இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

Share this page with friends

இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பதிவு: மே 10, 2021

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 400 சுவாசக் கருவிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலில் இருந்து இரு தினங்களுக்கு முன் 360 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thank you : www.dailythanthi.com

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஓரின திருமணத்தை ஆதரியுங்கள் - போப் ஆண்டவரின் சர்ச்சை கருத்துக்கு கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம்
தலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.
அடங்கா குதிரைகள்!... வித்யா'வின் விண் பார்வை!
முதன் முறையாக பெந்தேகொஸ்தே போதகர் ஜனாதிபதியானார்
முரட்டு குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும் வாழ்ந்தவர் மனந்திருந்திய பின் நடந்தது என்ன?
மாயவித்தைக்காரர்! - (CURIOUS ARTS, SORCERER)
எதை வடிகட்டுகிறீர்கள்? எதை விழுங்குகிறீர்கள்? வித்யா'வின் பதிவு
உருக்குழைந்த நிலையில் உக்ரைன் | இரவில் பொழிந்த குண்டு மழை | அவசர ஜெப அழைப்பு
கேள்வி : ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்?
WhatsApp - Christian Quotes

Share this page with friends