- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை
- 0
- 173
அன்றைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் தலைவர்களும், யூத மதத் தலைவர்களும் அக்கால மக்களின் வாழ்வை வனாந்திரமாக்கியிருந்தனர். இந்நிலையில்தான், வனாந்திரத்தில் தேவனுடைய வார்த்தை யோவானுக்கு உண்டாயிற்று (லூக் 3:2), இவ்வாறு வனாந்திரத்தில் உண்டான வல்லமையுள்ள தேவ வார்த்தையை, யோவான் ஸ்நானகனிடத்தில் கேட்டறிந்த திரள் கூட்ட ஜனங்கள், வறட்சியாக்கப்பட்ட வனாந்திர வாழ்க்கையை வளமாக்கினர்.
இதோ, வனாந்திர வாழ்வை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை
“லூக்கா எழுதின சுவிசேஷம் மூன்றாம் அதிகாரம் “
1. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தினர். – 3:3
( தேவன் தங்கள் அருகில் வர )
2. அவருக்கு பாதைகளை செவ்வை பண்ணினர். – 3:3
( தேவனிடம் நெருங்கி செல்ல )
3. மனந்திரும்புதலுக்கேற்றக் கனிகளைக் கொடுத்தனர். – 3:8
( தமது தோட்டத்தில், பராமரித்து பாதுகாத்த தேவனுக்கு )
4. குலப்பெருமையை விட்டு விட்டனர். – 3:8
( தேவனுக்கு பிள்ளைகளானதால் )
5. ஆடை ஆகாரத்தை, பகிர்ந்துகொண்டனர். – 3:12
( ஆகாய பறவைகளை அன்றாடம் போஷிக்கும் ஆண்டவரை அறிந்துகொண்டதால் )
6. அநியாயமான வருமானத்தை மறுத்துவிட்டனர். – 3:13
( தேவன் நியாயமாய் தீர்ப்பு செய்பவராகையால் )
7. குற்றஞ்சாட்டுவதை நிறுத்தினர். – 3:14
( தேவனுக்கு முன் தாங்களும் குற்றவாளிகள் எனும் உண்மையை அறிந்ததினால் )
8. போதும் என்ற மன திருப்தி அடைந்தனர். – 3:14
( தேவனே எல்லாவற்றிற்கும் போதுமானவரானதால் )
9. தவறான யோசனையை தவிர்த்தனர். – 3:15-16
( வரப்போகும் வல்ல தேவனின் வருகையின் உண்மையை அறிந்துகொண்டதால் )
தேவ வார்த்தையை வாஞ்சையுடன் கேட்போரின் வனாந்திர வாழ்க்கையை வளமாக்கிய தேவனுடைய வார்த்தை இன்றும் மாறாமலிருக்கிறது.
“கர்த்தர் வனாந்திரத்தை ஏதேனைப்போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.” ஏசா 51:3
Thanks to K. ராம்குமார் ஓசூர்