மதமாற்றுவது ஏமாற்று வேலையா?

Share this page with friends

மதமாற்றுவது ஏமாற்று வேலையா?

யெஸ். குலசேகரன் என்பவர் 29 Sep 2020 அன்று தினமலர் பத்திரிக்கைக்கு எழுதிய தலையங்கத்திற்கு ஒரு கிறிஸ்தவனின் பதில்!

மதம் என்கிற பதமே 19 ஆவது நூற்றாண்டில் தேவ பக்தி என்று மேல் நாடுகளில் பரவலாக இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு பின்பு ஜூலியஸ் சீசர் அந்நாட்டின் இராணுவப் இறையாண்மை பக்திக்கு அதிகமாக பயன் படுத்தியதின் பேரிலும் இரண்டாவது உலக போருக்கு பின்னர் நாடுகள் பகுக்கபட்ட பிறகு மக்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் கலாச்சார அடிப்படையிலும் நம்பிக்கை அடிப்படையிலும் மனிதனால் கொடுக்க பட்ட பெயரே இந்த மதமாகும். அப்படியாக இந்தியாவில் வாழும் மக்களை சிந்து நதிக்கு அப்பார் வாழ்கிறவர்கள் என்று குறிப்பிடவும் ஒரு எல்லை, பல கலாச்சாரம் மற்றும் பல பழக்கவழக்கங்கள் கொண்ட இந்த நாட்டிற்கு கிறிஸ்தவ அறிஞர் ஸ்டேன்லி ஜோன்ஸ் போன்ற மற்றும் ரோம அறிஞர்களால் கொடுக்கப்பட்ட புனை பெயர் தான் இன்று நாம் காணும் இந்து அல்லது இந்தியா. அப்படிபட்ட இந்தியாவில் பல மொழி, பலவாழ்வு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் இருந்தது. அதை ஒன்றிணைக்க கொண்டு வந்த சனாதன தர்ம சாஸ்திரங்கள் அடிப்படையில் கொண்டு வந்த இந்த சுயநல அரசியலுக்கு வேண்டியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பிடிக்கவும் கொண்டு வந்த இந்த இந்து மதத்தில் ஒருவரை வற்புறுத்தி செய்வது தான் மதமாற்றம் என்று திரு குலசேகரன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைககிறேன். அந்த இந்து மதத்தின் வேதங்கள் பெர்சியற்களின் நாட்களின் வாழ்ந்த யூதற்களுக்கு பயந்து மதம் மாறிய அபிராமியற்கள்” பெற்ற யூத மத பகர்ப்புகள் தான். அதினால் தான் இதுவரை உங்களுக்கு அதற்குரிய manuscripts கண்டு பிடிக்க முடியவில்லை. அதை பல பதிவுகளில் ஆதாரங்களோடு எழுதியும் உள்ளேன். ஆனால் கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல இது ஒரு மார்க்கம். உலகின் மையபகுதியான ஆசியா கண்டத்தில் இஸ்ரவேல் நாட்டில் பெத்லகேம் என்ற ஊரில் பிறந்த இயேசுவை பின்பற்றி அவரது மாதிரியான வாழ்வை மையமாக கொண்டு அவரது சிலுவை மரணம் அதில் அவர் சிந்தின பரிசுத்த இரத்தத்தின் வல்லமையை விசுவாசித்து அதனால் உண்டாகும் பரிசுத்த மீட்பை பெற்று பரிசுத்த வாழ்வை அடிப்படையாக வாழ்ந்து நித்திய ஜீவனை பெற்று கொள்ள விசுவாசித்து அந்த கிறிஸ்துவை பின்பற்றி அவரது ஆசீர்வாதத்தை பெற்ற உலகில் எங்கும் நிறைந்த விசேஷமான ஒரு கூட்டம் மற்றும் மார்க்கம் என்றும் இந்த திரு குலசேகரன் அவர்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

இனி உங்கள் கேள்விகளுக்கு இதோ பதில்கள்

1. நீங்கள் மறைமுகமாக மற்ற நாடுகளில் மதம் மாற்றம் செய்தால் கொன்று விடுகிறார்கள் என்று சொல்லும் போது அதை மறைமுகமாக ஆதரிக்கிறீர்களா?

அப்படி ஆதரித்தால் பிறரை இரக்கமின்றி கொல்வது தான் உங்கள் மதத்தின் தர்மமா?

2. பிராமணர்கள் யாரும் உங்கள் மதத்தை விட்டு போவதில்லை என்று சொல்லும் போது பிராமண குடும்பத்தில் பிறந்த யாரும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அமைந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற வில்லையா?

அப்படி கிறிஸ்தவ மார்க்கத்தில் அமைந்த அந்த பிராமணர்களை மதிப்பு கொடுத்து பழகுவீர்களா? அல்லது அவர்களும் கிறிஸ்தவ கை கூலிகளா? மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்த அவர்கள் எதினால் மனம் மாறினார்கள் என்று
என்றாவது நிதானித்து பார்த்தது உண்டா? அது என்ன பிராமணர்களுக்கு மட்டும் ஒரே சீராக கர்மவினை உயர்ந்த இடத்தை கொடுக்கிறது? ஆனால் அவர்கள் மேலை நாடுகளில் சென்றால் மட்டும் அங்கு மற்ற நாட்டினரின் கீழ் ஒரு அடிமையை போல வேலை செய்கிறார்கள்? அங்கு இந்த சானதன தர்மம் வேலை செய்யாதோ? ஒரு காலத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ எஜமாங்களுக்கு அடிமையாக கைகட்டி வேலை பார்த்தவர்களில் இவர்களும் உண்டே?

3. அது என்ன உங்கள் மதத்தை வேரரருக்க பார்க்கிறார்களா?

உங்கள் மதத்தை குறித்து அது என்றும் நிற்கும் யார் என்ன செய்தாலும் அது அழிந்து போகாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா? பயத்தின் அடிப்படையில் நீங்கள் பேசினால் உங்களுக்கும் பயம் இருக்கிறதே? உங்கள் பயத்தை போக்கி நம்பிக்கை தரமுடியாத இந்த மதம் உங்களுக்கு எதற்கு? உங்கள் மதத்தை நீங்கள் மற்றவர்களை கொன்றும் மிரட்டியும் தான் காப்பற்ற வேண்டுமா?

4. கிறிஸ்தவ ஊழியர்கள் சுய நலமாக செய்யும் சேவைக்கு பெயர் ஊழியம் என்று சொல்கிறீர்கள். இருந்து விட்டு போகட்டும்.

உங்கள் மதத்தில் நீங்கள் செய்யும் சேவைக்கும் அதுதான் அர்த்தமா? எங்கள் ஊழியர்கள் மிஷனரிகள் சுய நலமாக கட்டின ஆஸ்பத்திரிகள், ஸ்கூல்கள், நிறுவனங்கள், மற்றும் தொழில் சாலைகளில் அதிகமாக பயன் பெறுகிறது பெற்றதும் உங்கள் இந்துக்கள் தானே? அந்த ஊழியத்தின் மூலமே நீங்கள் கல்வியறிவு, பிரின்டிங் பிரஸ், மருத்துவம், தொழில் புரச்சி மற்றும் சமூக மாற்றங்கள் பெற்றீர்கள். அடுத்தவன் சுயநலத்தின் நன்மைகளை நாணம் வெட்கம் ரோசம் இல்லாமல் பயன் படுத்துவது எப்படி? மன்னிக்கவும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

மனிதனின் அறியாமையை பயன்படுத்தி அவனை மூட பழக்கங்களில் வைத்து நீங்கள் சுயநலமாக வாழ நினைத்தீர்கள். அதை இந்த ஊழியர்கள் மிஷனரிகள் தகர்த்து விட்டனர் அது தான் உங்கள் கோபம் புரிகிறது. உங்கள் மதத்தின் சேவை மனப்பான்மை உணர்வை வெளிப்படுத்தாமல் இப்படி அவர்கள் சேவையை கொச்சை செய்யும் உங்கள் மன நிலையை கொண்டே உங்கள் மதத்தின் புனித தன்மையை அறிய முடிகிறது. நல்லது போகட்டும்.

5. அது என்ன ஆறுதல் படுத்துகிறது போல மதமாற்றம் செய்கிறார்களா?

அது எப்படி இந்துக்கள் எல்லாரும் கர்மவினையால் கஷ்ட படும்போது கிறிஸ்தவர்கள் ஆறுதல் என்று உள்ளே புகுந்து மதம் மாற்றி விடுகின்றனர். இங்கு தான் மதம் எது மார்க்கம் எது என்று பார்க்க வேண்டி உள்ளது. உங்கள் மதம் கர்மவினை என்று ஒதுக்கும் போது, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கும் போது, அந்த யாகம் இந்த யாகம் என்று பலிமுறைகளை முன்னிறுத்தி பணம் பிடுங்கும் போது இலவசமாக பெற்ற கிறிஸ்துவின் அன்பை சாமதானத்தை கூறி அவர்களை கிறிஸ்துவை போல மாற்றி எல்லாரும் சமம் எல்லாரும் ஒன்று தான் இது இவன் செய்த பாவமுமல்ல இவன் பெற்றோர் செய்த பாவமும்மல்ல என்று சொல்லி கட்டுண்டவர்களை விடுதலை ஆக்கி சுவிசேஷம் அறிவிப்பதில் என்ன தவறு. அது தான் ஒரு மார்க்கம் செய்ய வேண்டியது. எங்களுக்கு அறிவிக்க கிறிஸ்துவும் அவரது சுவிசேசமும் இருக்கிறது. அதை சொல்லி விடுதலை கொடுப்பது எங்கள் மேல் விழுந்த கடமை. உங்கள் மார்க்கத்தில் ஒருவனை கர்மவினை என்று ஒதுக்கி கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பும் போது அவனை காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் நினைக்கும் எங்கள் விசுவாசத்தில் நம்பிக்கையில் என்ன தவறு இருக்கிறது. உங்களிடம் இருக்கும் ஆறுதலை அள்ளி வீசி அவர்களை அங்கேயே வைப்பதை தவிர்த்து விட்டு நீ சுவிசேஷம் அறிவிக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. யாரும் யாரையும் மிரட்டியோ, பட்டயம் கொண்டோ, ஒதுக்கிவைப்போம்- என்று ரகளை உண்டுபண்ணியோ, நாங்கள் சுவிசேஷம் அறிவிப்பதில்லை எங்கள் விசுவாசத்தை சொல்கிறோம் ஏற்று கொள்வதும் வெருப்பதும் அவரவர் விருப்பம். பிறரது தனி சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நீங்கள் சொல்வது போல் உங்களுக்கும் அதிகாரம் இல்லை என்று நாங்களும் சொல்கிறோம் அவ்வளவு தான்.

6. திருமணம் செய்து மதம் மாற்றுகிறோமா?

அப்படி எங்களுக்கு மதம் மாற்றும் அவசியமில்லை. எங்கள் மார்க்கத்தை மெய்யாக கடைபிடிப்பவர் அந்நிய நுகத்தில் பிணைக்க படுவதில்லை. ஆனால் மந்திரம், பேய் பிசாசு, கர்மவினை பேரில் அகால மரணங்கள், மற்றும் நிம்மதியான குடும்பம் வாழ்க்கை, கிறிஸ்தவ நாடுகளில் வேலை, படிப்பு என்று பெரும்பாலும் கிறிஸ்தவர்களின் மேல் கண் வைப்பது உங்கள் மதத்தினர் தான். அதினால் என்னமோ அநேக இந்துக்கள் இன்று கிறிஸ்தவ நாடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். அதை பெருமையாக கொள்ளவும் செய்கிறார்கள். இந்தியாவில் இந்துகளில் இல்லாதது அங்கு கிறிஸ்தவ நாடுகளில் என்ன இருக்கிறதோ?

7. ஏழ்மையை கருத்தில் கொண்டு நாங்கள் மதம் மாற்றுகிரோமா?

ஆமாம் நாங்கள் ஏழைகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வாதமாக இருப்பது எப்படி என்று கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முன்னிட்டு அறிவிக்கிறோம். அதினால் தான் என்னமோ உலகில் கிறிஸ்தவ நாடுகள் தான் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறது. எங்கள் சுவிசேசத்த்தின் வல்லமை அப்படி. நீங்கள் கர்மவினை மற்றும் புண்ணிய வினை என்று பேசி கொண்டு உங்கள் சக இந்துக்களை ஜாதி வாரியாகவும், பொருளாதார வாரியாகவும் ஏற்ற தாழ்வு பார்த்து அவர்கள் உங்கள் தட்டில் சாப்பிட்டாலே தீட்டு என்று சொல்லி ஓரம் கட்டும் போது நாங்கள் அவர்களோடு இருந்து சாப்பிடும் அந்தஸ்தை கொடுத்து சமூகத்தில் உயர வழிவகை செய்கிறோம். எங்கள் இயேசு கிறிஸ்து பயப்படுத்தி மிரட்டும் உருவத்தில் வராமல் ஏழ்மை உருவத்தில் வந்து பணக்காரர்களை கூட எல்லாவற்றையும் விற்று தரித்திரர்களுக்கு கொடுக்க வைத்து கொடுக்கிற குணத்தை கற்று கொடுத்து எல்லாரையும் ஒன்று போல நேசிக்க வைத்து நித்திய வாழ்வையும் வாக்கு கொடுத்து போய் இருக்கிறார். கிறிஸ்தவம் அறிவு கொடுத்து இருக்கிறது, புத்தி கொடுத்து இருக்கிறது, கல்வி மற்றும் மருத்துவம் கொடுத்து இருக்கிறது அதோடு சம்பாத்தியம் இந்த உலகிலும் வருகின்ற மெய் உலகிலும் கொடுக்கின்றது.

8. மாணவர்களை மதம் மாற்றுகிறோம் என்கிற வாதம்.

மதத்தின் பெயரால் கால்புணர்ச்சி, வன்மம், கொலை, பட்டயம், அடி தடி, கலவரம், சூழ்ச்சி, கசப்பு என்று ஒரு கூட்டம் பள்ளிகளில் புகுந்து மாணவர்களை கெடுக்கும் போது. எல்லாரும் தேவ பிள்ளைகள், எல்லாரும் சமம் என்று அன்பையும் சகிப்பு தன்மை மற்றும் சமாதானம் போன்ற அற்புத எண்ணங்களை அந்த நல்ல உள்ளங்களில் விதைப்பத்தில் தவறு ஒன்றும் இல்லை. உங்களில் உயர்ந்தவர்கள் தங்கள் வாழ்வில் உயர தெரிந்து கொண்ட கல்வி நிலையங்கள் மற்றும் இடங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ இடங்கள் மற்றும் நிறுவனங்களே. எங்கள் இயேசகிறிஸ்துவின் சுவிசேஷம் சிலுவையில் சகித்து அதினால் பெற்று கொண்ட சமாதானத்தின் அடிப்படையில் வந்த வல்லமை நிறைந்த அன்பின் சுவிசேஷம். எங்களுக்கு பட்டயத்தை உறையில் போட கர்த்தர் கற்று தந்தார். தென்னகத்தில் இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருப்பதற்கு காரணம் கிறிஸ்தவ கல்வி சுழல் தான் என்பதை யாரும் மறுக்க இயலாது. North இந்தியாவை நாம் கண்க்கூடாக பார்க்கிறோம் இல்லையா? இந்த நல்ல சுழலில் கலவரத்தை உண்டு பண்ணி North India போன்று மாற விரும்புகிறீர்களா?

9. இந்துக்களை விட நீங்கள் எந்த விதத்தில் நல்லவர்கள் என்று வேற கேட்கிறீர்கள்?

இந்துக்களை விட எந்த விதத்தில் நாங்கள் நல்லவர்கள் இல்லை சொல்ல வேண்டியது தானே!

பொதுவாக இந்து மதத்தில் இருந்ததை விட அங்கு இருந்து மார்க்கம் மாறி வந்த கிறிஸ்தவர்கள் நல்வர்கள் தான் என்று சொல்ல முடியும். எனெனில் நிறைய குடிகாரர்கள், கொலைகாரர்கள், (உங்களை போன்ற) மத வெறியர்கள், கஞ்சாபேர்வழிகள், பொல்லாதவர்கள் என்று ஒதுக்க பட்ட அநேக இந்துக்களை நல்ல கிறிஸ்தவர்களாக மாற்றி இருக்கிறது எங்கள் மார்க்கம். ஒதுக்கபட்டவர்களை வாழவைத்து இருக்கிறது. எங்கள் மார்க்கம், ஏழை நாடுகளை வல்லரசுகள் என்ற நிலையை கொடுத்து இருக்கிறது. உலகில் அதிக எண்ணிக்கை கொண்ட மார்க்கம் கிறிஸ்தவம் என்று இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது. மாற்று மதத்தினர் சுவிசேஷம் அறிவித்தால் தப்பு என்று கொக்கரிக்கும் இதே இந்து மதத்தினரை மற்ற கிறிஸ்தவ நாடுகளில் கண்ணியமாக வாழ வைத்து கொண்டு இருக்கிறது. உலகில் அநேக அரசியல் சாசனங்களை கொடுத்து இருக்கிறது, கல்வியில், அறிவியலில், தத்துவத்தில், மருத்துவத்தில் விவசாயத்தில், சமுகத்தில் புரட்ச்சி ஏற்படுத்தி மக்களுக்கு அன்பு, சமாதானம், விசுவாசம் என்கிற போதனை கொடுத்து தன்னையே பலியாக கொடுத்து மனிதனுக்கு இரத்தம் சிந்தி பாவமீடப்பை கொடுத்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்த உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவை கொடுத்த நல்ல மார்க்கம். அவரே இந்த உலகிற்கு ஒளி அவரிடத்தில் இருள் இல்லை. *அந்த கிறிஸ்துவின் பிள்ளைகள் கொலை செய்வதுமில்லை, தீவிரவாதம் கொண்டதில்லை, போராடுவதில்லை, பஸ்களை கல்லெறிவது இல்லை. பிறர் இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது இல்லை. கலவரம் செய்து பிறர் வீடுகளில் பிறர் இடங்களில் புகுந்து தாக்குவது இல்லை. எங்களுக்கு தெரிந்தது ஜெபிக்க தெரியும், சத்தியத்தை கேட்டால் சொல்ல தெரியும் பாக்கி அவர் தான் எங்களுக்கு பதில் செய்வார் என்று அவர் மேல் பாரத்தை போட்டு எங்கள் இலக்கை நோக்கி ஓட தெரியும். தெய்வத்ற்க்கும் மதத்திற்கும் வேண்டி சண்டை போட எங்கள் மார்க்கம் அனுமதிப்பது இல்லை. *எங்கள் சத்தியம் ஏற்கனவே எண்ணிக்கைக்கு அடங்காத இரத்தம் சிந்தி இன்றும் வீரு நடை போடுகின்றது எனெனில் எங்கள் தலைவர் மரணத்திற்கு பயப்படாமல் தனது இரத்தம் சிந்தி தான் எங்களுக்கு வழி காட்டி மூன்றாம் நாள் உயிரோடு எழும்பி இன்றும் சிங்காசனத்தி இல் வீற்று இருகின்றார். அவர் பார்த்து கொள்வார் என்கிற நம்பிக்கை, விசுவாசம் நிறைந்தவர்கள் தான் இந்த கிறிஸ்தவர்கள்* எனவே

இந்த இயேசு கிறிஸ்துவை பின்பற்றி காழ்ப்புணர்ச்சி, மற்றும் வெறுப்பான அந்த மத வெறியை விட்டு சமாதானத்தை தேடி அதை கிறிஸ்துவில் பெற்று அந்த அன்பின் வாழ்வை பெற உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் அந்த இயேசு கிறிஸ்துவை பெற அன்புடன் வாழ்த்தும்.

என்றும் கிறிஸ்துவின் மார்க்க வழியில்.

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

சிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்
எப்படி கீழ்படிய வேண்டும்?
ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்களின் செயல்பாடுகள்?
மாறுவேடத்தில் இருக்கும் இராஜா
பாதத்தைக் காணிக்கைப் பெட்டியாக்கிய சபையார் வித்யா'வின் பார்வை
அதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா?.. முதல்வர் என்ன யூதாஸா? வைகோ கேள்வி
எனக்கு அழகில்லை, திறமை இல்லை, பணம் இல்லை, வாகனம் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்
புற ஜாதியாரிடம் காணிக்கை வாங்காத வித்தியாசாமான போதகர்
புகழ்பெற்ற மேகியின் பரிசு கதை
குருத்தோலை ஞாயிறு பற்றி பாடம் கற்பிக்கும் கழுதை - அற்புதமான சிந்தனை

Share this page with friends