அவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு

Share this page with friends

கர்த்தர் வருகையில் அவனவனுடைய சொந்த கிரியைகளுக்கு ஏற்ற பலன் அவரோடு கூட வருகிறது என்று சொல்லப்பட்ட வசனங்களை கர்த்தர் நமக்கு எழுதி தந்து இருக்கிறார்.

நேகேமியா அலங்கம் கட்டும் போது அவனவன் தனக்கு கொடுக்கப்பட்ட கிரியைகளை சரியாக செய்ததினால் தான் அந்த அலங்கம் கிட்டத்தட்ட 52 நாட்களில் கட்டபட்டது.

  1. அவரவர் வேலையை செய்ய கூடி வந்தார்கள். 4:15

*எப்படி?”

a. அவரவர் தன் கையினால் வேலை செய்தார்கள். 4:17

b. அவரவர் பட்டயத்தை பிடித்து வேலை செய்தார்கள் 4:18

c. அவரவர் வேலைக்காரரோடு சேர்ந்து வேலை செய்தார்கள் 4:22

d. அவரவர் தன் சகோதரர்களிடம் தங்கள் குறைகளை சரி செய்தார்கள். 5:7

  1. அவரவர் வீடுகளுக்கு எதிரே பழுது பார்த்து கட்டி, அவரவர் வீடுகளுக்கு கவலாளிகளை ஏற்படுத்தினர். 3:28, 7:3
  2. அவரவர் பட்டணங்களில், காணிகளில், சுதந்திரத்தில் குடி இருந்தனர். 11:3, 20
  3. லேவியரை அவரவர் நிலையில் ஏற்படுத்தி, அவரவர் கூடாரம் அமைத்து கூடார பண்டிகை ஆசரித்தனர். 8:14-16, 13:10-11

எனவே புதிய ஏற்பாட்டில் கூட கர்த்தர் இந்த காரியத்தில் கவனமாக இருக்கிறார்.

A. அவனவன் தன் சொந்த வேலையை அலுவல்களை செய்து சொந்த சாப்பாட்டை சாப்பிடக்கடவன். ஏனெனில் அவனவன் வேலைக்கு தக்கதாக கூலியை பெறுவான். I Cor 3:8, I Thes 4:12 II These 3:12

B. அவனவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த கடவன் I Tim 5:4, 3:4-12

எப்படி?

  1. அவனவன் சொந்த சரீரத்தை பரிசுத்தமாக கனமாக ஆண்டு கொள்ளக்கடவன்.
  2. அவனவன் சொந்த மனைவி, அவளவள் சொந்த புருஷனை உடையவளாக இருக்க வேண்டும் I Cor 7:2, Eph 5:28-33, I Peter 3:1
  3. அவனவன் தன் தன் சொந்த சகோதரர்களின் தப்பிதங்களை மன்னிக்க வேண்டும். மத 18:35
  4. அவனவன் தன் தன் சொந்த ஜனத்தின் மேல் கருசனை உள்ளவனாக இருக்க வேண்டும். I Tim 5:8

C. அவனவன் தன் தன் அழைப்பில், கிருபையின் பகர்ந்தளிப்பில், தன் தன் வாரத்தில், ஊழியத்தில் கிரியை செய்ய வேண்டும். 1Cor 7:17-20, 24, 3:10, Luk 19:15 and I pete 4:10

அவனவன் வரவுக்கு தக்கதாக ஊழிய காரியங்களுக்கு உற்சாகமாக ஒவ்வொரு வாரமும் காணிக்கை சேகரித்து வைத்து கொடுக்க வேண்டும். 1Cor 16:2, II Cor 9:7

D. கடைசியாக, அவனவன் வேலைப்பாடு சோதிக்கப்பட்டு, அவனவன் தன் தன் வரிசையில் உயிர்ப்பிக்கப்படிவான். 1Cor 15:23 கால 6:4

ஏனெனில் நீங்களும் நானும் அவரது சொந்த இரத்தத்தால் மீட்கப்பட்ட சொந்த ஜனமாக இருந்து அவரது வெளிச்சத்தை கொடுக்க அழைக்க பட்டு இருக்கிறோம். அவரது சொந்த ரத்தத்தால் மீட்கப்பட்ட நாமும் அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனை அடைவோம் என்பது நிச்சயமே! அவர் சீக்கிரம் அவைகளோடு வருகிறார்.

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends