- by KIRUBAN JOSHUA
- 3 months ago
- 0
கார் தருவாங்க.. பெரிய அதிகாரம்.. பல ஆயிரம் சம்பளம்! டிஎன்பிஎஸ்சி தரும் சான்ஸ்.. நெருங்கும் டெட் லைன்
- by KIRUBAN JOSHUA
- July 29, 2024
- 0
- 940
Thursday, July 25, 2024, 16:00
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளன தேர்வு நடக்க. குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Advertisement பதவிகள் என்னென்ன?: இந்த தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். ஸ்டாலின் டேபிளுக்கு போன லெட்டர்.. எத்தனை வருடமாக அரசு ஊழியர்கள் ஏங்குறாங்க.. வருது குட்நியூஸ் ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி (மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள்) சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களத்தில் நன்னடத்தை அதிகாரி தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் (வேலைவாய்ப்பு பிரிவு) இளைய வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர் காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு) கோவை புது பேருந்து நிலையம்.. பேருக்குதான் ஹைடெக்! பஸ் நிக்காது, லைட் எரியாது, கழிவறை பக்கம் “ம்ஹூம்” இதில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர், துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு), காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் ஆகிய பதவிகள் நல்ல பவர் நிறைந்த பதவிகள் ஆகும். இவற்றில் சிலவற்றிற்கு அரசின் கார் கிடைக்கும். அதேபோல் சில பதவிகளுக்கு 40 – 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள். கோவையையே மிரள வைத்த.. ஐஏஎஸ், ஐபிஎஸ்.. விசாரித்த போலீசுக்கு ஷாக்.. அத்தனையும் போலி! இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.
Thanks to one india news