ஹோம யாகம் அக்கினி யாகம் கண்டு பயப்பட வேண்டுவதில்லை
ஹோம யாகம் அக்கினி யாகம் கண்டு பயப்பட வேண்டுவதில்லை ஏனெனில் நாம் ஆராதிக்கும் தேவன்,
A. இந்த அக்கினிமயமானவருக்கு முட்செடியை கூட வெந்து போக விடாமல் மோசேக்கு வெளிப்பட்டு நொந்து போன மக்களை விடுவிக்க முடியும்.
B. இந்த ஆக்கினிமயமானவர் தமது மெல்லிய பிரசன்னத்தை கொடுத்து அந்த ஆக்கினியின் நடுவில் இருந்து புடமிடபட்ட இருபுறமும் கருக்குள்ள ஊடுருவி பாயும் கர்த்தருடைய வார்த்தைகளை கொடுக்க முடியும்.
C. இந்த அக்கினிமயமானவர் இரவிலே இறங்கி நம் பாதையில் கூட வந்தால் பாதுகாப்பு கொடுக்கும் அக்கினி ஸ்தம்பமாக செயல்பட முடியும்.
D. நெருப்பு கொண்டு முடியாததை கர்த்தர் நாமத்தில் நின்று கருத்தாக ஜெபித்தால் இந்த அக்கினிமயமானவர் இறங்கி வந்து மாம்ச கண்டத்தை பட்சித்து போடும் வல்லமை கொண்டவர்.
E. இந்த அக்கினிமயமானவரை தரிசித்தால் அந்த அக்கினியின் வல்லமை நாவை தொட்டால் அந்த அசுத்த நாவு கூட சுத்தி கரிக்கப்படும்.
F. அந்த அக்கினிமாயமானவர் எரியும் நெருப்பில் தூக்கி போட்டாலும் அந்த நெருப்புக்கு தனலாக மாற்றி தமது பக்தரை எந்த நெருப்பு வாசனையும் இன்றி தப்புவிக்கும் வல்லமையை கொடுப்பவர்.
G. இந்த பரிசுத்த அக்கினிமயமானவர் புறாவைபோல இறங்கி வந்து காட்சி கொடுத்து நாவை தொட்டு விட்டால் அந்த நாவுகளை புதிய பாசைகளை பேச வைத்து ஒரு திரள் கூட்டத்தின் ரகசியங்களை அறிவித்து சபையாக மாற்ற முடியும்.
இந்த உலகத்தில் உள்ள நெருப்பு, அணு நெருப்பு கொண்டே இந்த நிலையற்ற மனிதன் தனது காரியங்களை சாதிக்க முடியும் என்றால்! எலியாவின் தேவன் எங்கே? பெந்தேகோஸ்தே நாளில் இறங்கின அக்கினி எங்கே? வாருங்கள் முறையிடுவோம்! தேசத்தில் பாகாலின் கூச்சல் பெருகி விட்டதே! கர்த்தருக்காக, கர்த்தர் சபைக்காக பெருமூச்சு விட யாருண்டு? தேசத்தில் கர்த்தரின் சங்காரம் பெரிதாக எழும்பி வருகிறதே! இன்று திறப்பிலே நிற்க ஒரு பரிசுத்த சேனையாகிய பக்திவைரக்கியம் கொண்ட ஒரு கூட்டம்!
செலின்