வாலிபர்களை கவரும் பெண் இயேசு

இவள்தான் The National Church of Bey யின் ஸ்தாபகரும், தலைவருமாய் இருக்கிறாள். இவள் ஒரு பிரபல அமெரிக்க சினிமா நடிகை. இவள் பெயர் Beyonce Knowles இவள் உருவாக்கிய ஒரு வேதமும் உண்டு. அதற்கு Beyble என்று பெயர். தன்னுடைய கொள்கைகளை பத்து கற்பனையாக பலகையிலும் எழுதி தனது ஆலயத்தில் நிறுத்தியுள்ளார்.
இவளின் நூதன உபதேசம் Beyism என்று அழைக்கப்படுகிறது. இவளது உபதேசங்கள் அனைத்தும் ஆபாசத்தையும், அருவருப்பையும் வெளிக்காட்டுகிறது. உலகமுழுவதிலும் பல ஆயிரக்கணக்கான வாலிபர்கள் தினந்தோறும் இக்கொள்கையை பின்பற்ற தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். இவளது சொந்த சபையில் இவள் கடவுளின் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறாள். தன்னை இயேசு கிறிஸ்துவை போல சித்தரித்துக்கொண்டு இயேசுவின் வாழ்கை வரலாற்றில் தன்னை இணைத்துக்கொண்டு போலியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஆயிரக்கணக்கான V. I. P. களும், பெரிய பெரிய சினிமா நடிகர்களும் இவளை தங்களது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இவளை தெய்வமாக ஆராதிக்கிறார்கள்! பிறரை கவரும் அழகையும், உணர்ச்சியை தூண்டும் வார்த்தைகளையும், போலியான அற்புதங்களையும் பயன்படுத்தி உலகை தன்பக்கம் கொண்டு வருவேன் என கூறி பேசி வருகிறாள். என்னை வணங்கி பாருங்கள் நன்றாயிருப்பீர்கள் என பகிரங்கமாக கூறும் இவளது வார்த்தைகளினால் அகப்பட்டவர்கள் பல ஆயிரங்கள்.
அன்பு தேவ ஜனமே இது கடைசி காலம். போலியான கிறிஸ்துக்கள் எழும்பி வரும் காலம். இயேசு அங்கே இருக்கிறார். இங்கே இருக்கிறார் என்று சொல்லப்படும் சாத்தானின் தந்திரங்களுக்கு இடம்கொடாதிருங்கள். இப்படிப்பட்ட சாத்தானின் உபதேசங்களுக்கு நமது ஜனங்கள் விலகியிருக்க பாரத்துடன் ஜெபியுங்கள்.வேத சத்தியத்தில் நாமும் வேரூன்றி நிற்க பிரயாசப்படுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக..