மேலும் லாபன் கூறியது

மேலும் லாபன் கூறியது

ஆதியாகமம் 29:26 “மேலும் லாபன் கூறியது, மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல”.

லாபனின் நேர்மையின்மையை நாம் மன்னிக்கவில்லை.ஆனால் அவர் மேற்கோள் காட்டியது அந்த ஊரின் நடைமுறை வழக்கம் ஆகும்.

நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு ஒன்று உள்ளது. இரண்டாவதாக நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலாவதாக உள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும்.

இரண்டாவது நிகழ்வுகள் பார்வையில் அழகாக இருக்கலாம். ஆனால் பரலோக நாட்டின் ஆளுகை நிலை நிற்க வேண்டுமென்றால்,மூத்தவள் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பல ஆண்கள் அழகாகவும் நன்றாகவும் இருக்கும் ராகேலாகிய மகிழ்ச்சியும், சமாதானத்தையும் அடைய ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் மனந்திரும்புதலாகிய கூச்சமான பார்வையுடைய லேயாளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை நேசிக்கிறார்கள். பலர் அதை அனுபவிக்க இரண்டு ஏழு வருடங்கள் மகிழ்ச்சியுடன் சேவை செய்வார்கள். ஆனால் கர்த்தருடைய ராஜ்யத்தின் ஆளுகையின்படி, உண்மையான பரிசுத்தமாகிய லேயாளை நம் ஆத்மாவில் கொண்டிருக்க வேண்டும். அப்போது உண்மையான மகிழ்ச்சியாகிய ராகேலை அடைய முடியும்.

பரலோகம் முதலாவதாக இல்லை. ஆனால் இரண்டாவது மற்றும் இறுதிவரை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே அதில் ஒரு பகுதியை வெல்ல முடியும்.

கிரீடம் அணிவதற்கு முன்பு சிலுவையை சுமக்க வேண்டும்.

நம்முடைய கர்த்தர் அடைந்த பாடுகள் மற்றும் அவமானத்தில் நாம் அவரைப் போல பங்கு கொள்ளவேண்டும்.

உழைப்பு இல்லாமல் வெகுமதியும் இல்லை. உழைப்பு இல்லாமல் மரியாதையும் இல்லை.

மேபி சுந்தர் இந்தியா