பனிப்புயலின் கொடுமைகளை தன் முதுகில் ஏற்று இளம் தலைமுறையை காப்பாற்றும் வியத்தகு உயிரினம்

Share this page with friends

பனிப்பிரதேசத்தில் வாழும் பென்குயின் பறவைகள், ஆளையே கொள்ளக்கூடிய, கொடிய பனிப் புயல் வீசும் காலங்களில், இன்னும் வளராத தங்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவதற்கு, குழுவாக ஒரு காரியம் செய்கின்றன. இளம் தலைமுறை பென்குயின்கள் நடுவே இருக்க, பெரிய பென்குயின்கள் தங்கள் முதுகை வெளிப்புறமாக காட்டிக்கொண்டு, வட்டமாக சுற்றிலும் நின்று கொண்டு, பனிப்புயலின் கொடுமையை தங்கள் முதுகிலே வாங்கி, இளம் தலைமுறைகளை காப்பாற்றி விடுகின்றன.

தேவனும் நம்மை அப்படித்தான் பாதுகாக்கிறார். நம் பாவங்களை பாரங்களை எல்லாம் அவர் சுமந்து கொண்டு, பாதுகாப்பையும் பராமரிப்பையும் நமக்கு அளிக்கிறார்.

பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.(சங்கீதம் 125:2). ஆண்டவராகிய இயேசுவின் வழியாய் பிதாவை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவருடைய பிரசன்னம் நம்மை சுற்றிலும் நிரப்புகிறது முற்றிலும் நிரப்புகிறது அழகாய் பாதுகாக்கிறது! ஆமென்.

GRACE India Ministries


Share this page with friends