ஈசோப்பு

ஈசோப்பு என்றால் என்ன?

Share this page with friends

ஈசோப்பு என்றால் என்ன?

“நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்;
என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.”
(சங் 51:7)

ஈசோப்பு என்பது ஒரு “மூலிகைச் செடி” ஆகும். இதன் மூலிகைக் குணம் சரீரத்தின் வெளிப்படையான, உள்ளான காயங்களை ஆற்றி குணப்படுத்துவது. அதன் சாறு உள்ளுறுப்புக்களுக்கு பெலன் தர வல்லது.

இஸ்ரவேலர் தங்களின் புனிதச்செயல்களில், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை
ஈசோப்புப் செடியால் தொட்டு, எடுத்துத் தெளித்து, மற்ற பொருட்களையும், மனிதரையும்
சுத்திகரிப்பார்கள்.

“எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும்
எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு,இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:

“தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டஉடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.

“இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத்
தெளித்தான்.” நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே
சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
(எபி 9:19-22)

அசுத்தப் பாவத்தில் ஈடுபட்ட தாவீது ராஜா, நாத்தான் தீர்க்கதரிசியினால்,
உணர்த்தப்பட்டார். பாவ உணர்வடைந்த தாவீது ராஜா வின் உணர்ச்சிமிகு
மன்றாட்டுப்பாடலே, (சங்கீதம் 51.) தாவீது, ஈசோப்பினால் தன் மேல் இரத்தம் தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட விரும்பினார்.

இன்றும் கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த இரத்தம், பாவிகளாய்த் தங்களை உணரும்
ஒவ்வொருவரையும் “வார்த்தை” என்னும் சுத்தமான செடி தெளிக்கிறது.
சுத்தமாக்குகிறது.

பாவத்தினால் நேரிடும் உள்ளான,
வெளிப்பிரகாரமான காயங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தமே சுகமாக்கும்..

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
(யோவான் 17:17)


Share this page with friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *