ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல்

Share this page with friends

ஒரு ஊழியரின் சிந்திக்கத்தக்க நேர்காணல்

கேள்வி: நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு காரியம் என்றால் என்ன?

பதில்: என்னையும் கர்த்தர் இந்த ஊழியத்திர்க்கு அழைத்து தெரிந்து எடுத்தாரே என்று நினைக்கையில் இன்னும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

கேள்வி: நீங்கள் வருந்திகொண்டு இருக்கும் விஷயம் என்றால் என்ன?

பதில்: இன்னும் பரிசுத்தமாக கிறிஸ்துவை போல மாற வில்லையே! இன்னும் கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கி ஏவப்பட முடியவில்லையே!

கேள்வி: நீங்கள் உங்கள் ஊழிய காலங்களில் அதிகமாக அர்பமாகவும் அதே நேரத்தில் இன்று அதிகமாக விலையேரப்பெற்றதாகவும் கருதும் ஒன்று என்றால் அது என்ன?

பதில்: கிறிஸ்துவின் கிருபையும் அவரது இரத்தமும். வாழ்வின் பாடங்களே இதன் முக்கியத்துவத்தை பெற்று தந்தன.

கேள்வி: நீங்கள் விரும்பும் பிரசங்க முறை?

பதில்: பரிசுத்த ஆவியின் நிறைவில் நின்று கொண்டு, அந்த flow வில் சத்தியத்தை சத்தியமாக பேசும் பிரசங்கம்.

கேள்வி: நீங்கள் அதிகமாக ஜெபிக்கும் ஜெபம் என்ன?

பதில்: உடைத்து உருவாக்கும், இந்த இந்த பாவங்கள் ஜெயிக்க இன்னும் கிருபை தாரும் என்பதே.

கேள்வி: நீங்கள் உள்ளம் உடைந்த அனுபவம் ஏதாவது?

பதில்: கிறிஸ்துவின் அன்பை நினைத்து கால்வாரியின் அன்பை நினைத்து தனிப்பட்ட விதத்தில் கலங்கினது உண்டு.

கேள்வி: அவமானம் பட்டது உண்டா? எதினால்?

பதில்: அதிகம்! உள்ளதை உள்ளதென்று பட்டென்று சொல்வதால்,

கேள்வி: நீங்கள் உங்களை குறித்து வருத்தப்பட்டது உண்டா?

பதில்: நிறைய, என்னால் கர்த்தர் விரும்பும் விதத்தில், தேவ சித்தத்தின் அடிப்படையில் பயன்பட முடிய வில்லையே!

கேள்வி: நீங்கள் சந்தித்த மோசமான நபர்கள்?

பதில்: சிரித்து கொண்டே ஆப்பு வைத்தவர்கள். நன்மையை பெற்று கொண்டே விலகி நின்றவர்கள்!

கேள்வி: உங்கள் பலம் மற்றும் பலவீனம் என்ன?

பதில்: கிறிஸ்துவும், அவர் சத்திய வசனமும், அவர் தந்த தரிசனமும் என்னை அங்கீகரித்த நல்ல நண்பர்களும், என்னை அப்படியே ஏற்று கொண்ட பரிசுத்தவான்களுமே

பெலவீனம் உணர்ச்சிவசப்படுதல்

கேள்வி: நீங்கள் கர்த்தர் உங்களுக்கு அதிகம் தர வேண்டும் என்று நினைப்பது?

பதில்: கிருபை, ஞானம், அவர் சமூகம் மற்றும் அவரது வல்லமை.

கேள்வி: உங்கள் சாதனை மற்றும் ஆலோசனை?

பதில்: பரலோகம் சென்ற பிறகு தான் சாதனை என்னவென்று தெரியும்! பரலோகம் செல்வதே ஒரு சாதனை.

பதில்: யாருக்கும் கெடுதல் செய்யாமல், கர்த்தரை நம்பி, அழைப்பில் கவனம் செலுத்தி, பொறுமையோடு அன்பின் ஓட்டத்தை ஓட வேண்டும்.

(பொது நலம் கருதி பெயர் மறைக்கப்படுகிறது, நாம் கற்று கொள்ள அதிகம் இதில் இருக்கிறது என்று கருதுகிறேன்)

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் பயங்கர தாக்குதல்... சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!
ஞாயிறு ஆராதனை நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதி; கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி
தலைமையத்துவ ஒப்பீடு!
வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்
தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுத...
தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர்
கீழ்படியாமையின் விளைவை பாருங்கள்
மாயக்காரன் யார்?
எப்படி துதிக்க வேண்டும்?
இந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.

Share this page with friends