சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்பிவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளில்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.
(வெளி : 20 : 3)

இதோ சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே வருகிறது. (வெளி : 22 : 12). இந்தக் குறிப்பில் மனிதனின் கிரியைகளைக் குறித்து நாம் சிந்திக்க போகிறோம். பெரும்பாலும் மனிதன் தமது கிரியைகள் தவறாகச் செய்து கொள்ளுகிறார்கள். வேதத்திலுள்ள சில கிரியைகளை நாம் இதில் சிந்திக்கலாம். கிரியை என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம்.

1. மனிதனது கிரியை பிறருடைய பொறாமைக்கு ஏதுவான கிரியை (பிர : 4 : 4)

2. மனிதனது கிரியை அந்தகாரக் கிரியை (எபே : 5 : 11)

3. மனிதனது கிரியை சுயக் கிரியை (கலா : 6 : 4)

4. மனிதனது கிரியை மாம்சத்தின் கிரியை (கலா : 5 : 19)

5. மனிதனது கிரியை செத்த கிரியை (எபி : 9 : 14)

6. மனிதனது கிரியை பொல்லாத கிரியை (1 யோவா : 3 : 12)

7. மனிதனது கிரியை துர்க்கிரியை (2 யோவா : 1 : 11, கொலோ : 1 : 21, பிர : 8 : 11.)

8. மனிதனது கிரியை அவபக்தியான கிரியை (யூதா வசனம் 14)

9. மனிதனது கிரியை மதசம்பந்தமான கிரியை (வெளி : 2 : 6)

10. மனிதனது கிரியை ஜாதிகளின் கிரியை.

11. மனிதனது கிரியை செம்மையான கிரியை (நீதி : 21 : 8)

12 மனிதனது கிரியை நற்கிரியை (மத் : 5 : 16 , 26 : 10, ரோமர் : 2 : 7 எபே : 2 : 10)

இந்தக் குறிப்பில் மனிதன து கிரியைகளைக் குறித்து நாம் சிந்தித்தோம். இதில் மனிதனுக்கு தேவையான முக்கிய கிரியை செம்மையான கிரியையும் , நற்கிரியையும்செய்ய வேண்டும். அவனவன் கிரியைகளுக்கேற்ப பலன்உண்டு என்று வேதம் சொல்கிறது. மற்றதவறான கிரியைகளை புறம்பே தள்ளி நாம் செம்மையான கிரியையும், நற்கிரியையும் செய்வதற்கு நம்மை நாம் ஒப்புக் கொடுத்து தேவனை மகிமைப் படுத்துவோம். உங்கள் கிரியைக்கு பலன் உண்டு. தேவன் உங்கள் கிரியைகளுக்கேற்ப பலன் தருவாராக.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.