சின்னச் சின்ன செய்திகள் 6

பிரசவ வேதனையை மட்டுமே அறிந்து வைத்திருந்த பெனின்னாளுக்கு அன்னாளின் இதய வேதனை எப்படித் தெரியும்?

பெனின்னாளின் நாவு ஒரு சிறிய நெருப்பு . காட்டையே கொளுத்திவிடும். வீட்டை விட்டுவைக்குமா? 

அன்னாளின் நாவு சிறியதொரு படகின் துடுப்பு. மதியில்லாத முன்னவளின் நெருப்பு, வீட்டைக் கொளுத்திவிட துடித்தபோது,  புத்தியுள்ள பின்னவளின் துடுப்பு, அந்த நெருப்பைக் கடந்து, கரையைக் கண்டுவிட்டது. பகையைக் கொன்றுவிட்டது. பரிசுத்த சமுகத்திலிருந்து  கேட்டதை (சாமுவேலை) பெற்றுக் கொண்டுவிட்டது.


சிலரின் நாவு நெருப்பாகக் கொழுந்துவிட்டு எரியும் போது, அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது ஜெபித்து, எரியும் நெருப்பையும் அவித்துவிட வேண்டும்.

இன்றைய தேவை நெருப்புள்ள நாவுகள் அல்ல. குடும்பத்தைக் கரைசேர்க்கத்  துடிக்கும் பொறுப்புள்ள நாவுகளே!

அன்னாள்களின் எண்ணிக்கை அதிகமானால், சாமுவேல்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ஆலயங்கள் நிரம்பிவழியும். வம்புகளும் வழக்குகளும் குறைந்துவிடும்.  

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், மதுரை -14