யோவான் 19:19 “பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.”

1) ரோமர்களின் வழக்கப்படி ஒரு குற்றவாளியை சிலுவையில் அறைந்தார்களானால், அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை சிலுவையின் மேல் எழுதி வைத்திருப்பர். ஊருக்கு வெளியே அவரை சிலுவையில் அறைந்ததால், அந்த வழியாக போகிறவர்கள் வாசிக்கும் போது பயம் ஏற்பட வேண்டும்.

2) ரோமர்களுக்கு விரோதமாக யாராவது கிளம்பினால், இப்படித்தான் நடக்கும் என்பதை காட்டும்படியாக, இயேசு கிறிஸ்துவிற்கு, பிலாத்து ஒரு விலாசம் போடுகிறார். ” நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா”, இவர் மீது என்ன குற்றம்?…இவர் யூதருக்கு ராஜா, இராயனுக்கு எதிராய் வந்ததினால் இவரை கொலை செய்கிறோம் என்பதாக எழுதுகிறார்.

3) ஆனால், அவர் யூதருக்கு ராஜா என்பதை யூதர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யூதருக்கு ராஜா என்று அவர் சொன்னதாக எழுதுகிறார்களே தவிர, அவரை யூதருக்கு ராஜா என்று ஏற்றுக் கொள்ளவில்லை. பிலாத்துவுக்கு இயேசு கிறிஸ்து குற்றமற்றவர் என்று தெரியும். அதனால் தான், அவரை விடுதலை செய்ய வகை தேடுகிறார்.

4) யூதர்கள் பிலாத்துவிடம் இயேசு கிறிஸ்துவை விடுதலை செய்தால், நீர் இராயனுக்கு விரோதி என்கிறார்கள். எனவே, பிலாத்து யூதர்களை கேலி செய்யும் விதமாக, அதே சமயத்தில் ஆண்டவரை பற்றிய உண்மையான வாசகத்தை “யூதருடைய ராஜா” என்று எழுதி வைத்தார். அவர் மரிக்கும் போது குற்றவாளிகளோடு இருந்தாலும், யூதர்களின் ராஜாவாக மரிக்கிறார்-யோவான் 19:12, மத்தேயு 27:37

நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது

1) தன்னுடைய மக்களை இரட்சிப்பதற்காக சர்வத்தையும் படைத்த சர்வத்தையும் தாங்குகிறவாராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வருகிறார். அவரை பொய்யான குற்றச்சாட்டு சொல்லி அவரை சிலுவையில் அறைகிறார்கள்.

2) ஆனால், இயேசு கிறிஸ்து யார் என்பதை அறியாத, விசுவாசியாத ஒரு அந்நியர் மூலமாக அவர் யார் என்பதை எழுத வைத்த தேவ ஞானத்தை இங்கே பார்க்கிறீர்களா? பிலாத்துவுக்கு இயேசுகிறிஸ்து யார் என்று தெரியாது. அவரை விசுவாசிக்கவில்லை. ஒரு தேசத்தின் ஆளுநரை கொண்டே இயேசு கிறிஸ்து யார் என்கிற சத்தியமான வெளிப்பாட்டை தேவன் கொண்டு வருகிறார்.

3) ஆனால், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து தங்களை அர்ப்பணித்து அதற்கென்று வாழ்ந்த யூதர்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை.

4) தேவனுடைய ஞானம் எல்லாவற்றையும் சரியாய் ஆளுகை செய்கிறது. நமக்கு எதிராக செய்கிறவர்/ உதவி செய்பவர்கள் / நம்மை சிலுவையில் அறைகிறவர்கள் / தூஷணம் பேசுகிறவர்கள், யாராக இருந்தாலும் எல்லாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றி, தம்முடைய நோக்கத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றக் கூடியவர் நம் தேவன்.

5) பிலாத்து மூலமாக தேவன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூதருக்கு மாத்திரமல்ல, ராஜாக்களுக்கெல்லாம் ராஜா. யூதர் அல்லாத ஒரு தேசாதிபதியின் மூலமாக இயேசு கிறிஸ்து, ” யூதருக்கு ராஜா” என்று வெளிப்படுத்துகிறார். தேவன் யாரை கொண்டாகிலும் தமது திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கும் எனக்கும் வேண்டும்.

ஜெபம்

வல்ல பிதாவே! இந்த நாளிலே நாங்கள் மிகவும் தெளிவாக நேர்த்தியாக அழகாக புரிந்து கொண்டோம். யாரை கொண்டும் உம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவீர் என்று புரிந்து கொண்டோம். ஆண்டவரே! எங்களுக்கு நல்ல ஒரு பிரகாசமுள்ள மன கண்களைத் தந்து,. அதை நாங்கள் புரிந்து அறிந்து வாழ எங்கள் தேவன் எங்களுக்கு கிருபையும் இரக்கமும் பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.

John 19:19 “Now Pilate wrote a title and put it on the cross. And the writing was: JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS.”

1) The Roman soldiers used to write the sin on the cross who has been sentenced for crucifixion.

2) This was done for the public to read and be aware of the Romans soldiers authority over people and to bring fear.

3) This was also to give a message to the public that if anyone is against the Roman empire and soldiers, they also will be sentenced brutally this way. This is to bring fear about the Romans soldiers among the people.

4) Pilate had written a title and put it on the cross that “JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS”.

5) Jews did not accept Jesus as their King. But Pilate could not find any fault in Jesus. That is the reason Pilate tried to release Jesus. We can study in John 19:12 about this.

6) But Jews said to Pilate that if Pilate releases Jesus then he is against the King Caesar. To which Pilate made fun of the Jews by purposefully writing on the cross that Jesus is the King of Jews-Matthew 27:37.

How to apply this verse in our daily life

1) Jesus was crucified on the cross which is one of the most awful things. The One who created everything and the One who is sovereign over everything of this world and who is the saviour of all people was accused by the people.

2) We can see God’s wisdom in this situation that the one who does not know who Jesus is, the one who does not believe Jesus has written who Jesus is really on the cross.

3) Pilate who neither knew Jesus, nor believed Jesus has written the writing on the cross that Jesus is the King of the Jews. But Jews who knew who the Messiah was, who believed God, who had submitted their life and living for the Messiah did not understand this truth of who Jesus was.

4) Even in our day today life, even when people are speaking against us, we ought to believe that God will change it for good to fulfil HIS divine plans and purposes in our life. Not only that God has made known Jesus as the King of the Jews but also as the King of the kings to mankind.

5) From this we can learn that God can fulfil His divine plans and purposes through any one in this world.

Prayer

Dear Heavenly Father, we have learnt today very clearly that You will fulfil your divine plans and purposes through any one in this world Lord. Father please open the eyes of our heart to understand and live this truth for Your Glory. We bless and pray in the Name of Lord Jesus Christ Amen. May God bless you!.

WCF DD (World Christian Fellowship Daily Devotions)