அப்போஸ்தல நடபடிகளும் இன்றைய நிலைகளும்

Share this page with friends

இந்த புஸ்தகத்தை நாம் எளிதாக கடந்து விடமுடியாது. இங்கிருந்து தான் சபை சரித்திரம் ஆரம்பிக்கிறது. சபை பரவியிருக்கிறது. சபை பிரச்சினைகள் தீர்க்க பட்டிருக்கிறது. சபை ஒழுங்கு பண்ண பட்டிருக்கிறது. எனவே சபை ஊழியம் மற்றும் சுவிசேஷ ஊழியத்தின் மாதிரிகள் நிச்சயம் இங்கிருந்து எடுத்து கொள்ளலாம் மேலும் நமது இன்றைய சபையை பரிசோதித்து கூட பார்க்கலாம்.

A. பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பபடுதல். அதுதான் சபையின் starting point இதை நாம் இன்று எழுப்புதல் என்று சித்தரிக்கின்ரோம்.

அன்று
அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்து, தேவனை துதித்து கிறிஸ்துவின் மகத்துவங்களை தியானித்து, பரிசுத்த ஆவி வர அப்பட்டமாக விசுவாசித்து காத்திருந்தனர். அவர் எப்படி வருவார்! அடுத்து என்ன நடக்கும் என்று தங்கள் சிந்தையில் அனுமானிக்காமல், அவர்கள் ஒரே நோக்கம் பரிசுத்த ஆவியின் வல்லையால் நிரப்பபடவேண்டும் என்கிற உணர்வில் காத்திருந்தனர். பரிசுத்த ஆவி ஊற்றபட்டார். மீதி காரியங்களை பரிசுத்த ஆவி திட்டம் பண்ணினார், நோக்கம் அவரால் வகை படுத்தப்பட்டது, தரிசனம் அவரால் கொடுக்க பட்டது. மொத்தத்தில் எல்லா திட்டமும் பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்க அவர்கள் அதை நிறைவேற்றினார்கள்.

இன்று

நாமே திட்டம் பண்ணி விட்டோம். இப்படி தான் நடக்க வேண்டும் என்று கர்த்தரிடம் கோரிக்கை வைத்து காத்து இருக்கிறோம். வாரும் வாரும் என்று அவரை அழைக்கிறோம். அன்று பரிசுத்த ஆவி ஊற்றபட்ட பிறகு பேதுரு எழும்பினார். இன்று நாங்கள் தான் கடைசி கால எழுப்புதல் ஊழியர்கள் என்கிற சுய அடையாளத்தோடு பலர் எழும்பி விட்டனர். காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது. அதை அறிவது நமக்கு அடுத்த விஸயம் அல்ல. ஆனால் நாமே அறிந்து விட்டோம். நாமே காலத்தை தீர்மானித்து விட்டோம். நாமே அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்து எழுப்புதல் எழுப்புதல் என்று கத்துகிறோம்! எழுப்புதல் தரிசனம் என்று சொல்கிறோம். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை. காரணம் இன்னும் தெரியவில்லை.

NB: கர்த்தரின் வார்த்தையை அப்பட்டமாக நம்பி கீழ்படிந்து எந்த கிளர்ச்சியும் ஆடம்பரமும் இல்லாமல் என்ன நடக்குமோ! எப்படி நடக்குமோ! எப்படி ஊற்றபடுவாரோ! அடுத்த அடி எப்படி எடுத்து வைப்போமோ! என்று கூட யோசிக்காமல் அவர் வல்லமை பெற வேண்டும் ஒன்று பட்டு ஆர்பாட்டம் இல்லாமல் அவரை துதித்து ஒருமனபட்டு ஒரிடத்தில் வந்த போது பரிசுத்த ஆவி அவரது நாளில் ஊற்ற பட்டார். இந்த சரியான புரிதல் வாரத பட்சத்தில் நாற்பது வருசம் ஆனாலும் அந்த ஆதி அபிசேகம் ஊற்றப்படுவதிலை. வேற அபிசேகம் வேண்டுமென்றால் வந்து போகலாம்.

B. ஊழிய நோக்கம் அல்லது தரிசனம். இன்று நாம் சொல்கிற சபையின் target.

அன்று
பரிசுத்த ஆவியானவர் தான் கொடுத்தார். அவர் சொன்னார் அவர்கள் கேட்டார்கள் அதன்படி செய்தார்கள். அன்றைய நோக்கம்;

∆ கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிப்பது.
∆ மாறுபாடான ச விட்டு மனம் திரும்ப அழைப்பது
∆ சபையில் சேர்த்தல் மற்றும் பரிசுத்த ஆவிக்குள் நடத்துதல்
∆ ஜெபத்தில் மற்றும் உப்தேசத்தில் உறுதி படுத்தி சீசத்துவ வேலையை செய்த போது அவர் அற்புதம் செய்தார், மகிமை அவருக்கு கொடுக்க பட்டது.

இன்று.

∆ நமது நோக்கம் சபை எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்து. இத்தனை விசுவாசிகள் என்று தீர்மானம் செய்து போராடி ஜெபிக்கிறோம். எப்படியாவது எண்ணிக்கை கொண்டு வர ஒரு company owner போல என்னவெல்லாம் செய்கிறோம். எண்ணம் திட்டம் இட வெண்டுயது அல்ல தானாக சேர வேண்டியது.
∆ நமது நோக்கம் அற்புதம் அடையாளம். விளம்பரம் சொல்லி முடியாது. ஒரு ஆஸ்பத்திரிக்கும் கூட இப்படி இருக்காது. மனம் திரும்பி கிறிஸ்துவை ஏற்று கொள்ளுங்கள் மாறுபாடான சந்ததியை விட்டு விலகி உங்களை காத்து கொள்ளுங்கள் என்கிற சத்தியத்தை மறந்தே விட்டோம்.
∆ நமது நோக்கம் ஆசீர்வாதம். ஆசீர்வாதமான குடும்பம், வியாபாரம் ஆசீர்வாதமான சபை, ஆசீர்வாதமாக இருக்கும் மாநிலம் என்று எல்லாம் அடித்து விடுகிறோம். இரச்சிக்கபட என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு விடை இல்லை.
∆ அய்யா! உங்கள் சகோதரன், உங்கள் போதகர், தரிசனம் பெற்றவர் என்று நம்மை justify panna வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஊழியம் செய்து கொண்டு இருக்கிறோம். அன்று கிறிஸ்து திருஷ்டந்த படுத்த பட்டார். கர்த்தரின் வசனம் படி அவரை நீருபித்து காட்டினர். அவர் வசனத்தை ஊருதிபடுத்தினார். அவர் தனது ஊழியரை கனம் பண்ணினார்.

C. சபை வளர்ச்சி மற்றும் சபை பெருக்கம்.

அன்று

∆அது தானாக நடந்தது. ஆண்டுக்கு இத்தனை விசுவாசிகள் என்கிற ஒரு திட்டம் இல்லை. அவர் சொன்னதை செய்தார்கள் சபை 3000, திரள் என்று பெருகினது.
∆ மற்றவர்கள் சபையை குறித்து பயம் அடைந்தனர். ஒருவரும் சேர துணியவில்லை. சபையை துன்பபடுத்தியவனை ஊழியனாக மாற்றி சிலரை தண்டிக்கவும் செய்தார்.
∆ சபையார் ஊக்கமாக போதற்களுக்கு வேண்டி ஜெபித்தனர். தைரியமாக சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஜெபித்து வந்தனர்.
∆ ஊழியர்களின் வேலையும் ஜெபம் சுவிசேஷம் அறிவித்து சபை பக்தி வருத்தி அடைய செய்தனர். உபதேஸத்தில் உறுதியாக தரித்து இருந்தனர்.

இன்று

∆. சபை எண்ணிக்கை நம்மால் தீர்மானிக்க படுகிறது. வருடம் இத்தனை என்று target கொடுக்கிறோம்.
∆ உடன் ஊழியர்களை இதன் பெயரில் நிர்பந்திக்க உந்த படுகிறோம். எப்படியோ எண்ணிக்கை நிரப்ப பட வேண்டும்.
∆ ஊழியர்கள் தைரியமாக சுவிசேஷம் அறிவிப்பது இல்லை. தங்கள் பெயர் கெடாமல் மனுசரை பிரிய படுத்த பார்க்கிறோம். விசுவாசிகளை கொண்டு ஊழியர்களுக்காக ஜெபிக்கும் சத்தியத்தையும் கற்று கொடுக்க தவரினோம்.
∆ சபை கோட்பாடுகள் பெரிதாகி விட்டது. வசனம் சுருங்கி விட்டது. மனிதனுக்கு ஏற்றபடி வசனத்தை வளைத்து கொண்டு திருத்துவத்தில் ஒருவராய் கிரியை செய்யும் தெய்வத்தை பிரித்து விட்டோம்.

D. ஊழியம் மற்றும் ஊழியர்களை திட்டம் பண்ணுதல்.

அன்று

∆ சுவிசேச தேவையின் அடிப்படையில் தீர்மானித்தனர். அழைப்பின் அடிப்படையில் குறிக்க பட்டனர்.
∆ ஜெபித்து உபவாசம் செய்து பரிசுத்த ஆவியின் வழி நடத்துதல் அடிப்படையில் பிரித்து எடுத்தனர்.
∆ பரிசுத்த ஆவிதான் ஆளுகை செய்தார். எங்கு போக வேண்டும் வேண்டாம் என்கிற அவர் வரத்தை முன்னிட்டு வெளிப்பட்ட வார்த்தையில் செயல் பட்டனர்.
∆ பிரச்சினைகளை வேத வசனத்தின் அடிப்படையில் அபோஸ்தலர் முன்னிலையில் பேசி தீர்த்தனர். அதற்கு கீழ்படியவும் செய்தனர். பேதிருவை எதிர் கருத்து கேட்கும் உரிமை பவுலுக்கும் இருந்தது. ஒரு ஆத்துமாவையும் அதாயம் செய்யாத மாற்கும் பவுலுக்கு பயன் உள்ளதாக காணப்பட்டான்.

இன்று

∆ crowd எண்ணிக்கையின் அடிப்படையில் மரியாதை கொடுக்கப்படும்
∆ skils மற்றும் வரங்களின் அடிப்படையில் பயன்படும் போது தான் மரியாதை கிடைக்கும்
∆ அற்புதம் அடையாளங்கள் அடிப்படையில் மரியாதை கிடைக்கும்
∆ ஆழ்பிடி மற்றும் அந்தஸ்து அடிப்படையில் தான் ஊழியனும் அவன் அழைப்பும் கருத்தில் கொள்ளப்படும்.

நமது ஊழியங்கள் அதன் தரம் ஆதி காலத்திற்கு திரும்பப் வேண்டும். அந்த வாஞ்சை வேண்டும். அவர் வழி நடத்த விட்டு கொடுக்க வேண்டும். அவர் தீர்மானம் எடுக்கட்டும் நாம் அவர் சொல்வதை செய்வோம். ஆவியின் படி நடந்தால் மாம்ச இச்சயை நிறைவேற்றாமல் இருப்போம். நமக்குள் ஜீவன் இருக்கும். சபையின் ஜீவனும் நதி போல பரவி பாயும். இல்லையெனில் இப்படியே அவர் வருகை வரை போய் கொண்டே இருக்க வேண்டியது தான்.

செலின்


Share this page with friends