தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

Share this page with friends

தேவ ஊழியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு போதகர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், நீங்கள் அனைவரும் உங்கள் திருச்சபையில் நடைபெறும் அனைத்து, திருமணம், பிறந்தநாள், திருமண நாள், மற்ற அனைத்து நிகழ்வுகளையும் குறைந்தது ஒரு வருடமாவது தள்ளி வையுங்கள், எதற்காக என்றால், உங்களை நம்பி தேவன் கொடுத்த தேவனுடைய ஊழியம், குடும்பம் இருக்கிறது நீங்கள் இவர்களுக்கு தேவை என்பதை மறந்துவிடாதீர்கள், இந்த காலகட்டத்தில் நீங்கள் தேவனுக்கு தேவை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

உங்கள் திருச்சபையில் மிகவும் தவிர்க்க முடியாத இயற்கை மரணம் ஏற்ப்பட்டது என்றால் கலந்து கொள்ளுங்கள், அதுவும் சிறிது தூரம் தள்ளி இருங்கள். கொரோனா தொற்று உள்ளவர்கள் மரணம் அடைந்திருந்தால் முடிந்த வரை தவிர்த்து விடுங்கள், வீடியோ காட்சிகள் முலம் அடக்க ஆராதனை நடத்துங்கள். விசுவாசிகள் தவறாக நினைத்து கொண்டாலும் பரவயில்லை, உங்களுக்கும் மனைவி, பிள்ளைகள், வயது முதிர்ந்த பெற்றோர் உண்டு என்பதை மறக்க வேண்டாம், அது உங்களை மட்டும் பாதிக்காது உங்கள் குடும்ப நபர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்


1. நீங்கள் தேவனுக்கு தேவை
2. உங்களுக்கு மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உண்டு
3. உங்களை நம்பி தேவன் கொடுத்த சபை உண்டு
4. நீங்கள் இந்த காலத்தில் செய்ய வேண்டிய ஊழியம் இருக்கிறது.
இது ஒரு மிகவும் கடினமான காலம், இந்த காலத்தில் தான் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய தேவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதிகமாக வெளியில் செல்ல வேண்டாம். 15 நாள்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள் முடிந்தால் மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வங்கி வைத்து கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து ✋ கை உறைகனை அணிந்து வெளியில் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் பாதுகாத்து நடத்துவாரக. நங் நன்றி

Rev. A. George Fernandes
Chennimalai


Share this page with friends