இயேசுவின் இரத்தம் பற்றிய நேரடியான வெளிப்பாடு

Share this page with friends

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்ககிறீர்களே. 1 பேது 1 : 19.

இந்தக் குறிப்பில் இயேசுவின் இரத்தத்தைக் குறித்து சிந்திக்கலாம். இயேசுவின் இரத்தம் இரண்டு வகையாக பிரித்து அதில்

1. சிலுவையில் சிந்தின இரத்தம்.

2.இயேசுவின் சரீரத்தில் வழிந்த இரத்தம். இந்த இரண்டு வகையான இரத்தத்தைக் குறித்து சிந்திக்கலாம். சிலுவையில் சிந்திய இரத்தம். கொலோ : 1 : 20.

 1. பாவங்களை கழுவி சுத்திகரித்து நம்மை உயர்த்தும் இரத்தம். வெளி : 1 : 6. இயேசுவின் இரத்தத்தில் சுத்திகரிக்கும் வல்லமை இருந்தது. அந்த இரத்தம் நம்மை இராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இயேசுவோடு தேவனு க்கு முன்பாக நிற்க வைத்தது. இது தான் உயர்வு. இயேசுவின் இரத்தம் நம்மை சுத்திகரித்து உயர்த்திய இரத்தம்.
 2. இயேசுவின் இரத்தம் சமீபமாக்கியது. Or ஒப்புரவாக்கியது. எபே : 2 : 13, கொலோ : 1 : 20
 3. இயேசுவின் இரத்தம் புதிய உடன்படிக்கையின் இரத்தம். மத் : 26 : 28. இயேசு நம்மோடு செய்த உடன்படிக்கை. 1 கொரி : 6 : 20 பிசாசுக்கு அடிமையான நம்மை இயேசு கிரயம் செலுத்தி இரத்தத்தினால் நம்மை மீட்டிருக்கிறார் அவரின் உடன்படிக்கை நாம் தேவனை சரீரத்திலும் ஆவியிலும் நாம் தேவனை மகிமை பண்படுத்த வேண்டும். இதுவே உடன்படிக்கை
 4. இயேசுவின் இரத்தம் பேசுகிற இரத்தம். எபி : 12 : 24. அதி : 4 : 13 ஆபேலின் இரத்தம் குறைகளை
  பேசியது. இயேசுவின் இரத்தம் நன்மையை பேசியது.
 5. இயேசுவின் இரத்தம் தைரியமளிக்கிற இரத்தம். எபி : 10 : 20 , 10 : 35
 6. இயேசுவின் இரத்தம் நம்மை பரிசுத்தமாக் கும் இரத்தம் எபி : 13 : 12
 7. இயேசுவின் இரத்தம் ஜெயமளிக்கிற இரத்தம். வெளி : 12 : 11.

இயேசுவின் சரீரத்தில் வழிந்த இரத்தம். யோவா : 19 : 34.

 1. கெத்சமேன் தோட்டத்தில் சிந்திய இரத்தம் லூக் : 22 : 44 இயேசு முதலாவது இரத்தம் சிந்தின இடம் பிலாத்துக்கு முன்பாக அல்ல , சிலுவைக்கு முன்பாகவும் அல்ல. தாமே கெத்சமேன் தோட்டத்தில் ஊக்கமாக ஜெபித்தபோது அவர்வியர்வை துளிகள் இரத்தத் துளியாக பூமியில் சிந்தியது. தமது இரத்தத்தால் பேசினார். எபி : 12:24 இனி கேளுங்கள் ஆண்டவரே உமது இரத்தம் பூமியிலே
  சிந்தியது போதும் உமது இரத்தம் என் சிரசிலே சிந்தட்டும் எனக்கும் உம்மைப் போல மன்றாட்டு ஆவி வரட்டும்.
 2. இயேசுவின் சிரசில் இருந்து வழியும் இரத்தம் மத் : 27 : 29 , 30 இயேசு ஒருவருக்குமாத்திரம் முள்முடி சுமத்தப்பட்டது. முள் சாபத்திற்கு அடையாளம். முதலில் தேவன் முள்ளை உண்டாக்கவில்லை தேவனுக்கு கீழ்படியாமல் போனதால் முள் உண்டாக்கப்பட்டது ஆதி : 3 : 18. தேவனது கோபமும் , தேவனது சாபமும் இனைந்தது தான் முள். தேவனின் சாபம் தேவனால் நீக்கப்படுவதற்க்கு இயேசு முள்முடி சுமந்தார். இயேவின் சிரசில் வழிகிற இரத்தம் இந்த சாபத்தை நீக்கியது. கலா : 3 : 13, உபா : 23 : 5, வெளி : 22 : 3
 3. கைகளில் வழியும்
  இரத்தம். யோவா : 20 : 27. இந்த இரத்தத்தின் வெளிப்பாடு என்ன ? இயேசு நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் ஏசா : 49 : 16. யார் கர்த்தருடைய பர்வதித்தில் ஏறுவான். சங் : 24 : 4, யாக் : 4 : 8. நம் கைகளை சுத்திகரிக்க அவரது கையை காயப்படுத்திக் கொண்டார். நமது எதிர்காலம் நம்மிடத்தில்லை. நமது எதிர் காலம் காயம்பட்ட கைகளிலும் அதில் வழிந்த இரத்தில்தான் இருக்கிறது. எபே: 1:7
 4. இயேசுவின் கால்களில் பாதங்களில் வழிந்த இரத்தம் சங் : 22 : 16. பிசாசு இயேசுவின் பாதத்தில் ஆணி கடாவினான். ஆனால் இயேசு அவன் தலையை நசுக்கினான். இது தற்செயலாய் நடக்கவில்லை. இது ஒரு தீர்க்கதரிசனம்தின் நிறைவு. ஆதி : 3 : 15 , தேவனது பழிக்கு பழி ஆதி : 9 : 5. பாதங்களில் வழியும் இரத்தத்தை விசுவாசத்தோடு கைகளில் எடுத்துக் கொள்ளுங்
  கள். லூக்கா : 10 : 19 சங் : 91 : 13
 5. இயேசுவின் முதுகில் வழியும் இரத்தம் மாற்கு : 15 : 15 இந்த இரத்தத்தின் தழும்புகளினால் நோய்கள் குணமாகும் ஏசா : 53 : 5. பேது : 1 : 24 மத் : 8 : 17. இயேசுவின் முதுகு உழப்பட்ட நிலம் போல் காட்சியளித்து காணப்பட்டது சங் : 129 : 3. மொத்தம் 39 கசையடி கள். ஒரு வெளிதேசத் தில் நடந்த டாக்டர்கள் கூட்டத்தில் மருந்து கண்டுபிடிக்காத வியாதிகள் எத்தனை என்று கேட்டார்கள். அதற்க்கு 39 வியாதிக் கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்று சொன்னார்கள். அதில் ஒரு மருத்துவர் இயேசுவின் முதுகிலும் 39 காயங்கள் தழும்புகள். மருந்து கண்டுபிடிக்கலாம் வியாதியும் 39. மருந்து கண்டுபிடிக்ககாத வியாதிகளுக்கு இயேசுவின் முதுகில் வழிந்த இரத்தத்தின் காயங்களும் தழும்புகளும்தான் கண்டு பிரிக்கமுடியாத வியாதிகளுக்கு மருந்து என்று சொன்னார். இயேசுவின் தழும்புகளால் குணமாவீர்கள்.
 6. இயேவின் விலாவில் இருந்து வழியும் இரத்தம் யோவா : 19 : 34

இந்த இரத்தத்தின் வெளிப்பாடு என்ன ? அன்று ஏவாலை உருவாக்க ஆதாமின் விலாவிலிருந்து உண்டாக்கப்பட்டது. அதைப் போல இயேசுவின் மூலம் மணவாட்டி சபை உருவாக்கப்பட இயேசுவின் விலா பிளக்கப்பட்டது அதில் வழியும் இரத்தம் தான் மணவாட்டி சபை. அப் : 20 : 28 இயேசுவின் சுய இரத்தத்த்தால் உண்டாக்கப்பட்ட சபை. எபே : 5 : 27. கறை திரை மற்ற மகிமையுள்ள சபையை உருவாக்கிக் கொள்ள அவருக்கேற்றது. இயேசுவின்சரீரத்தில் வழிகிற இரத்தம் இவ்வளவு மேலான மேன்மையான காரியங்களை செய்து வருவதை அறிந்துக் கொள்ளுங்கள். சிலுவையில் சிந்திய இரத்தமும் பல மாற்றத்தை இன்னும் செய்து வருகிறது. லேவி : 17 : 11. மாமிசத்தின் உயிர்
இரத்தத்தில் தான் இருக்கிறது. இவை தான் நமது ஆத்துமாவை சுத்திகறிக்கிறது. யாவரும் சொல்லுங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்றும், இயேசுவின் இரத்தம் சகலத்தையும்
சுத்திகரிக்கும்

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends