இயேசு, தமது சீஷர்களோடு கடைசி இராப்போஜன பந்தியை முடித்து ஸ்தோத்திரப் பாட்டை பாடின பின்பு, அவரும் அவரது பதினொரு சீஷர்களும் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் (மத்தேயு 26.30 மாற்கு 14.26). கெத்செமனே (Gethsemane) என்னும் தோட்டம் இந்த ஒலிவ மலையின் சரிவில் அமைந்துள்ளது. இது, கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறத்தில் அமைந்துள்ளது (யோவான் 18.1) இந்த கெதரோன் ஆறு, ஆங்கில வேதாகமங்களில், “சிற்றாறு” (brook | KJV) எனவும், “பள்ளத்தாக்கு (valley – NIV, RSV) எனவும் மலையிடுக்கிலுள்ள ஆழமான ஓடை (raving – Living Bible) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு, கெத்சமனே (Gethsemane) தோட்டத்திற்கு செல்லும் வழியில், இந்த கெதரோன் ஆற்றைக் கடந்து சென்றார் என அப்போஸ்தலனாகிய யோவான் குறிப்பிடுகிறார் (யோவான் 18:1) இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு பஸ்கா பண்டிகையின் காலங்களிலும் எருசலேம் தேவாலயத்தில் மிக அதிக அளவில் ஆடுகள் கொல்லப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்துவின் நாட்களில் பஸ்கா பண்டிகையின்போது ஒவ்வொரு முறையும் ஏறக்குறைய 2,56,000 ஆடுகள் பலியிடப்பட்டதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

தேவாலயத்தில் கொல்லப்பபடும் ஆடுகளின் இரத்தம் பலிபீடத்தின் மேல் ஊற்றப்படும்போது, அது அங்கிருந்து புறப்படும் வாய்க்கால் (channel) வழியாக சென்று கெதரோன் ஆற்றை அடையும் நிலையில் உறைந்து விடும் எனவே வாய்க்கால் முழுவதும் சிகப்பு இரத்த நிறத்தில் தோற்றமளிக்கும். இயேசு, கெதரோன் ஆற்றைக் கடந்து செல்லும் போது, நிலா வெளிச்சத்தில் அந்த காட்சியை கண்டவாறு சென்றிருக்க வேண்டும். அப்போது அந்த காட்சி நிச்சயமாக அவர் மனதில் தாம் மனுக்குலத்தின் பாவத்திற்காக பலியாகப்போகிறோம் என்ற சிந்தனை எழும்பியிருக்கும்

கெத்சமனேயில் இயேசு இரத்த வேர்வை சிந்தினார்

கெத்சமனே (Gethsemane) என்ற பெயருக்கு “எண்ணைச் செக்கு” (oil press) என்பது பொருள்.

அந்த இடத்தின் பெயருக்கு ஏற்ப இயேசு அங்கே ஆத்துமாவில் பிழியப்பட்டார். அங்கே அவர் முகங்குப்புற விழுந்து, அதிக ஊக்கமாய் ஜெபித்தார். அவர் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார் (எபிரேயர் 5:7). இயேசு ஜெபத்தில், என் பிதாவே, இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று மூன்றுமுறை ஜெபம் பண்ணினார் (மத்தேயு 26:39,42,44; மாற்கு 14:36,39, லூக்கா 22:42) “அப்பா” (Abba) என்ற பதம் அரமேயு (Aramaic) மொழியில், “என் பிதாவே” (my father) என பொருள்படும் ஒரு குழந்தை, தன் தகப்பனை “அப்பா என அன்பாக அழைப்பதுபோல, இயேசு, தேவனை நோக்கி, “என் பிதாவே” (my father) என அழைத்து தேவனது சித்தத்துக்கு தம்மை முழுமையாக அர்பணித்தார்.

இயேசு, சிலுவை மரணத்தைக் கண்டு அஞ்சி அதிலிருந்து விடுதலை பெற பிதாவை நோக்கி, இப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுத்தார் என நாம் ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது இயேசு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தார் (எபிரேயர் 10:7). அவர் தம்முடைய தெய்வீகத்தை துறந்து, முழு மனிதனாகவே இந்த உலகத்தில் வந்தார் (பிலிப்பியர் 2:5-8). மட்டுமல்ல, முழு மனிதனாகவே, தம்மை பாடுகளுக்கும், அவமானத்துக்கும், நிந்தனைக்கும் சிலுவை மரணத்துக்கும் ஒப்புக் கொடுத்தார். தமக்காக மாம்சீக வைராக்கியம் காண்பித்த பேதுருவை, கடிந்து கொண்ட இயேசு, அவனைப் பார்த்து, பிதா எனக்குக் கொடுத்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ? என்றார் (யோவான் 18:11) மேலும், இயேசு, பிதாவை நோக்கி ஏறெடுத்த ஜெபத்தில், ‘இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது. நான் என்ன சொல்லுவேன், பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன் பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார்.. (யோவான் 12:27,28) இயேசு தமது சிலுவை மரணத்தில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார் இயேசு பிதாவை நோக்கி ஏறெடுத்த விண்ணப்பத்தில் “பாத்திரம்” (cup) என குறிப்பிடுவது பிதாவை விட்டு பிரியும் அகோர நிலையை” குறிப்பதாய் உள்ளது பிதா, ஒருபோதும் தன் குமாரனை தனியே இருக்க விடுவதில்லை (யோவான் 8:29) ஆனால் இப்போது, பாவமற்ற பரிசுத்தராகிய இயேசுவின் மீது, மனுக்குலத்தின் பாவங்கள் அத்தனையும் சுமத்தப்படும் போது அவர் பாவமாக்கப்படப்போகிறார் (2 கொரிந்தியர் 5:21). அந்த நேரத்தில் பிதாவின் முகம் இயேசுவுக்கு மறைக்கப்படபோகிறது. பாவ இருள் இரட்சகரின் ஆத்துமாவை சூழ்ந்து கொள்ளும்போது, அவரால் பிதாவை காண முடியாது அந்த நிலை, நினைத்துப் பார்க்க முடியாத அகோர வேதனையை தரக்கூடியதாகும். இயேசு, பிதாவை விட்டுப் பிரிந்து அகோரமான அந்தகார வேளைக்குள் பிரவேசிக்கும் நிலைதான் பாத்திரம்” (cup) என கருதப்படுகிறது. எனவேதான் இயேசு, என் பிதாவே, இந்த பாத்திரம் (cup) என்னை விட்டு சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார் (மத்தேயு 26:39, மாற்கு 14:36 லூக்கா 22:42). இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிதாவை விட்டு பிரிந்த, அந்த மூன்று மணி நேர அகோர வேதனைக்குப் பின்னர், பிதாவை நோக்கி, என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் (மத்தேயு 27:46, லூக்கா 15:34) என கூறிய வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய ஜெபவேளையில் அவருடைய வேர்வை, இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது (லூக்கா 22:44). இந்த உண்மையை மருத்துவராகிய லூக்கா பதிவு செய்துள்ளதால் இதில் ஆழமான மருத்துவ உண்மை அடங்கியிருக்கிறது ஒருவர் தாங்க முடியாத மன அழுத்தத்துக்குள் (under extreme mental pressure) கடந்து செல்லும்போது சிலவேளைகளில் அவரது இரத்த நாளங்கள் வெடித்து இரத்தமானது வேர்வைத் துவாரங்களின் வழியாக வேர்வையோடு கலந்து வெளியேறும். இயேசுவுக்கு இது நேரிட்டது. அவர் தாங்கமுடியாத மனவேதனைக்குள் கடந்து சென்றார் என்பது உண்மை.