அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்

Share this page with friends

லூக்கா 1:62 “அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.”

1) பேர் வைக்கும் நேரத்தில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது. குழந்தைக்கு தாயானவர் சகரியா என்கிற குடும்பப் பெயரை விட்டுவிட்டு, ” யோவான் “என்று பெயர் வைக்க சொல்லுகிறார். உறவின் முறை யாரில் யாருக்கும் இப்படி ஒரு பெயர் இல்லை என்று சொல்லி தகப்பன் சகரியாவிடம் கேட்கிறார்கள்.

2) தகப்பனுக்கோ வாய்பேச முடியாத நிலை. லுக்கா 1-:21,22 சகரியா ஆராதனை முடித்து வெளியே வரும் போது ஆசீர்வாதத்தை எதிர்நோக்கி இருக்கிற மக்களிடம் அவரால் பேச முடியவில்லை. உள்ளே தூபம் காட்டுகிற இடத்தில் தேவதூதனுடைய தீர்க்கதரிசனத்தை விசுவாசியாதபடியினால் தேவதூதன் அவருடைய வாயை ஊமையாக்கி விட்டார்.
3) இப்பொழுது அவரிடம் எப்படி பேச முடியும்?. எலிசபெத்துக்கு வெளிப்பாடு இருந்ததினால் குழந்தைக்கு “யோவான் ” என்று பெயர் வைக்க சொல்லுகிறார். தகப்பனின் வெளிப்பாடு பற்றி கேட்கிறார்கள்.

4) யூத தகப்பன்மார்களுக்கு எப்பொழுதும் தன்னுடைய குழந்தைக்கு பாரம்பரிய, பரம்பரை பெயரை வைப்பது இயல்பு. பவுல் தன்னை குறித்து சொல்லும் பொழுதும், பிலிப்பியர் நிருபத்தில் தன்னை பென்யமீன் கோத்திரம் என குறிப்பிடுகிறார்.

5) இங்கே ஆசாரியர்கள் ஆராதனை செய்வதற்காக உள்ள 24 வகுப்புகளில் அபியா அல்லது சகரியா என்பதற்கு பதிலாக கோத்திரத்தில் இல்லாத ஒரு பெயரை வைக்கிறார்களே என்று தகப்பனிடம் சைகையில் கேட்கிறார்கள்.

நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :

1) குடும்பம் என்பது தகப்பனும் தாயும் இணைந்து செயல்பட கூடிய காரியம். தாயானவள் குழந்தையை பெற்றெடுப்பதினால் குழந்தைகள் மீது இயற்கையாகவே ஈர்ப்பு அதிகம். ஆனால் அதே சமயத்தில், அந்த அன்பு, தகப்பனின் முடிவுகளை / தீர்மானத்தை/ உறவை மீறியதாக இருக்கக் கூடாது.

2) குடும்பத்திற்கு ஒரு தலைவனாய் இருப்பதற்கு ஆண்டவர் தெரிந்து கொண்டது அந்த குடும்பத்தின் தகப்பனை. அதற்கு துணையாய் இருப்பது மனைவி. கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து சரியான முறையில் குடும்பத்தை வழிநடத்த வேண்டும்.

3) கணவன் தன் மனைவியை, கிறிஸ்து எப்படி சபையை நேசித்தாரோ, அதுபோல நேசித்து வழிநடத்த வேண்டும். மனைவி தன் கணவனுக்கு, கீழ்ப்படிந்து கணவன் சொல்வதைக் கேட்டு, குடும்பத்தை வழிநடத்த கூடியவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு தாய் ஒரு அறிவுரையோ அல்லது முடிவுகளை எடுக்கும்பொழுது, இறுதி முடிவு எடுக்கக் கூடியது தகப்பன்.

4) இந்த முடிவு / முறை சரியானதாக இல்லாததினால் தான் இந்த காலங்களில் அநேக குடும்பங்களில் பிரச்சனை. இன்றைய சூழ்நிலையில் கணவனுக்கு கீழ்ப்படிவது அநேக மனைவிமார்களுக்கு கடினமாய் தோன்றுகிறது.

5) குழந்தைகளுக்கு முன்னே கணவனை குறைத்துப் பேசுவது தவறான காரியம். மனைவியானவள் கணவனை மதிக்கவில்லை என்றால் பிள்ளைகளும் தகப்பனை மதிக்கமாட்டார்கள். மனைவியானவள் கணவனை கணம் பண்ண கூடியவர்களாக இருப்பீர்களா?.

ஜெபம்

வல்ல பிதாவே! இந்த நல்ல நாளுக்காய் நன்றி ஆண்டவரே! விசேஷமாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு சகோதரிகளுக்கும் ஜெபிக்கிறோம். தன் கணவருக்கு மரியாதை கொடுக்கக் கூடிய / கணம் பண்ணக்கூடிய ஒரு காரியத்தை கற்றுக் கொள்ளட்டும். கணவன்மார்களும் மனைவிமார்களை கனவீணமான பாத்திரம் என்று எண்ணி அவர்களை பாதுகாப்பாக, அன்பு செலுத்தி, வழிநடத்தக் கூடிய ஒரு கிருபையில், வழி நடத்த வேண்டுமாய், இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே!, ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.

Luke 1:62 “So they made signs to his father—what he would have him called.”

1) The mother was asking to name her son John. So they were confused since their relatives don’t have that name. So they went forth to ask the father of the child about the name.

2) Since he couldn’t talk, they had to show him the signs. Zacharias wasn’t able to bless the congregation since the angel made him unable to speak because of his unbelief (Luke 1:21,22).

3) Since the mother had a revelation from God about the name to be given to her son, she wanted to name him John. But what’s the revelation that Zacharias had?.

4) Since the Jews pay more attention to keeping or following their traditions, they want to name the child something familiar that runs in their family.

5) In Philippians 3, Paul talked about his genealogy. Since Zacharias comes under the tribe of the priesthood, he should name the child something related to them.

How to apply this verse in our daily life :

1) A husband and a wife or a mother and a father together consist of a family. And so, they should work together no matter what.

2) Since the mother gives birth to the child, she is naturally attached to the child. But it shouldn’t make her make decisions about the child without the permission or knowledge of the father.

3) God made the man head of the house. The woman is a suitable helper for him. Both of them together should lead a family. The man shall love his women the same as Christ loved the church. The woman should respect and obey her man.

4) The final decision should be by the husband or father. Many women nowadays don’t respect their husbands.

5) Sisters, please don’t talk disrespectfully to your spouse in front of your children or anyone. If you don’t respect your spouse then the children also will not give respect to your spouse.

6) Can we be someone who respects/loves our spouses?.

Prayer

Heavenly Father, I pray for all the women who hear this. Lord, help them to respect their husband. And Lord, for the men who are hearing this, help them to honor/love their wife. In Jesus’ name, we pray, AMEN!!.

WCF DD (World Christian Fellowship Daily Devotions)


Share this page with friends