முதிர்ச்சியுள்ள நபருக்கு 32 பற்கள் இருப்பதுபோல, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.
முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் அடையாளங்கள்:

 1. அவர்கள் எப்போதும் உண்மையே பேசுபவர்கள்.
 2. அவர்கள் நன்றாக கவனிக்கும் திறன் உள்ளவர்கள்.
 3. எளிதில் கோபமடையமாட்டார்கள்.
 4. உடனே மன்னிக்கும் தன்மை உடையவர்கள்.
 5. நம்பகத்தன்மை உடையவர்கள்.
 6. பிறருக்கு உதவுபவர்கள்.
 7. ஜெபிப்பதற்கும் உபவாசம் இருப்பதற்கும் பசி தாகமுடையவர்கள்.
 8. கர்த்தரின் வார்த்தையை (சார்ந்திருப்பவர்கள்) முற்றிலும் நம்புபவர்கள்.
 9. தேவன் உயர்த்தும் போதெல்லாம் தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்கள்.
 10. தங்களுக்காக வாதாடமாட்டார்கள்.
 11. தவறை உணர்ந்ததும் உடனே மனம் திரும்புபவர்கள்.
 12. சமாதானத்தைத் தேடி கண்டடைபவர்கள்.
 13. மக்களை நேசிப்பவர்கள்;
 14. இரக்க குணமுடையவர்கள்.
 15. எப்போது பேசவேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள்.
 16. வாழ்வின் பல்வேறு துறைகளிலும் ஞானம் நிறைந்தவர்கள்.
 17. மக்களை மதிப்போடு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பவர்கள்.
 18. அவர்கள் முன்கோபியாய் இராமல் மிகவும் பொறுமையுடன் இருப்பவர்கள்.
 19. தெய்வ பயம் உடையவர்கள்.
 20. கனம் பண்ண வேண்டியவற்றிற்கு கனம் பண்ணுபவர்கள்.
 21. தங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி அடைபவர்கள்.
 22. தலைமைத்துவ திறமைகளை உடையவர்கள்.
 23. விருந்தினர்களை நன்கு உபசரிப்பவர்கள்.
 24. அர்ப்பணிப்பின் ஆவியை உடையவர்கள்.
 25. தவறான உபதேசங்களுக்கு ஏமாறாதவர்கள்.
 26. மற்றவர்களை அற்பமாய் எண்ணாதவர்களாயும், வீண் வதந்திகளைப் பரப்புபவர்களாக இருக்கமாட்டார்கள்.
 27. விசுவாசமுடையவர்கள்.
 28. சபை காரியங்களில் ஈடுபடுவதோடு, தவறாமல் சபைக்குச் செல்பவர்கள்.
 29. வாழ்க்கையின் எல்லாப் பகுதியிலும் தூய்மையாய் இருப்பார்கள்.
 30. உணர்வுள்ள ஆவியை உடையவர்களாய் பாவத்தை வெறுப்பவர்கள்.
 31. மற்றவர்களை விட தாங்கள் பரிசுத்தவான்கள் போன்று நடந்து கொள்ளமாட்டார்கள்.
 32. மற்றவர்களோடு போட்டி போடமாட்டார்கள்.

உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்! … நான் ஒரு முதிர்ச்சி பெற்ற கிறிஸ்துவனா? நம் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தேவன்தாமே மிருபை தருவாராக!
These are the outcome of growing closer to the Lord and becoming like him. When we focus on this, the outcome will be obvious.
If we focus on the outcome, there is a possibility of becoming hypocritical.