- 113
- 20250223

அன்னாளின் ஜெபம்
- by Bishob. Kenedy
- Tirchy
- 20250215
- 0
- 261
அன்னாள் தனது ஒரே மேன்மையான ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் (லூக் 18:1) பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும். அன்னாளின் ஜெபத்தில் காணபட்ட 15 காரியங்களைக் கைகொண்டு ஜெபித்தால், உங்களுடைய ஜெபத்திற்கு பதில் கிடைப்பது நிச்சயம்
- தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள் (1சாமு 1:9)- எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள் (சங் 34:5).
- தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார் (சங் 11:4) கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும் (1 ராஜா 8:29).
- மனங்கசந்து அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினாள் (1சாமு 1:10).
- சேனைகளின் கர்த்தாவே என்று சொல்லி கர்த்தரை மகிமைப்படுத்தினாள் (1சாமு 1:11).
- தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பாரும் என்று தாழ்மையோடு ஜெபித்தாள். (1சாமு 1:11) (சங் 138:6).
- தன்னை மறவாமல் நினைந்தருளும் படியாக ஜெபித்தாள். (1சாமு 1:11).
- ஆண் மகனைத் தாரும் என்று குறிப்பிட்டு ஜெபித்தாள். (1சாமு 1:11).
- நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று சுய நலமில்லாமல் ஜெபித்தாள். (1சாமு 1:11) (யாக் 4:3)
- அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணி ஜெபித்தாள். (1சாமு 1:11) (சங் 50:13,15).
- கர்த்தருடைய சந்நிதியில் வெகு நேரம் ஜெபம் பண்ணினாள் (1சாமு 1:12). தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.(லூக் 20:47).
- அன்னாள் தன் இருதயத்திலே பேசி, அமைதியாக தனது வேதனையை கர்த்தருக்கு தெரியப்படுத்தி ஜெபம் பண்ணினாள் (1சாமு 1:13) (சங் 4:4). சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்.
- தன்னை மிகவும் துக்கப்படுத்திய பெனினாளின் வாயை அடையும் என்று ஜெபிக்காமல், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மாத்திரம் ஜெபித்தாள். (1சாமு 1:6).
- நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு, “அப்படியல்ல ஆண்டவனே” என்று மிகத் தாழ்மையுடன் கூறி ஊழியக்காரரை கனம் பண்ணினாள். (1சாமு 1:15).
- இருதயத்தின் வேதனைகளை கர்த்தரிடம் ஊற்றி ஜெபித்தாள். (1சாமு 1:15) (சங் 62:8) (சங் 51:17).
- தனது ஜெபம் கேட்கபடும் என்ற விசுவாசத்தோடு ஜெபித்தாள். ஜெபத்திற்கு பின்பு அவள் துக்கமாக இருக்கவில்லை. (1சாமு 1:18)( மாற் 11:24)
Summary
Annal life Prayer