சில ஆண்டுகளுக்கு முன்

Share this page with friends

சில ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி தற்போது தமிழ் கிறிஸ்தவ உலகில் வைரலாகி வருகிறது. நீண்ட தெரு முனை. அதில் சிறியதொரு மேடை. அதில் நவீன நாகரீகத்தை தொட்டு கூட பார்க்காத அழகிய சிறுவன் அங்கே தன் காந்த குரலால் இனிய இசையோடு இணைந்து இறைவன் இயேசுவை பாட்டினால் புகழுகிறான்.

காணொளியை வைத்து பார்க்கும் போது சிறுவனின் கால்களில் ஏதோ ஒரு பெலவீனம். ஆனால் அவன் இதயத்தின் ஓசை பலரின் மன பெலவீனங்களை மாற்றுகிறது.  இந்த காட்சியினை குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டை இந்த சிறுவன் பெற்றுள்ளார். நாமும் பாராட்டுவோம்..  மனதார ஜெபம் பண்ணுவோம். இந்த காணொளியை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி


Share this page with friends