முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முதல்வரிடம் திரு. மோகன் சி லாசரஸ் வழங்கினார்

Share this page with friends

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முதல்வரிடம் திரு. மோகன் சி லாசரஸ் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (2.6.2021) தலைமைச் செயலகத்தில், Jesus Redeems Ministries நிறுவனரும், சத்தியம் டிவி தலைவருமான திரு. மோகன் சி. லாசரஸ் அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1.50 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

கடந்த மாதம் ஜெபிக்கலாம் வாங்க சிறப்பு நிகழ்ச்சியில் சகோ. மோகன் சி லாசரஸ் நிதி கேட்டு கோரிக்கை வைத்தார். இந்நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஔிபரப்பானது. இந்த நிகழ்ச்சியினை பார்வையிடும் பல்வேறு திருச்சபைகளை சேர்ந்த விசுவாசிகள் வழங்கிய 1.5 கோடி பணத்தை அவர்கள் சார்பாக தமிழக முதல்வர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, சத்தியம் டிவி மேலாண்மை இயக்குநர் திரு. பி. ஐசக் லிவிங்ஸ்டன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அந்த செய்தியை வாசித்து பாருங்கள்

Dearly beloved people of God ! You have been selfless, sacrifical and generous to contribute for COVID 19 affected patients in spite of your stiff financial needs.

Today Brother Mohan C Lazarus handed over Rs. 1.5 Crores (15 million INR) for CM Relief fund, COVID 19 medical support. The Demand Draft for Rs.1.5 crore, behalf of New Life Society, was handed over to our honourable Chief Minister of Tamilnadu, Respected Thiru. M. K. Stalin in the presence State Minister Thiru. Anitha Radha Krishnan, Tuticorin MP, Smt. Kanimozhi Karunanidhi and Dr. Isaac Livingstone, MD Sathiyam Television.

All Glory and Honour to our Lord Jesus Christ. We thank all donors, well wishers, supporters of Jesus Redeems Ministers and New Life Society, for helping the needy people of our neighborhood.
Great is your reward.

covid19 #coronahelp #mkstalin #CMrelieffund #Newlifesociety #MohanCLazarus #JesusRedeems #stalincm


Share this page with friends