மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் :
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவதற்கான விதிமுறைகள் :
- சிறிய சபைகள் திறக்கலாம் என அனுமதி வந்துள்ளது, ஆகவே சிறிய சபை என நிரூபிக்க ஆண்டு வருமானம்
₹10,000/- இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, வருடத்திற்கு ₹10,000/- என்றால் மாதம் ₹833/- மட்டும்தான் வருமானம் என நிரூபிக்கவேண்டும். - வருமானத்தை நிரூபிக்க வேண்டுமானால், சபையின் வங்கி கணக்கு 6 மாத ஸ்டேட்மெண்ட் சமர்ப்பிக்க வேண்டும்
- சபையின் ஆண்டு வருமான கணக்கு தணிக்கை (Audit) செய்யப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை (Audit) செய்யப்பட வேண்டுமானால் சபை அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டு 12 AA சான்றிதழ் (Income tax exemption certificate) பெறப்பட்டிருக்க வேண்டும்
- ஸ்தாபனத்தில் கீழ் செயல்படும் சபைகள் அதற்குரிய அங்கீகாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்
- சபை நடத்தப்படும் கட்டிடம் சொந்தமானதாய் இருந்தால் அதற்குரிய ஆவணங்களும், வாடகை என்றால் வாடகை ஒப்பந்தப்பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும்
- சபை நடத்தும் போதகருடைய இறையியல் படித்ததிற்கான சான்றும் சமர்ப்பிக்க வேண்டும்
இந்த மேற்கூறிய ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சபை நடத்திக் கொள்ளலாம்.
ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பாகையால் அதையும் கருத்தில்கொண்டு வார நாட்களில் நடத்தலாம்.