• Wednesday 22 January, 2025 12:19 AM
  • Advertize
  • Aarudhal FM
2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி

2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி

Jul 28, 2024, 5:24 PM

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயா (வயது 78). இவர் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 17ம் தேதி வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற மூதாட்டி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது மகள் லோகநாயகி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் விஜயா குறிந்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விஜயா குறித்து விசாரிக்க அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் என்பரை நேரில் வருமாறு காவல் துறையினர் கடந்த 23ம் தேதி அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவுடன் திடீரென மாயமானார்.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் பார்த்திபனை தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில் விருதுநகரில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விஜயா குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தம்பதி இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 2 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி அடையாற்றில் வீசியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

thanks to asainet news tamil