ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கொரோனாவுக்கு காரணமா?
ஏலியும் ஏலியின் மக்கள் தான் இந்த கோரோனாவுக்கு காரணமா?
இன்றைக்கு social மீடியாவில் சில அதிமேதாவிகள், இந்த கொரோனா வருவதற்கும், அதினால் சபை பூட்டப் பட்டதற்கும் ஊழியர்களும் அவர்களின் பிள்ளைகளும் தான் காரணம் என்று வசைப் பாடி கொண்டு இருக்கும் போது இவர்களின் அறியாமையை குறித்து என்னத்தை சொல்ல?
அவர்களுக்கு சில கேள்விகள்?
?? இந்த கொரோனா சபையை மட்டும் மூடி விட்டதா? அல்லது எல்லாவற்றையும் முடக்கி விட்டதா?
?? கிறிஸ்தவர்களை அதிகமாக துன்புறுத்தின சீனா இன்று இந்த தாக்கத்தில் இருந்து விடு பட்டு இருக்கிறதே, கொரோனா நாட்களில் கூட அங்கு சபை எப்படி உபத்திரவத்திர்க்குள் சென்றது என்று எல்லாருக்கும் தெரியுமே?
?? பிறரை ஆக்கினைக்குட்படுத்தும் நீங்களும் தானே முடங்கி போய் இருக்கிறீர்கள்? ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பாதிப்பும் உங்கள் சபையின் பாதிப்பும் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லயோ?
?? எத்தனையோ போதகர்கள் தங்கள் நல்ல பிள்ளைகளை ஊழியத்தில் கடைசிவரை பயன்ப்பட்டவர்களை இழந்து போய் இருக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் உங்கள் கண்களுக்கு ஏலியின் மக்களை போன்று தான் தெரிகிறதா? ஏன் நமது north இந்தியாவில் எத்தனையோ பாடுகள் வழியாக ஊழியத்தை செய்து கொண்டு இருந்த எத்தனையோ மிஷனரி ஊழியர்கள் தங்கள் ஜீவனை இழந்து நிற்கிறார்கள்? அது எல்லாம் அவர்கள் செய்த பாவமா?
எனவே, இப்படி சோஷியல் மீடியாவில் பதிவு இடுகிறவர்கள் கவனியுங்கள்!
?? தயவு செய்து பொத்தாம் பொதுவாக ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை நிறுத்துங்கள்.
?? உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட காரியங்களில் உங்கள் ஊழியர்களோடு கசப்புகள் இருந்தால் அதை அவர்களிடம் பேசி சரியாக்குங்கள்.
?? பிறர் மனம்திரும்ப வேண்டும் எங்களுக்கு அது தேவையில்லை என்கிற மனோபாவத்தில் பிறரை குற்றவாளியாக தீர்ப்பதை இப்போதாவது விட்டு விடுங்கள்.
?? அமர்ந்து இருந்து கர்த்தர் யார் என்று அறியுங்கள். ஏலியின் வீட்டு கோளாறு சாமுவேலின் மக்களையும் விட்டு வைக்கவில்லை என்பதையும் அறியுங்கள். அதற்கா நீங்கள் சாமுவேல் என்று நான் உங்களை சொல்லவும் இல்லை.
இப்போது நாம் பொதுவாக என்ன செய்ய வேண்டும்?
A. இதற்கு காரணம் யார் என்கிற ஆராய்ச்சியை விட்டு விட்டு கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அப்படி ஆராய்ச்சி செய்து கேள்வி கேட்ட யோபுவுக்கும் அவர் நண்பர்களுக்கும் கர்த்தர் அவர்கள் கேள்விகளுக்கு கடைசி வரை பதில் கொடுக்க வில்லை.
ஆனால்!.
? யோபு தன் வாயை பொத்தி கொண்டார்.
? தன் நண்பர்களுக்கு வேண்டி ஜெபித்தார் ( எப்படி பட்ட நண்பர்கள் என்பதை வேதத்தில் இருந்து படித்து பாருங்கள்)
? கர்த்தரிடம் கேள்வி கேட்க துணியவில்லை. தான் மனந்திரும்பி கர்த்தர் சர்வ வல்லவர் என்று அறிந்து கொண்டார்.
? கடைசியாக தான் ஒன்றும் இல்லை என்று அறிந்து கொண்டார். ( நீதிமானாக இருந்த யோபுவே தான் ஒன்றும் இல்லை என்பதை அறிந்து கொண்டார் என்றால் நாம் எம்மாத்திரம்)
B. இவைகள் எல்லாம் கர்த்தர் நாம மகிமைக்காக நடக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.
என்ன நடந்தாலும் கர்த்தரே எல்லாவற்றையும் நடப்பிக்கிறார் என்கிற எண்ணம் வரட்டும். அவர் சித்தம் இன்றி எதுவும் நடக்காது. எனவே நம் மூலம் கர்த்தர் மகிமையடைய இடம் கொடுக்க வேண்டும். இந்த சூழலில் நம் பெயர் வர, ஒரு தீர்க்கதரிசி போல நம்மை கற்பனை செய்து கொண்டு எடா கூடாமாக ஏதாவது வெளிப்பாடு என்று சொல்லி, இது அவர் செய்த குற்றம், இவர் செய்த குற்றம் என்று பிரபல்யம் அடைய பிறரை பழி போட்டால் நாம் இயேசு கிறிஸ்துவோடு நடக்கிறவர்கள் என்று சொன்னாலும் கர்த்தர் நம்மை கடிந்து கொள்வார் ஏனெனில் இது அதற்கு உரிய நேரம் இல்லை. நாம் அப்படி மிகவும் கருணை உள்ளவர் எனில் குருடர்களை குணமாக்க முன் வருவோம். ஒன்றில் பிற குருடருக்கு வழி காட்டுவோம் இல்லையெனில் சும்மா ஒதுங்கி இருப்போம். இது பிறருக்காக வெளிப்பாடு சொல்ல வேண்டிய நேரமல்ல அவரவர் வாழ்வில் கர்த்தர் மகிமைப்பட வேண்டிய நேரம். பிறருக்காக நம் போதகர்களுக்காக ஜெபிக்க வேண்டிய நேரத்தில் ஜெபிக்காமல், எச்சரிக்க வேண்டிய நேரத்தில் எச்சரிக்காமல் இப்பொழுது நல்லவர்கள் போன்று கர்த்தர் எங்களோடு பேசினார் என்று சொல்லி சொந்த ஊழியர்களையும் போதக பிதாக்களையும் குற்றம் சாட்டுவது நீலி கண்ணீர் வடிப்பது போன்ற மிக பெரிய மாய்மாலமே!
C. எல்லாரையும் மனம் திரும்ப கனிக்கொடுக்க கர்த்தர் அழைக்கிறார் என்று பொதுவாக பாருங்கள்.
சிலோவாம் மண்டபம் இடிந்ததினாலும் எத்தனையோ பேர் மரித்தார்களே? அவர்களை விட நாம் என்ன நீதிமான்களா? இல்லை கோரோனாவில் மரித்தவர்களை விட நாம் என்ன பரிசுத்தவாங்களா? நமது வீட்டு வாசற்படியில் கூட கொரோனா படித்து கிடக்கிறது. எனவே இந்த சூழலில் என்ன செய்ய வேண்டும்? எல்லாரும் அழுவோம்! எல்லாரும் கதருவோம்! வாருங்கள் எல்லாரும் மனம் திரும்புவோம்! எல்லாரும் பொல்லாத வழிகளை விட்டு விலகுவோம். எல்லாரும் கனி கொடுக்க முன் வருவோம்! பிறர் மேல் பழி போட்டு தப்பி விட யாருக்கும் முடியாதே!
D. நாம் நிர்முலமாகால் இருப்பதே கர்த்தருடைய கிருபை, தயவு என்பதை அறிந்து கொள்வோம்.
நமது நீதி, நமது ஜெபம், நமது வாழ்வு, நமது விசுவாசம், பரிசுத்தம் எல்லாமே கிருபையால் வருவது தான். கிறிஸ்துவும் ஆக்கினைக்கு உட்படுத்தப் பட்டாரே? எதற்கு? அவர் செய்த தவறுக்காகவா? இல்லை நாம் கிருபையை பெறத்தான், அவர் அவமானம், பாரியாசம் நிந்தைகள் அனுபவித்தார். எனவே நமது ஊழியர்கள் இந்த ஆக்கினையின் வழியாக போகிறார்கள் என்றால் நமக்காக கூடவாக இருக்கலாம். ஒரு விசுவாசியின் பிறப்பு முதல் மரணம் வரை, அவர்கள் எல்லா வாழ்வில் துணையாக நிற்கும் ஒரு போதகரையோ குடும்பத்தையோ அற்பமாக எண்ணி, அவர்களது பெலவீனத்தை மட்டும் கருத்தில் கொண்டு இந்த காரியங்களுக்கு எல்லாம் அவர்களை காரணம் கொண்டால், நாம் எப்படியும் தப்பி செல்வோம் என்று எண்ண வேண்டாம். பச்ச மரத்திர்க்கே இந்த பாடு என்றால் பட்ட மரம் என்ன செய்யும்? நீதிமானின் அஸ்திபாரமே அசைக்கப் படும் போது பாவிகளும் துரோகிகளும் என்ன செய்வார்கள்? எனவே கிருபையை சார்ந்து கொள்வோம். மனம் பதறி எதுவும் பேசவோ எழுதவோ வேண்டாம்!
எனவே தயவு செய்து நம் போதகர்கள் குறித்து தேவை இல்லாமல் வீடுகளில், social மீடியாவில் விமர்சனத்தை தவிர்த்து, அவர்களுக்காக ஜெபிக்கும், உதவி செய்யும், பரிந்து பேசும் காரியத்தை செய்வோம். பிறரை குற்றம் சாட்டி இந்த சூழலில் யாரும் தப்ப முடியாது! அவர் வருகிறார் பூமியை உண்மையோடும் நிதானத்தோடும் நியாயம் தீர்க்க வருகிறார்.
செலின்