கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை

Share this page with friends

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை சென்னை சேர்ந்த இரு கிறிஸ்தவ சிறுவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

ஆம் நீங்கள் காணப்போகும் இந்த காணொளி  உங்களை ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை புரசவாக்கத்தை சேர்ந்த திரு. நாராயண் என்பவரின் பிள்ளைகளான அபிஷேக் இம்மானுவேல் ஜோசப் (வயது 10) இவரது தம்பி கெவின் எபினேசர் ஜோசப் (வயது 8) இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் 1000 வசனங்களை இடைவிடாமல் பிழையில்லாமல் ஒரு மணி நேரம் 9 நிமிடங்களில் மனனமாக கூறி உலக சாதனை படைத்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் 1000 வசனங்கள் பார்த்து வாசிக்க சொன்னால் கூட நாம் தடுமாறும் நிலையில் 10 வயது மற்றும் 8 வயது சிறுவர்கள் மனனமாக கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. ISO தர சான்று முத்திரை படைத்த யூனிவர்செல் அச்சூவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும்  future Kalam’s book of Records இந்த ஆச்சரியமூட்டும் சாதனையை அங்கிகரித்து கடந்த 2021 பிப்ரவரி 26 அன்று இதனை உலகசாதனையாக அறிவித்து சான்றிதல் வழங்கியுள்ளது. பின்னர் புதிய வாழ்வு JEMS பேராலயத்தை சார்ந்தவரும் பல்வேறு உலக சாதனைகளை அரங்கேற்றிய போதகர் ஐசக் டேனியல் அவர்கள் இவர்களுக்குரிய சான்றிதலை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் எப்படி உலக சாதனை படைக்க முடிந்தது.. அவர்களின் தாய் கூறும் சாட்சியை கேளுங்கள்.

உலக சாதனை படைத்த இந்த சிறுவர்களின் அடுத்த லட்சியம் சங்கீத புத்தகம் முழுவதையும் மனனமாக கூறுவது ஆகும்.  ஆச்சரியமூட்டும் இந்த சிறுவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அதேநேரம் இந்த சாதனைக்கு காரணமாயிருந்த பெற்றோரையும் நாம் நினைவுகூற வேண்டும்.  பிள்ளையாண்டானை நடக்க வேண்டிய வழியில் நடத்து. அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான் என்னும் வசனத்திற்கேற்ப மிக பிள்ளைகளை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த காணொளி நிச்சயம் பல கோணங்களில் உங்களோடு பேசியிருக்கும். பிறரை ஊக்கமூட்டும் இக்காணாளியை நீங்கள் பார்த்தவுடன் உங்களை சார்ந்தவர்களுக்கு மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் புத்துணர்ச்சியடையட்டும். நன்றி


Share this page with friends