போதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்

பிதாவே, எங்கள் ஆண்டவரே
- போதகர்களாகிய எங்களில் துர்க்குணங்கள் இருந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய எங்களில், இரகசிய பாவங்கள், தவறான தொடர்புகள் இருந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபைகளை வியாபார ஸ்தலங்களாக மாற்றியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், காணிக்கைகளையும், தசமபாகங்களையும் சார்ந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், ஒருவரையொருவர் பகைத்து சகோதர அன்பை இழந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய எங்களில், சுவிசேஷபாரம் குறைந்து, சுவிசேஷ ஊழியத்தை அலட்சியப் படுத்தியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சுவிசேஷக் காரியமாக காணிக்கைகளைச் செலவு செய்யாதிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபை வெறியையும், ஜாதி வெறியையும் காண்பித்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், கிறிஸ்துவை விட சபையையும், சபை மக்களையும், காணிக்கையையும் மதித்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சுயநலத்துக்காக சபையில் தேவையற்ற சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், பிரசங்கப் பீடத்தை தேவநடத்துதலின்படி பிறருக்கு விட்டுக் கொடுக்காத நிலையை மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபையின் வருமானத்தை பிழைப்பிற்குரிய வழியாக எண்ணியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபைகள் மூடியிருக்கும் நிலையிலும் எங்கள் குறைகளை உணராதிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய எங்களுக்குள், ஆவிக்குரிய பெருமை, பாஸ்டர் என்கிற ஆணவம் வந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், அதிகாலை ஜெபத்தை முக்கியப்படுத்தாமல் தூங்கியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபை பதவிகளைப் பிடிக்க சூழ்ச்சி செய்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள் பட்டங்களையும், பதவிகளையும் முன்னிறுத்தி எங்களைப் பெருமைப்படுத்தியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், எங்கள் சபை, எங்கள் ஸ்தாபனம், எங்கள் சபை மக்கள் என சுயமாக உரிமைப் பாராட்டியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், வேதவசனத்தை சுயநலத்துக்காக கலப்படமாகப் புரட்டி பேசியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபையிலுள்ள ஏழைகளை, திக்கற்றவர்களை, விதவைகளை உண்மையாய் விசாரிக்க மனமற்று இருந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், தவறான உறவு முறைகளை ஊக்குவிக்கவும், விவாகரத்துக்களை ஆதரிக்கவும் செய்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், கர்த்தருடைய உபதேசத்தைக் காண்பிக்காமல், எங்கள் வியாக்கியானங்களைப் பெருமைக்காக வெளிப்படுத்தியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், உபவாசங்களை மறந்து ஆகார மோகத்திற்கும், தியாகங்களை மறந்து உல்லாசத்திற்கும் இடம் கொடுத்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், காணிக்கைப் பணத்தை தேவையுள்ள பிற ஊழியங்களுக்கு கொடாமல், எங்கள் சுயநலத்திற்காக செலவழித்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், எங்களுக்குரிய தசமபாகத்தை எங்கள் ஸ்தாபனத் தலைமைக்கு, அப்போஸ்தல ஊழியங்களுக்கு கொடுக்காமல் திருடியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், கடைசிக்காலம் என்பதை மறந்து பெருமைக்காக கட்டிடங்களை கட்டவும், நிலங்களை வாங்கிக் குவிக்கவும் துணிகரம் கொண்டிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபையை உற்சாக மனதோடும், ஆவியானவர் நடத்துதலின்படியும் நடத்தாதிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், ஆவியானவர் தந்தருளும் வார்த்தைகளுக்குக் காத்திராமல் சுயமாய் ஆயத்தம் செய்து பிரசங்கித்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சுயநலத்திற்காக, ஆதாயத்திற்காக தகுதியில்லாத நபர்களுக்கு சபைப் பொறுப்புகளை வழங்கியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள் சுவிசேஷ ஊழியர்களை, எங்கள் காணிக்கைகளை திருடுகிறவர்களாக, சபைக்கு எதிரானவர்களாக, அழைப்பில்லாதவர்களாக அற்பமாய் பேசி அலட்சியப்படுத்தியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், எங்கள் குடும்பங்களை நன்றாய் விசாரிக்காமலும், எங்கள் பிள்ளைகளை நல் ஒழுக்கத்தில் வளர்க்காமலும், எங்கள் உறவுகளை மதியாமலும் இருந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், எங்கள் மனைவியை கனப்படுத்தாமலும், மனைவிக்கு உண்மையாயிராமலும் துரோகம் செய்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், உண்மையான அர்ப்பணிப்புள்ள உடன் ஊழியர்களை உருவாக்காமல் மனமற்று இருந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், எங்கள் சுயநலத்திற்காக சபையின் வளர்ச்சியை, சபையின் ஒற்றுமையை கெடுத்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், பிரசங்க பீடத்தில் நின்று மாம்ச எழுச்சி கொண்டு, அடாவடித்தனமாகப் பேசியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபையில் ஒரு சிலரை எங்கள் ஆதரவாளர்களாகவும், ஒரு சிலரை எங்கள் எதிராளிகளாகவும் நினைத்து பாகுபாடு காண்பித்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபை மக்களை கடினமாய், இறுமாப்பாய், வெறுப்பாய் ஆளுகை செய்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், மனிதர்களால் வந்த உபத்திரவங்களால், பிசாசின் போராட்டங்களால், பொருளாதார கஷ்டங்களால் சோர்ந்து போயிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், ஆதியில் கொண்டிருந்த தரிசனங்களை, வைராக்கியத்தை, கண்ணீரின் ஜெபத்தை இழந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், நன்றியை மறந்த மனிதர்களால், சரீர பெலவீனங்களினால், பல வித தடைகளினால் மன மடிவாகியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், தேவ பிரசன்னத்தை ஆராதனையில் முக்கியப்படுத்தாமல் இசையை, ஒலிபெருக்கியை, விளக்குகளை சார்ந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், செல்போனை கம்ப்யூட்டரை தவறான நோக்கத்திற்க்காக பயன்படுத்தியிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், சபையை கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்று சாட்சியை இழந்திருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய எங்கள் நாவில் பொய், இரண்டக பேச்சு, தூஷணம், வம்பு, புத்தியீன பேச்சு புறப்பட்டிருந்தால் மன்னியும்.
- போதகர்களாகிய நாங்கள், பரிசுத்தவான்கள் என்பதை மறந்து இழிவான, கேவலமான, அருவருப்பான ஆசை இச்சைகளுக்கு இடம் கொடுத்திருந்தால் மன்னியும்.
நாம் சுத்திகரிக்கப்பட்டால் தேசம் பாதுகாக்கப்படும்.
செலின்