கொரானா கால ஊரடங்கை எதிர்கொள்ளும் போதகர்களுக்கான பதிவு

கிறிஸ்துவில் பிரியமான ஊழியர்களே, மறுபடியும் இந்த கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகின்ற சூழலில் விசுவாச வைராக்கியத்தோடு செயல்படும் நாம் கொஞ்சம் ஞானத்தோடும் செயல்பட வேண்டி இந்த பதிவு ஏனெனில் அநேக போதகர்கள் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைகின்ற சூழல் மிகவும் வேதனை அடைய செய்கின்ற ஒன்றாகும்.

A. இது கர்த்தரே அனுமதித்த ஒன்று எனவே கர்த்தர் தீர்க்கதரிசி மோசேக்கு காட்டின மாதிரியை பின்பற்றி எல்லா விசுவாசிகளை அவரவர் வீடுகளில் தரித்திருக்க செய்யுங்கள். வீட்டு தலைவர்களே மோசேக்கு கர்த்தர் கொடுத்த மாதிரியின் படி எகிப்திலிருந்து (வாதைகளின் கூடாரத்தில் இருந்து) புறப்பட தயாராகட்டும். தேவையில்லாமல் visiting என்று நீங்களே போய் வலையில் சிக்கி கொள்ளாதீர்கள்.

B. அதற்காக விசுவாசிகளை அப்படியே விட்டு விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. Technology கொண்டு அவர்களோடு தொடர்பில் இருங்கள்.

ஒரு குறிப்பிட்ட நேரம் உங்கள் விசுவாசிகளை சந்திக்க online மூலமோ, ஃபோன் மூலமோ, Conference call மூலமோ மீடியா மூலமோ சந்திக்க ஏற்றவகையில் வழிவகை செய்யுங்கள்.

தேவை இல்லாத பிரயாணங்களை தவிருங்கள். எல்லாம் நீங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்காதிருங்கள். சபைக்கு மற்றும் உங்களுக்கு ஏற்ற நிலையில் தேவ சித்தத்தின் படி பொறுப்புகளை பகர்ந்து கொடுத்து அதிக ஜாக்கிரதையாக ஜெபத்தொடு செயல்படுங்கள்.

C. இந்த சூழலில் வீடுகளில் தரித்து இருந்து, மனதளவில், ஆவிக்குரிய காரியங்களில், நம்மை நாமே உயித்து ஆராயிந்து பார்த்து, அடுத்த கட்ட ஊழியம் மற்றும் தரிசனங்கள் நிறைவேற ஆயத்தம் ஆகும் நேரமாக இவற்றை கருத்தில் கொண்டு, refresh ஆகுங்கள்.

Restoration க்கு இடம் கொடுங்கள். சற்று ஒய்ந்து இருங்கள். ஓடி ஓடி ஊழியம் செய்ததற்கு பரிகாரமாக அமர்ந்து இருந்து அவர் யார் என்று அறியுங்கள்.
இந்த சூழலை அப்படியே ஏற்று கொள்ளுங்கள்.

கர்த்தருடைய clear vision என்ன என்று அறியுங்கள். தோல்விகள் வெற்றியாக மாறட்டும். யூகங்கள் சத்தியமாக மாறட்டும். குழப்பங்கள் தெளிவு அடையட்டும். தரிசனங்கள் உறுதியாகட்டும். மனம் பதிதாகட்டும். வாழ்வு மருறுபம் ஆகட்டும். ஆவிக்குரிய எழுச்சி தானாக உருவாகட்டும்.

குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்யுங்கள். சரி செய்ய வேண்டியதை சரி செய்யுங்கள். ஊழியம் ஊழியம் என்று ஓடி, நமது குடும்பங்களோடு மனம் விட்டு பேச விட்டு விட்டதை சரி செய்யுங்கள்.

முன்னாள் இந்நாள் நண்பர்கள் உறவினர்களிடம் மனம் விட்டு பேசி உறவுகளை சீர்செய்யுங்கள். பரிவாக விசாரியுங்கள். நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றுங்கள்.

D. கடைசியாக நமது சரீங்கள் கவனிக்க படட்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நேரத்திற்கு நேரம் சாப்பிடாமல், உபவாசம் என்று இதுவரை இருந்து இருக்கலாம். நன்றாக சாப்பிடுங்கள்.

உணவோடு நமது காலநிலை, நமது இயற்கை மற்றும் புவியல் அமைப்பு சார்ந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். பிற நாட்டினருக்கு பொருந்தும் காலச்சார உணவு பழக்கங்களை விட்டு விடுங்கள். கிராம்பு, நல்லமிழகு, லெமன், இஞ்சி, வசம்பு, ஏலக்காய், சுக்கு, திப்பிலி, வசம்பு போன்றவற்றை உணவில் தேநீரில் சேர்த்து கொள்ளுங்கள். நாட்டு காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள்.

அதிகமாக ஆங்கில மருந்துகளை நம்பி உங்கள் சரீரத்தை கெடுக்காதிருங்கள்.

இது கர்த்தர் தங்கும் ஆலயம் என்று நினைவில் கொண்டு இதற்கும் கர்த்தரே பரிகாரி என்று நம்புங்கள். அவரே வியாதிக்கு வைத்தியர். அவருடைய தழும்புகளால் சுகம் ஆனோம் என்று பிரசங்கித்த நாம் அவற்றின் விடுதலையை பெற அவரது சமூகத்தில் காத்து இருப்போம்.

இந்தியாவின் அடித்த கட்ட சுவிசேஷ நகர்வுக்கு ஒரு சந்ததி எழும்ப வேண்டும். எனவே கரிசனையோடு செயல்பட்டு, கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து இருந்து, பிறரது பாரத்தை நமது பாரம் போல ஏற்று கொண்டு செயல்படுவோம். எப்படியும் மரணமும் அவரது வருகையும் சம்பவிக்க வேண்டியதே ஆனால் பொறுமை, ஞானம், அதோடு நம்பிக்கை, தைரியம் சேர்த்துக்கொண்டு முன்னேறுவோம். இதையும் தாண்டி செல்ல அவர் எப்பொழுதும் நம்மோடு கூட இருக்கிறார். அவர் இன்னும் சர்வ வல்லவர். சிங்காசனத்தில் வீற்று இருக்கிறார். அவரை நெருங்கி, அவரை சார்ந்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை. மனமடிவு அடைவதில்லை. ஏனெனில் கர்த்தருக்கு காத்து இருக்கிறவர்கள் களுகுகளை போல செட்டை அடித்து பறப்பார்கள். ஓடினாலும் நடந்தாலும் சோர்ந்து போக மாட்டார்கள்.

கர்த்தர் கிருபை கூட இருப்பதாக!

செலின்