ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்களின் செயல்பாடுகள்?

Share this page with friends

ஊர் சுற்றும் ஊழியர்களால் பாதிக்கப்படும் ஊழியங்கள்…

ஊழியங்களுக்காக ஊர் சுற்றலாம் ஆனால் ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றக் கூடாது. அப்படி ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்கள் அல்லது குழுக்கள் ஊழியங்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் யார் இவர்கள் என்ன செய்வார்கள் இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை கீழே சொல்கிறேன்…
ஊழியங்கள் இல்லாமல் ஊர் சுற்றும் நபர்களின் செயல்பாடுகள்?

 1. பொய்கள் அதிகம் பேசுவார்கள். அதாவது என்னை அவர் கூப்பிட்டார் இவர் கூப்பிட்டார் என்றவாறு…
 2. தங்கள் தேவைகளை முதன்மைப்படுத்தி பேசுவார்கள்..
 3. அடுத்த சபையின் விசுவாசிகளில் பணக்காரர்களை தெரிந்து கொண்டு அவர்கள் வீடுகளுக்கு சென்று ஜெபித்து காணிக்கை வாங்குவார்கள். மாதந்தோறும் சென்று அவர்கள் சபையின் போதகரை பற்றி தவறான கருத்துக்களை கூறி வழி விலக செய்வார்கள்.
 4. நிலம் வீடு மற்றும் பெண் மாப்பிள்ளைகள் தரகராக இருப்பார்கள்.
 5. தனியாக இருக்கும் விதவை பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களின் வீடுகளுக்கு சென்று நல்லது போல நடித்து அவர்களை ஏமாற்றி தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களை பிளாக்மெயில் செய்வார்கள்.
 6. சோம்பேறிகளாயும் தங்கள் வயிறு நிறைந்தால் போதும் என்று இருப்பார்கள்.
 7. தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்
 8. பணப்பிரச்சினையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க தவறான அணுகுமுறையை கையாள்வார்கள்.
 9. நடக்கும் எல்லா கூட்டங்களிலும் பங்கு கொண்டு எதாகிலும் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார்கள் அப்படி கிடைக்கவில்லை என்றால் அவர்களை குறைசொல்வார்கள்
 10. கள்ள தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்
 11. இல்லாததை பொல்லாததை சொல்லி அனைவருக்கும் இடறலாகவே இருப்பார்கள்.
  12.ஆத்தும பாரமோ தேவ பிரசன்னமோ தேவ கிருபையோ ஆவியின் கனியையோ அவர்களிடத்தில் காணமுடியாது.
 12. தங்கள் சாதி ரீதியாக அடுத்த சபை விசுவாசிகளை தங்கள் பக்கம் இழுத்து வந்து தேவ சித்தத்திற்கு விரோதமாக சபை ஆரம்பிக்க திட்டம் போடுவார்கள்.
 13. துர் உபதேசங்களை பணத்திற்காக பரப்பும் வகையில் செயல்படுவார்கள்.
 14. மொத்தத்தில் சொல்ல போனால் இவர்களும் சமாதானமாக இருக்கமாட்டார்கள் மற்றவர்களையும் சமாதானமாக இருக்கவிடமாட்டார்கள் ஆகவே இதற்கான விழிப்புணர்வுகளை திருச்சபையின் மக்களுக்குஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து தேவ ஊழியர்களும் திருச்சபையின் விசுவாசிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

Share this page with friends