கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான அன்பு போதகருக்கு
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான அன்பு போதகருக்கு தேவ ஊழியருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நமது ஊடகமானது யூடியூப் நிறுவனம் வழங்கிய தகவலின்படி இதுவரை 89 நாடுகளிலிருந்து 70 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஆசீர்வாதமாய் இருந்து வருகிறது. தேவனுக்கே மகிமை.
ஸ்தாபன வேறுபாடுகளின்றி உலகளாவிய தமிழ் கிறிஸ்தவர்களுக்கு பக்திவிருத்திக்கேதுவான பல ஆவிக்குரிய நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நேர்த்தியாக வழங்கி வருகிறோம். கிறிஸ்தவ நடப்பு செய்திகள் உட்பட வேதாகம கேள்வி பதில்கள், கிறிஸ்தவம் சார்ந்த ஆய்வுகள், தகவல்கள் என தினம் ஒன்று என்ற விதத்தில் இணையத்தில் வெளிவந்து கொண்டிருப்பது தாங்கள் அறிந்தே.
நமது ஊடகத்தில் தங்களது பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். வருகிற புதிய ஆண்டின் முதல் நாளில் (2021) ஊழியர்களுடைய வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் உலகளாவிய தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தேவை என்பதை உணர்ந்து தங்களை தொடர்பு கொள்கிறோம். தாங்கள் தங்கள் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியினை நமது ஊடகத்திற்கு வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோ அல்லது ஆடியோ டிசம்பர் 28ம் தேதிக்குள் எங்களுக்கு கிடைக்கும்படி செய்தால் கடைசி நேர பரபரப்பை தவிர்க ஏதுவாக அமையும். மேலும் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி
கிறிஸ்துவின் பணியில்
பெ.பெவிஸ்டன்
More Information:
www.tcnmedia.in channeltcn@gmail.com
வாழ்த்துச்செய்தி பற்றின விபரங்கள்:
Video Formet : MP4
Video Quality : HD to 4K HD
Video Duration: 2 Min to 5 Minutes
We Transfer, Google Drive, Box இவைகளில் ஏதேனும் ஒன்றினை தெரிவு செய்து பதிவேற்றம் செய்து, வீடியோவின் லிங்கினை channeltcn@gmail.com மின்னஞ்சலுக்கு, அல்லது 97503 81784 WhatsApp எண்ணிற்கு வருகிற டிசம்பர் 28ம் சனிக்கிழமைக்குள் அனுப்பி தர பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நமது ஊடகத்தினை குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.tcnmedia.in இணையதளத்தைஇணையதளத்தை பார்வையிடவும்.