கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். விளக்கவும்

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். விளக்கவும்

கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 1கொரி 11:30 – விளக்கவும்

பதில்
கர்த்தருடைய பந்தியின் நோக்கம் அறியாமல் பங்கெடுப்பவர்களின் பலனை இந்த வசனம் மிகத்தெளிவாக பிரதிபலிக்கிறது.

கர்த்தருடைய பந்தி எதற்காக?
கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறுவதற்காக. லூக்கா 22:19

அப்பம் பிட்கும் போது :
கிறிஸ்துவின் சரீரத்தில் ஓர் அங்கம் என்பதை நினைவு கூறுகிறோம். 1கொரி 10:16

ஒரே அப்பத்தை பிட்டு பங்கெடுப்பதால் – அநேகரான நாம் ஒரே சரீரமாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமானவர்கள் என்பதை நினைவுகூறுகிறோம். 1கொரி 10:17

நம்முடைய பாவங்களுக்காக ஒரு பாவமும் இல்லாத கிறிஸ்துவானவரின் சரீரம் இரத்தம் சொட்ட சொட்ட அடித்து பிய்த்து காயப்படுத்தப்பட்டது என்று நினைவு கூறுகிறோம். 1கொரி 11:24, மத் 26:26.

திராட்சை ரசத்தில் பங்கெடுக்கும் போது :
இஸ்ரவேலருக்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட மோசேயின் உடன்படிக்கை (நியாயபிரமாணம்) முடிவுற்று, உலகமக்கள் அனைவரும் புதிய உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கும்படியாக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டு புதிய உடன்படிக்கையானது நடைமுறைக்கு வந்து விட்டது என்பதை நினைவு கூறுகிறோம். 1கொரி 11:25, எபி 9:15-20, ரோ 10:4, எபி 8:6-13, எபி 9:17, எபி 12:24.

அந்த உடன்படிக்கையானது எழுத்துக்குரியதாயிராமல் (நியாயபிரமாணம் இல்லை) ஆவிக்குரியதாக இருக்கிறது என்று நினைவு கூறுகிறோம். 2கொரி 3:6

கர்த்தருடைய பந்தியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் :
மற்ற அனைவருக்கும் – கிறிஸ்து மீண்டும் நிச்சயம் வருகிறார் என்பதை வலியுறுத்துகிறோம். 1கொரி 11:26

இந்த கருத்துக்கள் ஒன்றும் உணராமல் – மாதத்தில் ஒரு நாளிலும் வருஷத்தில் தங்களுக்கு இஷ்டமான நாட்களிலும் கர்த்தருடைய பந்தி என்று கலந்து கொண்டே :

ஓய்வு நாளை ஆசரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் !!

நியாயபிரமாணம் ஆசரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் !!

நியாயபிரமாணத்தின்படி தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் !!

அதையும் விட்டுவிடக்கூடாது இதையும் பற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் !!

கிறிஸ்தவராக இருந்தால் அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம் வகிக்கிறவர்கள். கிறிஸ்துவை மாத்தரமே தலையாக கொண்டுள்ளவர்கள். அதாவது மூளையும் செயல்படிவேண்டிய யோசனையையும் கிறிஸ்துவின் போதனை தான். கொலோ 2:10, 18, கொலோ 1:18, எபே 4:15, 6:17, எபே 1:23

கிறிஸ்துவை தலையாக கொண்டுள்ளவர்கள் – அப்போஸ்தலரின் போதனையில் நிலைநிற்பார்கள். மத் 28:20, 2பேது 3:2, கொலோ 1:28.

தேவனுக்கு உரியதான Rev. என்னும் பட்டத்தையும் தங்களுக்கும், அர்த்தம் புரியாமல் தங்களை pastor என்றும் Bishop என்றும் போட்டுக்கொள்ளமாட்டார்கள். சங் 111:9, அப் 20:17-28, 1தீமோ 3:2-7.

அயோக்கியம் என்று அப்பட்டமாக வேதாகமத்தில் போட்டிருந்தும் இக்காலங்களில் அநேக பெண்களும் சபைக்கு முன்பாக நின்று போதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் தங்களை Rev. என்றும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 1கொரி 14:34-35.

தாவீது ஆடினார் நாமும் ஆடவேண்டும் என்கிறார்கள் !! (தாவீது செய்வது எல்லாம் செய்ய துடிப்பவர்கள் – பத்சேபாளின் சம்பவத்தை இவர்களும் செய்ய ஆயத்தமா? )

சிறு குழந்தைகளையும் விட்டுவைக்காமல் – அவர்களை மூழ்கடிக்கிறார்கள் !!

இப்படி ஏராளம் ஏராளமான உபதேச குளறுபடிகள் ஏன்?

வசனம் தெளிவாக இருந்தாலும் – அதை படித்தாலும் வியாக்கியானம் செய்தாலும், ஓங்கி பிரசங்கித்தாலும் – சத்தியத்தை பற்றிக்கொள்ள மனமில்லாமல் தங்கள் விருப்பத்தை பற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைப்பதால் – உணர்வில்லாமல் மரித்திருக்கிறார்கள் !!

ஆம் கொய்மாவோ என்ற கிரேக்க வார்த்தைக்கு ஆழ்ந்த உறக்கம் என்றும் அர்த்தம் !!

ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2தெச 2:11-12 (1ம் வசனத்திலிருந்தே வாசித்துப் பார்க்கவும்)

கிறிஸ்தவம் என்ற பெயரில் களைகள் களைக்கொண்டு வளர்ந்திருக்கிறது. மத் 13:25-29

உரிய நேரத்தில் சத்தியத்திற்கு செவிசாய்த்து மனந்திரும்பாவிடில் அனைவரும் அறுப்பின் காலத்தில் அவர்கள் விருப்பப்படி அக்கினியால் அபிஷேகம் பண்ணப்படுவார்கள். மத் 3:12

இடுக்கமான வாசலைத் தேடுங்கள். மத் 7:13

எடி ஜோயல் சில்ஸ்பி