முதன் முறையாக போப் பிரான்சிசுடன் அலி அல் சிஸ்தானி சந்திப்பு

மார் 07, 2021
உர்:ஈராக்கில் முதன் முறையாக கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிசும் ‘ஷியா’ முஸ்லிம் மதகுரு அயதுல்லா அலி அல் சிஸ்தானியும் சந்தித்து பேசினர்.
மேற்காசியாவைச் சேர்ந்த ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ் புனித நஜாப் நகரில் உள்ள அயதுல்லா அலி அல் சிஸ்தானி வீட்டிற்குச் சென்றார். அப்போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.அலி அல் சிஸ்தானி வீட்டு வாயிலுக்கு வந்து போப் பிரான்சிஸை வரவேற்று அழைத்துச் சென்றார். அவருக்கு தேநீர் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன.
குடிநீர் மட்டும் பருகிய போப் பிரான்சிஸ் அலி அல் சிஸ்தானியுடன் 40 நிமிடங்கள் பேசினார்.இது தொடர்பாக வாடிகன் தேவாலயம் வெளியிட்டுள்ள அறிக்கை:போப் பிரான்சிஸ் – அலி அல் சிஸ்தானி பேச்சில் உலக அமைதி ஒருமைப்பாடு சகோதரத்துவம் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஈராக் வரலாற்றில் வன்முறை ஓங்கியிருந்தபோது சிறுபான்மை கிறிஸ்தவர்களை பாதுகாக்க குரல் கொடுத்தவர் அலி அல் சிஸ்தானி.
ஈராக்கில் அமைதி திரும்பவும் பிற மதத்தினரைப் போல சகல உரிமைகளுடன் கிறிஸ்தவர்கள் சுதந்திரமாக வாழவும் பாடுபட்டவர். அதை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார் போப் பிரான்சிஸ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks: https://www.dinamalar.com/news_detail.asp?id=2724721