Why the Four Gospels?

நான்கு நற்செய்தி நூல்கள் ஏன்?

வைரங்கள் வண்ணமயமானது மற்றும் அழகானவைகள். இதை பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும், மேலும் இது ஒவ்வொரு கோணத்திலும் பார்ப்பதற்கு தனித்தனியாக அழகாக இருக்கும். அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வைரத்தை விட அல்லது இந்த உலகில் சிறப்பானது அல்லது தனித்துவமான எதையும் விட விலைமதிப்பற்றவர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் புரிந்துகொள்வது மனித ரீதியாக சாத்தியமில்லை. ஆயினும், நான்கு நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கம்பீரத்தை வெளிக் கொணர முயற்சிக்கிறார்கள்.

1) மத்தேயு:
மத்தேயு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தாவீதின் சந்ததியான மேசியாவாக விவரிக்கிறார். பழைய ஏற்பாட்டு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி, எபிரேய அல்லது யூத மக்களுக்கு இயேசு கிறிஸ்துவை மேசியா என்று அறிவிக்கிறார் (மத்தேயு 9:27; 21: 9).

2) மாற்கு:
பர்னபாவின் உறவினரும், பேதுருவின் நெருங்கிய கூட்டாளியுமானவர் யோவான் மாற்கு (கொலோசெயர் 4:10). அவர் ஆண்டவராகிய இயேசுவை ‘பாடுபடும் ஊழியக்காரன்’ என்று சித்தரித்தார் (மாற்கு 10:45).

3) லூக்கா:
‘பிரியமான மருத்துவர்’ என்றழைக்கப்படும் லூக்காவிற்குள் பத்திரிகையாளன் மனப்பான்மையைக் கொண்டிருந்தார், அவர் கர்த்தராகிய இயேசுவின் தாயார் மரியாளை நேர்காணல் செய்து வம்சாவளியை அறிந்து வெளிப்படுத்தவும் செய்தார் (கொலோசெயர் 4:11). ஒரு புறஜாதிய எழுத்தாளன், ஆண்டவராகிய இயேசுவை ‘மனுஷகுமாரன்’ என்று அறிமுகம் செய்து வைக்கிறார். ரோமானிய சாம்ராஜ்யத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ள ஒரு நபரான மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவிற்கு இது ஒரு நம்பிக்கைகளின் காரணவிளக்க இலக்கியமாக உரையாற்றப்படுகிறது. இந்த மூன்று நற்செய்திகளும் பொருட் சுருக்கமான நற்செய்திகளாகக் கருதப்படுகின்றன.

4) யோவான்:
அப்போஸ்தலனாகிய யோவான் கர்த்தராகிய இயேசுவை ‘தேவனுடைய குமாரன்’ என்றும் ‘கிறிஸ்துவே தெய்வம்’ என்றும் வலியுறுத்துகிறார். மேலும் சிருஷ்டிப்பில் ஆண்டவர் வார்த்தையாக இருந்தார் என அத்தியாயத்தைத் தொடங்குகிறார், “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்கிறார் யோவான் (யோவான் 1:14).

மேலும் யோவான் எழுதுகையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய எல்லாவற்றையும் மனித அறிவைக் கொண்டு புரிந்துகொள்வது சாத்தியமில்லை. சுவிசேஷங்களின் நோக்கம் என்னவெனில்; “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:30,31).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை விசுவாசித்தால் எனக்கு நித்திய ஜீவன் உண்டா?

Rev. Dr. J. N. மனோகரன்,
உயிரூட்டும் மன வெளிச்சம்