100 மடங்கு பலனடைந்த ஈசாக்கு

Share this page with friends

100 மடங்கு பலனடைந்த ஈசாக்கு

ஆதியாகமம் 26: 12 – 29.

  1. ஈசாக்கு பஞ்ச காலத்தில் விதை விதைக்கிறான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். 100 மடங்கு பலன் அடைந்தான். அவன் ஐசுவரியவானான். விருத்தியடைந்தான். மகா பெரியவனானான். ஆம், இன்றைய வசனப் பஞ்சத்தின் மத்தியிலும், வசனமாகிய விதையை விதைத்து, ஆத்தும அறுவடை செய்வோம்.
  2. ஆனால் சத்துருவாகிய பிசாசு பொறாமையினால், அவன் தகப்பன் வெட்டின துரவுகளையெல்லாம் மண்ணினால் தூர்த்து போடுகிறான். ஆம், நம் இருதயமாகிய துரவில் ஜீவதண்ணீர் ஊறாதபடி, மண்ணுக்குரிய, இந்த உலகத்திற்குரிய ஆசை இச்சைகளால், கவலைகளால் , தூர்த்து போடுகிறான்.ஆம், இன்று நம் இருதயமாகிய துரவு, ஜீவ தணணீர் ஊறாதபடி மண்ணினால் நிரப்பப் பட்டிருக்கிறதா? அப்படியானால் நாம் செய்ய வேண்டியதை ஈசாக்கிடமிருந்து கற்றுக்கொள்வோம்.
  3. ஈசாக்கு தன் தகப்பன் வெட்டின துரவுகளையெல்லாம், மறுபடியும் தோண்டினான். இன்று நம் தகப்பனாகிய கர்த்தர் நம் இதயத்தில் வெட்டின துரவுகளை யெல்லாம் மறுபடியும் தோண்டுவோம். பின்மாற்றத்திலிருந்து எழும்புவோம். ஜீவ தண்ணீர் புறப்படட்டும்.
  4. பள்ளத்தாக்கிலே புதிய துரவுகளை தோண்டுகிறான். ஆம், பள்ளத்தாக்கு என்பது தாழ்ந்த இடம். ஆம், நாமும் நம்மை தாழ்த்தி, நம் இருதயமாகிய துரவை தோண்டும் போது ஜீவ தண்ணீராகிய, வசனம், அதின் ஆழங்கள், விதை நம்மிலிருந்து சுரக்கும். இந்த விதை 100 மடங்கு பலன் கொடுக்கும்.
  5. நம் இருதயமாகிய துரவிலிருந்து, ஜீவ தண்ணீர் புறப்படும் போது, கர்த்தர் நமக்கு தரிசனங்களை தருவார். நம்மோடு உடன்படிக்கை செய்வார். ஆனால் சத்துருவாகிய பிசாசு பொறாமையினால் நம்மோடு வாக்குவாதம் பணணுவான். ஆனால் நம்மை மேற்கொள்ள மாட்டான். இதை காணும் சத்துருக்கள், கர்த்தர் நம்மோடிருப்பதை காண்பார்கள். நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என நம்மை குறித்து சாட்சி கூறுவார்கள்.

ஆம், இன்று ஆலயங்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன. வசன பஞ்சம், படுக்கை, ஆக்ஸிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் எல்லாமே பஞ்சம் தான். ஆனால் நாம் பள்ளத்தாக்கிலே, நம் துரவுகளை தோண்டுவோம், ஜீவ தண்ணீரால், வசனத்தால், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவோம். வசனமாகிய வித்தை விதைப்போம்.100 மடங்கு பலன், ஆசீர்வாதம் பெறுவோம். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.


Share this page with friends