் தூரம் அதுவும் கப்பல் பிரயாணம் செய்து தன் பிராணனை துச்சமாக எண்ணி பவுலை தேடி அதின் நிமித்தம் வியாதியும் கடல் sickness மற்றும் இயற்கை சீற்றம் போன்றவற்றின் தாக்கம் அடைந்து கொடிய நிலையில் மரணத்திற்கும் சமீபமாக இருநதார் என்று வசனம் நமக்கு சொல்கிறது. சிலுவை சுமந்து, தன்னை தான் வெறுத்து, ஜீவனையும் இழக்க துணிந்தால் அதை திரும்ப பெற்று கொள்வான் என்று வசனம் நமக்கு சொல்கிறது. இப்படிப்பட்டவர்களை இன்று வேண்டுமெனில் ஏளனமாக கிறிஸ்தவ உலகம் பார்க்கும் ஏனெனில் இன்று சுய நீதி பிரசங்கம் மற்றும் சுய ஆசீர்வாத செய்திகளும் ஊழியங்களும் தான் அதிகம். குறைந்தது வட இந்தியாவிற்கு நமது சபையின் சார்பாக அங்கு ஊழியம் செய்யும் ஊழியர்களின் விசாரிப்பின் அடிப்படையில் ஜீவனை பொருட்படுத்தாமல் செல்லும் அநேக எப்பாப்பிரோதீத்துகள் தான் இன்று நமக்கு தேவை. ஆங்காங்கு சில கர்த்தருடைய சபையின் ஊழியர்கள் இவைகளை செய்து கொண்டு வருவதை பார்க்கும் போது கிறிஸ்துவில் நிறைவு கொள்ள முடிகிறது. இயேசு கிறிஸ்துவும் நமக்காக பாடுபட்டு தன் ஜீவனை கொடுத்து நம்மை மீட்டார் அந்த சிந்தையே நம்மில் இருக்க கடவது என்று பேதுரு சொல்கிறார்.

D. தன் வியாதியை பிறருக்கு பாரமாக்க விரும்பாதவன்.

தன் ஊழிய பிராயணத்தின் நிமித்தம் வியாதி பட்டதை அதுவும் மரணத்திற்கு சமீபமாக இருந்ததை தன் சொந்த சபை அறிந்து கொண்டதின் நிமித்தம் அவர்களுக்கு பாரமாக மாறி விட்டேனோ என்று வியாகுல படுகிறார். சமீபத்தில் நாங்கள் மிகவும் நேசிக்கும் ஆசிரியரில் ஒருவர் எங்கள் வேதாகம கல்லூரிக்கு அவரது கிட்டத்தட்ட 2000 த்துக்கு மேற்பட்ட புஸ்தகங்கள் அன்பளிப்பாக கொடுத்ததன் பேரில் அதை பெற்று கொள்ள கர்நாடகா மாநிலத்திற்கு சென்று இருந்தோம். ஏற்கனவே அவர் மனைவி மிகவும் கடினமான ஒரு வியாதியினால் பாதிக்கப்பட்டு இருக்கிறதினால் மிகவும் தயக்கத்தோடு அவரை எப்படி சந்திப்போம் என்கிற எண்ணத்தோடு போய் இருந்தோம். அங்கு சென்ற பிற்பாடு நான் கண்ட காட்சி என்னை அப்படியே புரட்டி போட்டது. என்னவெனில் வியாதி உள்ள ஒரு வீட்டினர் போன்று அங்கு அவர்கள் நடந்து கொள்ளாமல் அந்த வியாதியின் நடுவிலும் என் ஆசிரியரின் முழு குடும்பமும் கிறிஸ்துவில் மனமகிழ்ச்சியாக, கிறிஸ்துவின் மேல் எந்த சந்தேகம் இன்றி, இந்த வியாதி வந்து விட்டதே என்ற முறுமுறுப்பு இன்றி, எந்த கலக்கம் மற்றும் பயம் இன்றி தைரியத்தோடு இருந்ததை பார்த்தபொழுது எங்கள் உள்ளம் உடைந்து ஆனந்த கண்ணீரோடு ஜெபிக்க கர்த்தர் கிருபை தந்தார். எங்களை மிகவும் நேசித்து, அவர்கள் முழு குடும்பமாக சந்தோசமாக நன்றாக விசாரித்து எங்களுக்கு ஆறுதல் செய்து வழியும் அனுப்பி வைத்தனர். அவர்களின் கிறிஸ்துவின் மேல் உள்ள பூரண விசுவாசத்தின் நம்பிக்கை, அந்த சந்தோசம், பயமின்மை போன்றவற்றின் விளைவு என்ன? கிட்டத்தட்ட 36 ஹீமோ மற்றும் 18 radiation செய்தும் ஒரு பெலவீனம் இல்லாமல், எந்த சலிப்பும் இல்லாமல் அதே கிறிஸ்துவின் கிருபையால் இன்னும் தாங்க பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதுதான் கிறிஸ்துவின் நம்பிக்கை. எங்கள் ஆசிரியரின் மனைவி வியாதியாக இருப்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கு தான் தெரியும்! அவர் சபையில் கூட யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று ஒரு சிறிய வியாதியை கூட பெரிதாக்கி, தங்கள் விசுவாசிகள், உறவினர்கள், நண்பர்கள் கவனத்தை திசை திருப்பி யாவரையும் ஒரு புரட்டு புரட்டி எடுத்து, சுயபச்சாதாபம் பெறும் இந்த காலத்தில் எங்கள் ஆசிரியர் குடும்பம் போன்று சில எப்பாப்பிரோதீத்துகள் இருப்பது மிகவும் ஆச்சரியமே! அதினால் தான் கர்த்தர் இரக்கம் எப்பாப்பிரோதீத்துக்கு பாராட்டினாராம். எங்கள் ஆசிரியர் குடும்பத்திற்கும் நிச்சயம் கர்த்தர் இரக்கம் பாராட்டுவார் அதில் எந்த சந்தேகம் இல்லை ஏனெனில் தொடர்ந்து கிட்டத்தட்ட 8 க்கு மேற்பட்ட தடவை எடுத்த biospy இல் அந்த குறிப்பிட்ட வியாதிக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதே அற்புதம் மற்றும் ஆச்சரியம். *இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிரார். அவர் மாறுவதில்லை. அவரை எந்த சூழ்நிலையிலும் விசுவாசித்து துதித்து பாருங்கள் அவர் நல்லவர் என்று ருசி பார்ப்பீர்கள்.

இந்த எப்பாப்பிரோதீத்து போன்று கர்த்தர் நம்மை மாற்றி அவருக்காக அவரின் சிந்தையை கொடுத்து வழி நடதுவாராக. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

செலின்.


Share this page with friends