ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம்

Share this page with friends

ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம்

(Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்)

விளம்பர பலகை ஒன்று இருந்தது, அதில் “இயேசு தான் பதில்” என்ற மேற்கோளுடன் எழுதப்பட்டிருந்தது. அதற்கு பொதுச் சுவற்றில் யாரோ ஒருவர் “கேள்வி என்ன?” என்று எழுதினார். சுவிசேஷம் என்பது ஒரு ஆவிக்குரிய பணி, கலைநயத்துடன் செய்ய வேண்டியது, அறிவியல் தொடர்புடையது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் சத்தியம், இது மக்களின் இருதயங்களையும் மனதையும் தொடும். மேலும் கிறிஸ்துவிடம் ஈர்க்கப்படுவதற்கும், உண்மையான தேவனை வழிபடுவதற்குமான இடத்தை அடையச் செய்யும் வகையில் நற்செய்தி வழங்கப்பட வேண்டும்.

பவுல் கிரேக்கத்தின் தலைநகரமான ஏதென்ஸின் தத்துவவாதிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் பிரசங்கிப்பது நமக்கு ஒரு சிறந்த போதனை மாதிரி.

1) ஜனங்களைப் பாராட்டுங்கள்:
பவுல் ஏதென்ஸின் மக்களைப் பாராட்டத் தொடங்குகிறார். அவர் அவர்களை ‘பாவிகளே’ அல்லது ‘விரியன் பாம்பு குட்டிகளே’ என்று கடுமையாக அழைக்கவில்லை. ஆம், சுவிசேஷத்தை அன்பான அணுகுமுறையுடன் பகிர்வது மிக அவசியம். “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்” (எபேசியர் 4 :15). நம்மையும் அன்பில் சத்தியத்தை கலந்து பேசவே பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார்.

2) தேவ பக்தியை உறுதிப்படுத்துங்கள்:
பவுல் தன்னை நோக்கி பார்ப்பவர்களின் மதத் தேடலை உறுதிப்படுத்தினார். “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” (அப்போஸ்தலர் 17:22) என்றார். எல்லா மனிதர்களுக்கும் நித்தியத்தைக் குறித்து ஒரு தேடல் உண்டு. சிலர் இதை வெளிப்படையாக காண்பிப்பார்கள், மற்றவர்களில் அது செயலற்றதாக இருக்கும்.

3) மற்றவர்களின் ஞானத்தை ஒப்புக் கொள்ளுங்கள்:
பவுல் அவர்களுடைய புலவர்களில் அல்லது கவிஞர்களில் ஒருவரை மேற்கோள் காட்டினார் (அப்போஸ்தலர் 17:28). அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுடைய இலக்கியம், கலாச்சாரம், அறிவுசார் வலிமை மற்றும் ஆன்மீக /ஆவிக்குரிய தேடலை பவுல் மதிக்கிறார் என்பதை அறிய முடிகின்றது.

4) அணுகுவதில் உத்தியை கடைபிடியுங்கள்:
பவுல் அவர்களின் மதத்தைப் புரிந்துகொள்வதற்காகச் சென்றதாகவும், கிரேக்க வழிபாடுகளையும் வழிபாட்டுக்கான கூறு (object) என்ன என்பதை கவனித்ததாகவும் பகிர்ந்து கொண்டார். பவுல் அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முன்பு அவர்களைப் பற்றி அறியத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகிறார். அப்படி ஒருநாள் அவர்கள் கல்வெட்டின் ஒன்றில் ‘அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதியிருப்பதைக் கண்டார் (அப்போஸ்தலர் 17:23). அதை தனக்கான துருப்புச் சீட்டாக அல்லது பாலமாக பயன்படுத்தி மீட்பிற்கான சுவிசேஷத்தை முன்வைக்க பவுல் முயன்றார். அவர்கள் அறியாமையில் அல்லது அறியாப்படாமல் வணங்கிய தேவனை பவுல் அவர்களுக்கு அறிவிக்கிறார்.

5) மேல்முறையீடு செய்யுங்கள்:
மனந்திரும்பும்படி பவுல் அவர்களிடம் முறையிடுகிறார். “அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 :30, 31) என பவுல் தெரிவித்தார்.

பவுலின் பேச்சினால் தியொனீசியு மற்றும் தாமரி மற்றும் இன்னும் சிலர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக மாறினார்கள் (அப்போஸ்தலர் 17:33).

நான் மற்றவர்களுடன் சுவிசேஷத்தை அன்பாக பகிர்ந்து கொள்கிறேனா? என சிந்திப்போம்.


Share this page with friends