வாக்குப்பண்ணப்பட்ட
வரப்போகும் மேசியா’வைப்
பற்றிய பாடமே

ANNA’ வுக்குப் பிடித்தமான
SUBJECT.
 
அன்றைய நாட்களில்
அவருக்கு சொந்தமாக  
வேதம் இல்லை!
அப்படி கிடைத்தாலும்
அதை வாங்கி
வைத்துக்கொள்ள
அன்னாள் தீர்க்கதரிசியிடம்
பணவசதி ஏதுமில்லை!
 
புருஷனோடு
ஏழு வருஷம் மட்டுமே
வாழந்து, பின்னர்
தனி மரமாக்கப்பட்ட
அந்த அம்மையார்
மேசியாவைப் பற்றிய
தீர்க்கதரிசனச் செய்திகளை
காதால் கேட்டு
அதை இருதயத்தில் வைத்து
பல்லாண்டுகளாக
பாதுகாத்துவந்தார்.
அன்னாளுக்குப் பிரியமான
பாடம் வாக்குப்பண்ணப்பட்ட
மேசியா!

 
அன்னாளுக்கு பிடித்தமான
புத்தகம்
மல்கியா, அதிலே 3:1 -ல்
“இதோ நான் என் தூதனை
அனுப்புகிறேன்,
அவன் எனக்கு முன்பாகப் போய்,
வழியை ஆயத்தம்பண்ணுவான்;
அப்பொழுது நீங்கள் தேடுகிற
ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற
உடன்படிக்கையின் தூதனுமானவர்
தம்முடைய ஆலயத்துக்குத்
தீவிரமாய் வருவார்;
இதோ, வருகிறார் என்று
சேனைகளின் கர்த்தர்
சொல்லுகிறார்”.
 
தோராயமாக கொஞ்சம்
பணம் கொடுத்து 
தோராவை
வாங்கமுடியாவிட்டாலும் 
மேசியாவைப் பற்றிய
தீர்க்கதரிசனங்களை
உள்வாங்கி இதயத்தில்
எழுதிவைத்துக்கொண்டு

 
இயேசு பிறந்து எட்டாம் நாளில்
யோசேப்பும் மரியாளும்
அவரை எருசலேம்
தேவாலயத்திற்குள்
கொண்டுவந்தபோது
எண்பத்திநாலு வயதுடைய
அன்னாள் தீர்க்கதரிசி
ஆலயமே என் சரணாலயம்
என்று சொல்லி
 
மேசியாவுக்காக காத்துக்கிடந்த
அந்த தனி மரம்
இல்லை இல்லை
கனிமரம்
ANNA  அம்மையார்
வந்து நின்று
கர்த்தரைப் புகழ்ந்து,
எருசலேமிலே மீட்புண்டாக
காத்திருந்த யாவருக்கும்
அவரைக் குறித்துப் பேசினாள்

 
இயேசுவின் முதலாம் வருகையில்
மேசியாவைப் பற்றிய
வாக்குத்தத்த செய்தியை
வேதத்தைத் திறந்து,
இல்லை இல்லை
இதயத்தைத் திறந்து
பிரசங்கித்தவர்
ANNA அம்மையார்
 
இந்த ஒரே
ஒரு பிரசங்கத்தைச் செய்ய
அரை நூற்றாண்டுகளாக
ஆலயத்திலேயே காத்திருந்தார்கள்
என்பதை இங்கே பதிவுசெய்ய
விரும்புகிறேன்.
அடிக்கடி ஆலயம்
மாறுகிற பழக்கம்
ANNA அம்மையாரிடம்
இல்லை என்பதையும்
இங்கே பதிவுசெய்ய
விரும்புகிறேன்.

 
இயேசுவின் முதலாம்
வருகை வரை
ஒரே ஆலயம்
ஒரே தரிசனம்
ஒரே நோக்கம்
 
ANNA அவர்களுக்கு
அரசாங்கமோ 
ஆலய நிர்வாகமோ
எந்தவித உதவி தொகையும்
கொடுக்கவில்லை!
பென்ஷனும் இல்லை
எந்தவித
டென்ஷனும் இல்லை!

 
தேவாலயமே என்
சரணாலயம் என்று
ஆலயத்திலேயே
ஐம்பது ஆண்டுகளுக்கு
மேலாக தங்கியிருந்த
அந்த ஆலய புறா
இயேசு பிறந்த
எட்டாவது நாளில்
ஆலயத்திற்குள் அவர்
கொண்டுவரப்பட்டபோது
சிறகடித்துப் பறந்தது.

(லூக்கா 2:36-38)
Pastor J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director – Literarature Dept. tcnmedia
Radio Speaker – Aaruthal FM
(Monday to Thursday daily at 06:00 a.m.)