- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம்
- 0
- 188
ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் ! – டாக்டர். பிரதீப் அகர்வால்……கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !…ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ? நான் ஒரு மருத்துவர்; அதனால்தான் “அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்…!”மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ! எனில், மருத்துவர் கூறுகிறார் – Streptokinase ஊசி போடுங்கள்… என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்… என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ – முதல் 900/- வரை மட்டுமே. ஆனால் MRP ரூ. 9,000/- !… .அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் ? ….டைபாய்டு வந்தது… எனில், மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் ! மொத்த விற்பனை விலை ரூ 25/- … ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்… மக்கள் என்ன செய்வார்கள் ??சிறுநீரகம் செயலிழந்து விட்டது..மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.., டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக ரூ.1800/- !அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது … ஏன் ?மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது !! அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார். மக்கள் என்ன செய்வார்கள் ??நோய் தொற்று ஏற்பட்டு விட்டது..! மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ.540/- அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ. 150/- மற்றும் ஜெனரிக் விலை ரூ. 45 /– ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம்.., என்பார்; மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்… அதாவது 540/- ? மக்கள் என்ன செய்வார்கள் ??சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது., அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது ! எனவே, ரூ. 750/- யில், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய் !எம்ஆர்ஐயில், டாக்டர் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/= வரை ! டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது!மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது ! மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளையிடுகின்றன !. .. இருவருமே அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறார்கள்…!!இதில், மிகப்பெரிய கேள்வி…ஊடகங்கள் இதைக் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்த காட்டுகின்றன ?…. . குழியில் விழுந்த இளவரசன்.., டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட், இதையெல்லாம் காட்டுகிறார்கள். ஆனால்… டாக்டர், மருத்துவமனை மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்ட வில்லை ?….. ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ?பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும் ?இந்த லாபி…. அரசாங்கத்தையே…. கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா ? ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன் ? ரூ. 20/- கூடுதலாக கேட்டால் ஆட்டோரிக்க்ஷாகாரரிடம், மக்கள் எகிறுவார்கள்,..! ஆனால், கொள்ளையிடும் டாக்டரை என்ன செய்வார்கள் ???இது உண்மை என்று நீங்கள் நினைத்தால், அனைவருக்கும் அனுப்புங்கள்! விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்; மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் ஆதரவை வழங்குங்கள் !!!….
https://www.facebook.com/DrPardeep-Aggarwal-381141815344043/