Sadhu Chellappa funeral service

சாது செல்லப்பா ஒரு சகாப்தம் – ஆவணப்படம்

Share this page with friends

Sadhu Chellappa funeral serviceதிரு. சாது செல்லப்பா அவர்கள் 2020 செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று வயது முதுமையின் காரணமாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். இறுதி வரை தேவனுக்காக ஓடிய அவருக்கு வயது 86.

1934 ம் ஆண்டு திருநெல்வெலி மாவட்டத்தில் பிறந்த இவர் சேலத்தில் வளர்க்கப்பட்டார். இந்திய வேதங்களான ரிக் யஷீர் சாம அதர்வன வேதங்களை தன் சிறு வயது முதல் பல குருக்களிடத்தில் கற்று தேர்ந்தவர். தீவிர ஆய்வில் இறங்கிய அவர் கோவில்களில் வேதங்களுக்கு முரணான நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் கண்டு தன் ஆசான்களிடத்தில் பல கேள்விகளைக் கேட்டார். பதில்களில் திருப்தி அடையாத அவர் இந்து மத நம்பிக்கையை விட்டு விட்டு நாத்திகரானார். தொடர்ச்சியான பல தோல்விகளுக்குப் பிறகு அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

தனது 33ம் வயதில் மெட்ராஸ் நகரில் ஒரு ரயிலில் இருந்து குதிக்கத் திட்டமிட்டு இரயிலில் ஏறினார். தூரத்தில் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் ஒரு போதகர் பரிசுத்த வேதாகமத்தை மேற்கோள் காட்டி ஒரு வசனத்தைக் கூறிக்கொண்டிருந்தார். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுபவன் இரக்கம் பெறுவான் (நீதிமொழிகள் 28:13) என்பதே அந்த வசனம். இரயிலில் யதார்த்தமாக கேட்ட இந்த வசனம் அவருக்குள் தேடுதலை தீவிரப்படுத்தியது. உடனடியாக அடுத்த நிலையத்தில் இறங்கி கிறிஸ்தவ கூட்டத்திற்கு நடந்தே சென்றார், அக்கூட்டத்தில் தனது வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் இதய பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இது மே 14, 1967 அன்று நடைபெற்ற சம்பவம்.

அன்று முதல் அவர் தனது சாட்சியை பலரிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். தினமும் நற்செய்தியைப் பிரசங்கித்தார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிரசங்கித்தார். ஆயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்று திருச்சபையில் சேர்க்கப்பட்டனர்.

1982 ஆம் ஆண்டில், அக்னி (தீ) என்னும் மாத இதழை தமிழில் வெளியிடத் தொடங்கினார், 1974 ல், அவர் முழுநேர சுவிசேஷகராக மாறினார்.  1995 ஆம் ஆண்டில் தேவாலயங்களை நிறுவ துவங்கினார். தோராயமாக 27 திருச்சபைகளை நிறுவினார். பல மிஷனெரிகளை வட இந்தியாவிற்கு அனுப்பி தாங்கினார்.

சாது செல்லப்பா அவர்கள் தமிழில் இருபத்தெட்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது புத்தகங்கள் ஒவ்வொன்றும் மிக பிரபலமானவைகள். பல்வேறு ஆராய்ச்சிக்குட்புகுத்தப்பட்டவைகள்.

1983 ஆம் ஆண்டில், சாது செல்லப்பா அவர்கள்  உலகளாவிய சுவிசேஷகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நேர்காணல் செய்யப்பட்டார். உலகளாவிய பிரபல பத்திரிக்கைகளில் இவரது வாழ்க்கை சரிதை வெளிவந்துள்ளது.
குறிப்பாக 1996 ஆண்டு மே மாதம் உலக பிரசித்தி பெற்ற “தி எட்ஜ்” என்ற பிரிட்டிஷ்  இதழ் இவரது வாழ்க்கை சரித்திரத்தை வெளியிட்டது.

இந்திய கலாச்சாரத்தோடு இந்தியர்களுக்கு இயேசு என்ற அடிப்படையில் சுவிசேஷம் அறிவித்தவர் ஐயா சாது செல்லப்பா ஆவார்.

கர்த்தரின் வார்த்தைகளை காவிகளும் காது கொடுத்து கேட்கும் வகையில் வேத புராண இதிகாச விளக்கங்களோடுஉலக வரலாற்று ஆதாரங்களோடு… அரசியல் அறிவியல் மற்றும்
பொது அறிவு புதையல்களோடு பொதுமைப்படுத்தியவர் சாது செல்லப்பா அவர்கள்..!

சாது செல்லப்பா அவர்களது மரணம் இந்தியாவிற்கு பெரும் இழப்பு. எனினும் அவரது நல் வாழ்வுக்காக தேவனை துதிப்போம். அண்ணாரது வாழ்வில் கண்ட நற்பண்புகளை நாமும் பின்பற்றுவோம்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு
தென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்
கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது
உலகிலேயே தமிழ் மொழிக்கான முதல் அச்சுக்கூடம் கண்ட புன்னைக்காயல்
கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்: அமைச்சா் பி. மூா்த்தி
இந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது
சேலத்தில் மதத்தின் பெயரால் அராஜகம் - தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!
கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக மு...

Share this page with friends