அம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு!

Share this page with friends

அம்னோன் – தாமாரின் வாழ்வில் இருந்து இன்றைய வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஓர் எச்சரிக்கை பதிவு!

அன்பு, நேசத்தின் மற்றும் காதலின் பெயரில் இன்று உலகில் நடக்கும் கூத்துக்கள் பல. உண்மையான அன்பிற்கும், infatuation அதாவது உணர்ச்சியின் அடிப்படையில் வரும் ஆசைக்கும் அல்லது மோகத்திற்கும் இடையில் உள்ள சத்தியத்தை ஆராயும் ஓர் பதிவு!

அம்னோன் தாமாரை மோகம் கொண்டு ஆசை வைத்தான் என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஆனால் அதே நேரத்தில் சாலோமன் ராஜா தான் எவ்வளவு முயற்சி செய்தும் தன் நேசருக்கு கொடுக்க வேண்டிய உண்மையான நேசத்தை விட்டு கொடுக்காத சூனேமித்தியாளையும் இந்த வேதாகமம் நமக்கு கற்று தருகிறது.

எனவே உண்மையான கர்த்தரின் அன்பை அறிந்து கொள்ள மோகத்தின் அல்லது false ஆசையின் 7 விதமான pitfalls குறித்து தியானிக்க கர்த்தர் அருள் புரிவாராக!

A. It will weaken our personilty. இந்த மோகத்தின் பொருட்டு வரும் ஆசை நமது ஆளத்துவத்தை கெடுத்து விடும்.

மனிதன் ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தின் பிணைப்பால் ஒன்றாக செயல்படும் விதத்தில் சிர்ஸ்டிக்கபட்டுள்ளான். தேவ சாயல் நமக்குள் இருக்கிறது. உண்மையான கிறிஸ்துவின் அன்பு இருந்தால் அந்த சாயலில் நாம் பூரணம் அடைய அது உதவி செய்யும். ஆனால் இந்த மோகத்தின் ஆசை அம்னோனை பெலேவீன படுத்தியது. அவன் ஏங்கி ஏக்கம் கொண்டு, வியாதி பட்டு மெலிந்து போனான் என்று வசனம் நமக்கு சொல்கிறது. சாப்பிட முடியாமை, தாடி வளர்த்தல், பயம், சந்தேகம், தீடீர் கோபம், நாவு அடக்கமின்மை, பேசி கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம், வார்த்தைகளை அடக்க முடியாமை, எரிச்சல் போன்றவை இந்த மோகத்தின் வெளிப்பாடே. சிம்சோன் சாவுகேதுவாக விசனபட்டு தான் தன் இருதயத்தை ஊற்றி விட்டான். அதுவே அவனுக்கு கண்ணியாக மாறிவிட்டது. உண்மையான அன்பு வள வள வென்று பேசாது. அர்த்தமற்ற பேச்சுக்களை தவிர்க்கும், கடலை போடாது, மனம் பதறி வார்த்தை கிடைக்காமல், எதாவது பேச வேண்டும் என்று பேசுதல் போன்றவை தான் இந்த மோகத்தின் வெளிப்பாடு. உண்மையான அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும். சத்தியத்தை பேசும்.

“The real love will elevate our personlity where as the fake infatuation will demotivate our real person”

B. The real love will be on its own where as the infatuation will pretend as if someone who disguises in fake shell. உண்மையான அன்பு தாம் தாமாகவே இருக்க செய்யும். மோகம் அபிநயம் செய்யும்.

இங்கு வியாதி இல்லாத அம்னோன் வியாதி பட்டவன் போல நடிக்கிறான். இங்கு ஒரு காரியத்தை அடைய நல்லவர் போன்று வேசம் போடவேண்டும். அவனின் உண்மையான சுபாவம் பொல்லாப்பு செய்கிறவன். மதுபான பிரியன். ஆனால் அதை மறைத்து நல்லவன் போன்று நடித்து அதே தாமார் கையில் பணியாரம் சாப்பிடுகிற அளவில் எல்லாரையும் நம்ப வைத்து முடிவில் தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தி விட்டான். எத்தனை நாள் தான் வேசம் போட முடியும். இயல்பாக நாம் நாமாக இருக்க முடியாமல் வேசம் போட்டு, நடவடிக்கைகளில் சில காரியங்களை சாதிக்க பொய்யான வேசம் போடுகிறோம் என்றால் நாமும் அந்த மோகத்தில் மாட்டி உள்ளோம் என்பதை புரிந்து இயல்பாக இருந்து பாருங்கள். அடிக்கடி கோபப் படுகிற ஒருவர் அதை மறைத்து கோபம் வாராதது போல action போட்டு நல்ல பிள்ளை வேசம் போட்டால் நாய் வாலை யாராவது நிமிர்த்த முடியுமா என்கிற பழமொழிக்கு உயிர் கொடுத்தது போல ஆகி விடும்.

There is no room for pretence and manipulation in genuine love but infatuation needs a lot to cover up and make up.

C. Real love faces the public where as the infatuation seeks for secret place. உண்மையான அன்பு சமூகத்தை நேரடியாக சந்திக்கும் ஆனால் மோகம் மறைவிடத்தை நாடி தேடும்.

அம்னோன் நன்றாக நடித்து தாமாரை தனியாக வர வளைத்து அவள் கையால் தான் சாப்பிடுவேன் என்று சொல்லி தன் சமூகத்தில் நின்ற எல்லாரையும் அப்புறப்படுத்தி தன் காரியத்தை நாசூக்காக முடிக்க திட்டம் போட்டான். யாரும் பார்க்க கூடாது! யாருக்கும் சொல்ல கூடாது! யாருக்கும் தெரிய கூடாது என்று எந்த உறவு மரைவிடத்தை நோக்கி போகின்றது என்று பார்த்தால் அது நிச்சயம் கள்ள உறவு தான். மறைவிடத்தில் வர நிர்பந்தம் செய்கின்றது. ஆனால் பொது இடத்தில் தாங்களாக இருக்க முடிவதில்லை. அடி வயிறு பற்றி கொண்டு இருக்கும். யாரும் கவனிக்க கூடாது என்பதில் நளினம் செய்யும் ஆனால் மறைவிடத்தில் எல்லாம் செய்ய எத்தனிக்கும். யாரகிலும் தன்னை தான் கானாதபடி மறிவிடங்களில் ஒளித்து கொள்ள கூடுமோ? கர்த்தர் சகலத்தையும் அறிவார். ஆனால் உண்மையான அன்பில் பயமில்லை. அது ரகசிய பாவத்திற்கு தன்னை விலக்கி காத்து கொள்ளும். உண்மையான அன்பு தேவையில்லாமல் இருவர் தனித்து இருக்க அனுமதிக்காது. தன்னை கட்டுபடுத்தி தங்கள் கற்பை காத்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தங்களை காத்து கொள்ளும். தேவையில்லாத தனிமை, பல இடங்களில் உணர்ச்சிகளை தூண்டி தேவையில்லா உரசல்களை ஏற்படுத்தி அதுவே பாவம் செய்ய தூண்டிவிடும். இச்சை அடக்கம், சுய கட்டுப்பாடு மோகத்தில் இல்லை.

Genuine love behaves well in the public and private where as infatuation leads to private freedom alone.

D. Real love accepts councel and stands for morality but infatuation rejects godly councel. உண்மையான அன்பு கற்புள்ள நலம் தரும் முதியோர், போதகர், மற்றும் வேத சத்தியத்தின் ஆலோசனைகளை செவி கொடுத்து கேட்கும். ஆனால் மோகம் ஆலோசனைகளை தள்ளிவிடும்.

அம்னோன் யோவாபின் தவறான தந்திர ஆலோசனைகளுக்கு செவி கொடுத்தான் ஆனால் தாமாரின் பரிசுத்த ஆலோசனையை தள்ளி விட்டு அவளை கெடுக்க பார்கிறான். இஸ்ரேவெலில் இப்படிபட்ட சம்பவம் நடக்க கூடாது. இதை செய்ய கூடாது என்று கெஞ்சி கேட்டும் அம்னோன் செவிசாய்க்க வில்லை. மாறாக அவன் முறை தவறி நடக்கக் நிர்பந்தம் செய்கின்ற காரியம் அங்கு நடக்கிறது. இன்றும் அநேக வாலிபர்கள் பெற்றோரை மிரட்டி நிர்பந்தம் செய்து, நாங்கள் மரித்து விடுவோம் என்று பயமுறுத்தி தங்கள் காரியத்தை சாதித்து விடுகின்றனர். தாமார் போன்று இன்றும் அநேக பெற்றோர் தவிக்கின்றனர். நமது சபையில் சங்கத்தில் இப்படிபட்ட காரியங்கள் நடக்க கூடாது, அந்நிய நுகத்தில் நாம் பிணைக்க பட கூடாது என்று எப்படி எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை. உண்மையான அன்பு கற்பு, பரிசுத்தம், கீழ்ப்படிதல், செவி சாய்த்தல், பரிசுத்த வாங்களோடு ஆலோசித்தல், பெற்றோரை நிர்பந்தம் செய்யாமல் அவர்கள் நன்மதிப்பை மரியாதையை கெடுக்காமல் இருத்தல் போன்ற நற்குணங்கள் கொண்டு அலங்கரிக்க பட்டு இருக்கிறது. ஆனால் இந்த மோகத்தில் அவசரம், பொறுமையிழந்த நிலை, யார் பேச்சும் கேட்காமல் தங்கள் போலி நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற காரியங்களுக்கு செவி கொடுத்து அனுபவ முதிர்ச்சி இல்லாத தீர்மானங்களை எடுத்து முடிவில் தங்கள் வாழ்வை கசப்பாக்கி கொள்கின்றனர். இயேசு கிறிஸ்து பிதாவின் சிதத்தையே செய்து முடித்து நல் மாதிரியை வைத்து போனார். சபை, பரிசுத்தவான்கள், முதிர்ந்தவர்கள் மற்றும் பெற்றோர் ஆலோசனைகளுக்கு செவி கொடுக்காமல் எடுக்கும் எத்தகைய தீர்மானங்களும் முடிவில் துக்கத்தையே கொண்டு வரும்.

Real love seeks for wisdom where as infatuation seeks for adjustment.

E. Genuine love never cross limits where as infatuation is quick enough to enjoy. உண்மையான அன்பு பொறுமையை காத்து கொள்ளும் ஆனால் மோகம் அற்ப இன்பத்தை அனுபவிக்க துடிக்கும்.

தாமார் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அம்னோன் செவி சாய்க்க வில்லை. நிர்பந்தம் செய்து அவளை அனுபவித்தான். தந்தரமாக இங்கு வேலை செய்து காரியத்தையும் சாதித்து விட்டான். வலுக்கட்டாயமாக மானபங்கம் செய்து விட்டான். திருமணம் என்கிற உறவில் வெளிப்பட வேண்டிய, அந்த அருமையான பரிசுத்த மெய் விவாகத்தில் கொடுக்க வேண்டிய sex என்னும் பரிசை உடைத்து விட்டான். வரம்பு மீறி விட்டான். முறை தவறி விட்டான். கட்டுப்பாடு இழந்து விட்டான். தேவ சமூகத்தில் செய்ய வேண்டிய உடன்படிக்கையை அல்ல தட்டி தன் காரியத்தை சாதித்து விட்டான். அவன் வன்மம் அவளை சாய்த்து விட்டது. அந்தோ பரிதாபம்! அவள் கற்பு சூறை யாட பட்டது. ஆனால் உண்மையான அன்பில் பொறுமை இருக்கும், அயோக்கிய மானத்தை செய்யாது, அவசரபடாது, கற்பை காத்து கொள்ளும், திருமணத்திற்கு முன் சரீர நெருக்கம் காட்டாது. இது நீடிய பொறுமை உள்ளது. வலுக்கட்டாயமாக சாதிக்க நினைக்காது. முரண்டு பிடிக்காது. கிறிஸ்து நமக்காக பொறுமையோடு சிலுவையை சகித்து பிதாவின் மூலம் கனம் பெற்று நல்ல மணவாளன் போன்று கரை திரை யில்லாத மணவாட்டியாக நம்மை சேர்த்து கொள்ள நீடிய பொறுமை உடையவராக இருக்கிறார். எனெனில் மெய்யான அன்பு சத்தியத்தை நம்பும், அதில் சந்தோஷப்படும். தீமையை வெறுக்கும்.

Genuine love is long suffering where as infatuation seeks for fulfilling just desires.

F. Genuine love accepts the results but infatuation rejects after the attainment of self goals. உண்மையான அன்பு விளைவுகளை சந்திக்கும். ஆனால் மோகமோ விளைவுகளை உதறிu தள்ளி விடும்.

காரியம் முடிந்த உடன் அம்னோன் தாமாரை வெறுத்து விட்டான் என்று வேதம் நமக்கு கற்று தருகிறது. ஆசையின் மோகம் அனுபவித்த உடன் வெறுப்பை கொட்டியது ஆனால் அன்பின் செயலோ இன்னும் உறவை வலுப்படுத்தும். அன்பு குடும்பத்தை உறவில் பாது காக்கும். காப்பாற்றும். அதின் முலம் தேவ திட்டத்தை நிறைவேற்றும். மோகம் வெறுப்பையும், கசப்பையும், வெறுமையையும் பிறப்பிக்கும். ஆனால் உண்மையான அன்பு சகலத்தையும் சகிக்கும், தாங்கும் மற்றும் பொறுக்கும். அன்பு இறுமாப்பாக இருக்காது. சினம் அடையாது. தீங்கு நினையாது. விசுவாசம், நம்பிக்கையின் அடிப்படையில் செயல் பட வைக்கும் இந்த அன்பே பெரியது.

Genuine love builds character whera as infatuation destroys it’s family relationship.

G. Finally real love gives life where as infatuation destroys the life. முடிவில் அம்னோநின் இந்த செயல் கசப்பை கொண்டு வந்து அழிவை கொண்டு வந்தது.

ஒரு காரியத்தின் துவக்கத்தை விட அதின் முடிவு மிகவும் முக்கியம் வாலிபர்களே! தாமார் கிலேசத்தொடு, வெட்கத்தோடு, தன் வாழ்வு சீரழிந்த நிலையில் தன் வீடு போய் சேர்ந்தாள். ராகேல் அழகு உள்ளவள் தான் ஆனால் யாக்கோபுன் அன்பை அவளால் நேர்த்தியாக பெற முடிய வில்லை. அழகு வஞ்சனை உள்ளது ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற ஷீரியே புகழப் படுவாள். கர்த்தருக்கு பயப்படுகிற மனுசன் தான் ஆசீர்வதிக்க படுவான். ஆனால் இங்கு என்ன நடந்தது? அம்னோன் பழி வாங்க பட்டான். தாமாரின் அண்ணன் அப்சலோம் அவனை விருந்துக்கு அழைத்து மது அறிந்த வைத்து கொன்று போட்டான். அந்தோ பரிதாபம். தாவீது ராஜாவின் முதற் பேரான அம்னோன் பட்டயத்தை கொண்டு அழிக்க பட்டான். அவன் செய்த தவறு இந்த தாமாரை இன்னும் விசனத்திலே வைத்து விட்டது.

எனக்கு அன்பான வாலிபர்களே கிறிஸ்துவின் அன்பு நமக்கு நித்திய ஜீவனை பெற்று தருகிறது. அந்த அன்பில் சந்தோசம், தயவு, நற்குணம், விசுவாசம், இச்சையடக்கம், கற்பு, கன்னி தன்மையை காத்தல், பரிசுத்தம், பொறுமை, கீழ்ப்படிதல், போன்ற நல்ல வாழ்வியல் அடிப்படை சத்தியங்களில் ஸ்தாபிக்க பட்ட கண்மலையின் மேல் கட்டப்பட்ட ஒரு மாளிகையாகும். அதில் பரிசுத்த ஆவியானவர் ஆச்சாரமாக இருக்கிறார். ஆனால் மோகம் நம்மை அழித்து விடும் பொருமையின்மை, அவசரம், அனுபவித்தல், கசப்பு, வெறுப்பு, பொல்லாப்பு, கர்பை இழத்தல், ஆலோசனைகளுக்கு செவி கொடுக்காமை போன்ற கெட்ட நடக்கைகளால் உறுதிபடுத்த பட்ட ஒரு மூழ்கடிக்கப்பட்ட ஒரு கப்பல் ஆகும்.

Therefore determine in the Lord and in His love because His love never disappoints us and we shall be a faithful generation for His kingdom to reflect His glory forever. May the Lord prepare us to meet him in the cloud because He is going to come very soon to take us up in the clouds and for the wedding in His kingdom.

God bless
Selin.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends