பாதை மாறச்செய்த போதை! (வித்யா’வின் சமுகப் பார்வை)

பாதை மாறச்செய்த போதை! (வித்யா’வின் சமுகப் பார்வை)

செர்பியா நாட்டின்
WHITE CITY
என்று அழைக்கப்படும்
பெல்கிரேட் பகுதியில்
உள்ள பள்ளியில்
நடத்தப்பட்ட துப்பாக்கி
சூட்டில் சிக்கி
எட்டு குழந்தைகள்
மற்றும் காவலர்
இன்றைக்கு (03.05.2023)
உயிரிழந்த சம்பவம்
துயரத்தை ஏற்படுத்தி
இருக்கிறது.
 
இந்த சம்பவம் தொடர்பாக
14 வயது சிறுவனை
போலீசார் விசாரணைக்கு
அழைத்து சென்றுள்ளனர்
.
 
14 வயது சிறுவன்
தனது தந்தையின்
துப்பாக்கியை
பயன்படுத்தி
துப்பாக்கி சூடு நடத்தி
இருக்கலாம் என்று
கூறப்படுகிறது.
 
படிப்பில் நல்ல கவனம்
செலுத்தி வந்த மாணவர்
போதை பழக்கத்தில்
இவ்வாறு செய்திருக்கலாம்
என்று தகவல்கள்
வெளியாகி உள்ளன.
 
வாலிபன் தன் வழியை
போதைக்கு மாற்றிவிட்ட
காரணத்தால்
வெள்ளை நகரம்
என்று அழைக்கப்படும்
பெல்கிரேடில்
கறுப்புச் சம்பவம்  ஒன்று
நடைபெற்றிருக்கிறது,
இரத்த ஆறு ஓடியிருக்கிறது!


டீன் ஏஜ் வாலிப மகன் மேல்
‘கண்’ வைக்கத் தவறிய,
தகப்பனின் ‘GUN’
அப்பாவிக் குழந்தைகள்
மற்றும் காவலரை
காலாவதியாக்கிவிட்டது!

பரிசுத்த பவுல் எழுதிய
வார்த்தைகளைத்
திரும்பிப் பார்க்கவேண்டிய
நேரம் இது!
 
‘’மேலும், கடைசிநாட்களில்
கொடியகாலங்கள் வருமென்று
அறிவாயாக
’’ (2 தீமோத்தேயு 3:1)
 
“But know this, that in the last days
perilous times will come”

இளம் தீமோத்தேயுவுக்கு
முதிர்ந்த பவுல் எழுதிய
இந்த நிருபத்தில்


கொஞ்ச நேரம் நின்று  
(2 தீமோ. 3: 1 முதல் 5 வரை)
அவசியம் வாசித்து
அழுதுவிட்டுச் செல்!


தேவ ஜனமே
இப்படிப்பட்ட
இளம் வாலிபர்களை
இனம் கண்டுகொண்டு
ஜெபிக்க மறவாதே!

அசம்பாவிதங்களைத்
தடுத்து நிறுத்தும்
ஜெபம் என்னும் ஆயுதம்
முழங்கால் என்னும் ஆயுதம்
இரண்டுமே

உன்னிடம்தான் உண்டு!

DEVICE வேண்டாம்
ADVISE வேண்டும்

போதை வேண்டாம்
போதனை வேண்டும்

துன்மார்க்கம் வேண்டாம்
ஜீவமார்க்கம் வேண்டும்

பணம் வேண்டாம்
குணம் வேண்டும்
 
அசுத்தம் வேண்டாம்
பரிசுத்தம் வேண்டும்
 
என்று சொல்லும்
யோசேப்புகள் வேண்டும்!
 
எட்டு ஆண்டுகளுக்கு முன்
எழுதிய

அந்த இளைஞனை போல்
ஆகிவிடு! 


என்ற எனது
கவிக் கட்டுரையை
வாசிக்க வேண்டுகிறேன்.
 
இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
கர்த்தரின் எழுத்தாணி /
நல்லாசான்  
91-77080 73718