கொரோனா ஜெபம்

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே இந்த கொள்ளை நோயின் நிமித்தம் உமது நாமத்தை தூசிக்கிறவர்கள் மற்றும் வீணாக வழங்குபவர்கள் மத்தியில் மற்றும் எல்லார் மத்தியிலும் உமது நாமம் பரிசுத்தப் படுவதாக!

இந்த கொள்ளை நோய் வராமல் இருக்க அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்று மக்களை பயமுறுத்தி அந்த தடுப்பூசி, அந்த மருந்து, இந்த ஆலோசனை என்று மக்களை ஆளுகை செய்ய நினைக்கும் ஆளுமையை தாண்டி உம்முடைய ராஜியம் வருவதாக!

பரமண்டலத்தில் இரவும் பகலும் உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், அவர் மூலமாக வாக்குப்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரும் உமது சித்தப்படி வாக்குக்கடங்கா பெருமுச்சோடு எங்களுக்காக வின்ணப்பம் செய்து பரிந்து பேசுவது போல, இந்த பூமியிலும் பரிந்து பேசுகின்ற உமது சித்தம் செய்யப்படுவதாக!

லாக் டவுன் மூலம் வேலையின்றி வீடுகளில் என்ன செய்வது என்று தெரியாமல் தரித்து இருக்கும் எங்களுக்கு வேண்டிய அன்றாட ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்!

வீட்டில் இருந்து கொண்டு எங்களுக்கு எல்லா நிலைகளிலும் கடனாளியாக இருக்கிறவர்களை, பாவம் அவர்கள் இந்த சூழலில் என்ன செய்வார்கள் என்று இரக்கப்பட்டு அவர்களை மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்!

நாங்கள் உமது நாமத்தின் நிமித்தமும், எங்கள் அவசர தேவைக்கு என்று வெளியே போய் வரும் போது எங்கள் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதித்து வீட்டில் இருக்கும் பொழுதும் இந்த virus என்னும் சோதனைக்கு எங்களை உட்படாமலும், எங்கள் கண்களை தீமைக்கும் விலக்கி இரட்ச்சித்தருளும்!

இந்த உலகில் எங்களை சுற்றி என்ன நடந்தாலும் ராஜியமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே என்று அங்கீகரித்து,

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பரம பிதாவே! Amen! Amen!

செலின்